வியாழன், 10 ஜூன், 2010

கனவே!


வாழ்க்கையே கனவா
கனவுதான் வாழ்க்கையா
கனவுகள் பல விதம்
வாழ்க்கையே தனிவிதம்!

பகலிலும் கனவு
கனவிலும் ஆசை
நிறைவேறா ஆசைகள்
கனவிலும் நடக்காதா?

காலங்கள் வேகமாய் ஓடும்
கனவுகள் விதம் விதமாய் மாறும்
நனவாக ஆகும் முன் சாகும்
கனவினால் இதயமே நோகும்!

உயிரின்றி சாவா?
கனவின்றி வாழ்வா?
காண்பதெல்லாம் மெய்யா?
மற்றதெல்லாம் பொய்யா?

நான் காணும் கனவுகள்
நனவாக மாறாதா?
கற்பனைக் கவிதைகள்
உயிர்ப்பெற்று வாழாதா?

4 கருத்துகள்:

சி. கருணாகரசு சொன்னது…

கனவு பலிக்க வாழ்த்துக்கள்.

logu.. சொன்னது…

\\பகலிலும் கனவு
கனவிலும் ஆசை
நிறைவேறா ஆசைகள்
கனவிலும் நடக்காதா?\\

Aasaigal irunthaalthane..
Asaigale illamal vazhnthu parungal.
it's great life.

Kavithai nallarukku pavans.

தேவன் மாயம் சொன்னது…

எல்லோருக்கும் உண்டு கனவு!! உங்கள் கனவு கவிதை அசத்தல்!!

Tamilvanan சொன்னது…

//நான் காணும் கனவுகள்
நனவாக மாறாதா?//

மாற‌ட்டும், வாழ்த்துக்க‌ல்

//கற்பனைக் கவிதைகள்
உயிர்ப்பெற்று வாழாதா?//

உங்க‌ள் க‌விதைக‌ளா? த‌ய‌வு செய்து வேண்டாம். இப்ப‌வே துக்க‌ம் தொண்டைய‌ அடைக்குது.