வியாழன், 2 ஜூன், 2011

எதற்கு வாழ்கிறேன்?






யாரிடத்தில் சொல்வேன்


யார் தோளில் சாய்வேன்

யார் மடியில் துயில்வேன் –நான்

யாரிடத்தில் அழுவேன்?



இன்று மட்டும் அனுமதி

கொஞ்சம் அழுது கொள்கிறேன்

இனி எனக்கு எங்கே நிம்மதி?

நான் தொலைந்துப் போகிறேன்!



கனவு கண்டு கனவு கண்டு

வாழ்ந்துப் பார்க்கிறேன் –நான்

நிஜத்தினிலே மனமுடைந்து

மரித்துப் போகிறேன்!



கதைக்கக்கூட துணையுமின்றி

கூண்டில் வாழ்கிறேன் –பிறர்

சிரிக்க வைத்து உள்ளுக்குள்ளே

அழுது தீர்க்கிறேன்!



வேதனையைத் தாங்கிக்கொண்டு

வெளியில் சிரிக்கிறேன் –நான்

தன்னந்தனியே அமர்ந்துக்கொண்டு

கதறி அழுகிறேன்!



காலை மாலை தினமும் உன்னை

நினைத்து உருகிறேன் -நான்

வலிகள் தாங்கி சுமைகள் தாங்கி

எதற்கு வாழ்கிறேன்?