செவ்வாய், 10 பிப்ரவரி, 2009

எங்கே செல்லும்…? (11)


ஆனால், கவிதா விசயத்தைக் கூறிய மறு நிமிடமே முகிலனின் முகம் மாறியது. “அடப்பாவி…!” என்று தன்னையும் மீறி கூறிவிட்டான். அப்படி அவன் வாய் பிளக்கும் அளவிற்குக் கவிதா கூறியது இதைதான்.

“எனக்கு அந்தப் பையனை ரொம்பெ பிடிச்சிருக்கு. அவருக்கும் என்னைப் பிடிச்சிருக்கான்’னு நீதான் கேட்டுச் சொல்லனும். ப்பிளீஸ்… நீதான் எனக்கு ஹெல்ப் பண்ணனும்.”

இதனைக் கேட்டப் பிறகுதான் முகிலனின் முகம் மாறியது. “அடிப்பாவி! நான் உனக்கு மாமா பையன் தான். அதுக்கு’னு என்னை ‘மாமா’ வேலைப் பார்க்கச் சொல்றியா?” என்று நொந்துக்கொண்டான்.

“என்ன’லா இப்படிச் சொல்ற? உன்னைப் போய் அப்படி நினைப்பேனா? எனக்கு யார்கிட்ட போய் கேட்கிறது’னு தெரியல. நீங்க ரெண்டு பேரும் ஒரே ஸ்கூல் தானே? உ னக்குத் தான் அவரைப் பத்தி நிறைய தெரியும். சோ, ப்பிளீஸ் எனக்காக செய்யேன். நாளைக்கு உனக்கு ஏதாவது ஒன்னுன்னா நான் தானே உதவி பண்ணனும்?” என்று கெஞ்சாதக் குறையாகக் கேட்டாள் கவிதா.

கவிதாவைப் பார்க்க முகிலனுக்கு வேடிக்கையாக இருந்தது. அவள் பேச்சும் செயலும் அவனுக்குப் புதுமையாக இருந்தது. வயது வித்தியாசம் அதிகமில்லாத காரணத்தினால் இது இயற்கையான விசயம்தான் என்று புரிந்துக்கொண்டான்.

“ஹ்ம்ம்… நான் போய்ட்டு நேரடியா அவன்கிட்ட கேட்க முடியாது. ஜாடை மாடையா கேட்டுப் பார்க்கிறேன். ஆமா, உனக்கு எப்படி அவனைத் தெரியும்?” என்று வினவினான்.

கவிதா போட்டி விளையாட்டுத் தொடங்கி, கோவில் வரை நடந்த அனைத்தையும் அவனிடம் சொல்லி முடித்தாள்.

“ஓ, அதுதான் கதையா. சரி, சரி. நான் கேட்டுட்டு உன்கிட்ட சொல்றேன்,” என்றான் முகிலன். சிறிது நேரம் உரையாடிவிட்டு அவனும் வீட்டுக்குச் சென்றுவிட்டான். ஐங்கரனைப் பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள போகிறோம் என்ற ஆவலில் கவிதா சந்தோஷ வானில் சிறகடித்துப் பறந்தாள்.

முகிலனிடமிருந்து தகவலை எதிர்ப்பார்த்துக் காத்திருந்தாள். இரண்டு வாரம் கழித்து முகிலன் மீண்டும் பாட்டி வீட்டிற்கு வந்தான்; நல்ல செய்தியோடு!

“கவி, ஐங்கரன் உங்கிட்டப் பேசணுமாம். எப்ப பார்க்கலாம்’னு கேட்டான்,” என்றான். கவிதாவிற்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை!
“நான் எப்படி’லா பார்க்கிறது? சித்தப்பா, மாமா யாராவது பார்த்தா என்ன ஆவறது? கஷ்டம்’லா… நீ பார்க்க முடியாதுன்னு சொல்ல வேண்டியது தானே?” என்றாள்.

“ஏய், என்ன விளையாடுறியா? அன்னைக்கு நீ தானே அவனைப் பிடிச்சிருக்குன்னு கேட்ட?”

“ஆமா, கேட்டேன். ஆனா, எப்படிப் பார்க்கிறது? நம்ம குடும்பத்தைப் பத்திதான் உனக்குத் தெரியுமே? சாதரணமா ஒரு பையன்கிட்ட பேசுனாலே பாட்டுப்பாட ஆரம்பிச்சுடுவாங்க…” என்று இழுத்தாள்.

“இப்ப ஐங்கரன் கிட்ட நான் என்ன சொல்லனும்?”

“கடுப்பாகாத! எனக்கே என்னப் பண்றது’னு தெரியல…” என்று குழம்பினாள் கவிதா. முகிலன் எதையோ யோசித்தான்.

“ஹேய், நீ ‘சாட்’ பண்ணுவே தானே?” என்று கேட்டான்.

“ஆமா!”

“அப்படினா, நான் அவனை உன் கூட ‘சாட்’ பண்ணச் சொல்றேன். நீ என்னைக்குச் சாட் பண்ணுவேனு சொல்லு. நான் அவன்கிட்ட சொல்லிடுறேன்.”

“ஐய்ய்யோ…உனக்குக் கூட மூளை வேலை செய்யுது! தாங்ஸ் முகி. நான் வெள்ளிக்கிழமை சாட் பண்றேன். நீ ஐங்கரன்கிட்ட சொல்லிடு. ஒகே’வா?”

“சரி,” என்றான் முகிலன்.

கவிதா மிகவும் மகிழ்ச்சியாகப் பொழுது போக்கினாள். அனைவரிடமும் கலகலப்பாகப் பேசினாள். வீட்டு வேலைகளைத் தானே இழுத்துப் போட்டுக்கொண்டு செய்தாள். ஐங்கரனை மனக்கண் முன் கொண்டு வர முயற்சி செய்தாள். இருப்பினும் பாதியிலேயே அவன் உருவம் கலைந்துப் போனது. அதனால் தன்னைத் தானே நொந்துக்கொள்ளவும் செய்தாள்.

அவள் ஆவலோடு எதிர்ப்பார்த்திருந்த வெள்ளிக்கிழமையும் வந்தது. பள்ளி முடிந்து ஆவலோடு கணினி மையத்திற்குச் சென்றாள். ஐங்கரன் இன்னும் ஆன்லைனில் வரவில்லை. காத்திருந்தாள்…

தொடரும்…

12 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

\\ஆனால், கவிதா விசயத்தைக் கூறிய மறு நிமிடமே முகிலனின் முகம் மாறியது. “அடப்பாவி…!” என்று தன்னையும் மீறி கூறிவிட்டான். அப்படி அவன் வாய் பிளக்கும் அளவிற்குக் கவிதா கூறியது இதைதான்.

“எனக்கு அந்தப் பையனை ரொம்பெ பிடிச்சிருக்கு. அவருக்கும் என்னைப் பிடிச்சிருக்கான்’னு நீதான் கேட்டுச் சொல்லனும். ப்பிளீஸ்… நீதான் எனக்கு ஹெல்ப் பண்ணனும்.”\\

ஹையோ ஹையோ

இது தெரியாத எங்களுக்கு

நட்புடன் ஜமால் சொன்னது…

\\அடிப்பாவி! நான் உனக்கு மாமா பையன் தான். அதுக்கு’னு என்னை ‘மாமா’ வேலைப் பார்க்கச் சொல்றியா?\\

ஹா ஹா ஹா

முதல் முறையாக இந்த பதிவில் சிரிக்கிறேன்.

நட்புடன் ஜமால் சொன்னது…

\\கவிதாவிற்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை!\\

ஆஹா அப்புறம் எப்படி அடுத்த ஓட்டத்தில் ஓடுவது.

நட்புடன் ஜமால் சொன்னது…

\\“அப்படினா, நான் அவனை உன் கூட ‘சாட்’ பண்ணச் சொல்றேன். நீ என்னைக்குச் சாட் பண்ணுவேனு சொல்லு. நான் அவன்கிட்ட சொல்லிடுறேன்.”\\

பாதை மாறும் போல இருக்கே ...

து. பவனேஸ்வரி சொன்னது…

வணக்கம் ஜமால்,

//ஹையோ ஹையோ

இது தெரியாத எங்களுக்கு//

தெரிஞ்சுப் போச்சா??

//ஹா ஹா ஹா

முதல் முறையாக இந்த பதிவில் சிரிக்கிறேன்.//

நல்லா சிரிங்க. வாய்விட்டுச் சிரிச்சா நோய் விட்டுப் போகும்னு சொல்வாங்க.

//பாதை மாறும் போல இருக்கே ...//

பாதை மாறினாலும் மாறலாம். மாறாமலும் இருக்கலாம்...ஹஹஹா...

உங்கள் கருத்துகளுக்கு நன்றி ஜமால்.

புதியவன் சொன்னது…

//இதனைக் கேட்டப் பிறகுதான் முகிலனின் முகம் மாறியது. “அடிப்பாவி! நான் உனக்கு மாமா பையன் தான். அதுக்கு’னு என்னை ‘மாமா’ வேலைப் பார்க்கச் சொல்றியா?” என்று நொந்துக்கொண்டான்.//

முதன் முதலில் உங்கள் எழுத்துக்களில் நகைச்சுவை உணர்வை காண்கிறேன்...

புதியவன் சொன்னது…

//என்ன’லா இப்படிச் சொல்ற?//

மலேசியத் தமிழ்...?

புதியவன் சொன்னது…

காதல் நடையில் கதை செல்கிறது...தொடருங்கள்...காத்திருக்கிறோம்...

Divyapriya சொன்னது…

ஹ்ம்ம் நவநீதன் என்ன ஆனான்? அந்த நவநீதன் தான் இந்த ஐங்கரன்னு மட்டும் சொல்லிடாதீங்க….இன்னும் எத்தனை பகுதி? எப்ப முடியும்?

RAJMAGAN சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
து. பவனேஸ்வரி சொன்னது…

வணக்கம் புதியவன்,

//முதன் முதலில் உங்கள் எழுத்துக்களில் நகைச்சுவை உணர்வை காண்கிறேன்...//

உங்களுக்குப் பிடித்திருந்தால் இன்னும் அதிகமான நகைச்சுவை உணர்வை சேர்க்க முயற்சிக்கிறேன்.

////என்ன’லா இப்படிச் சொல்ற?//

மலேசியத் தமிழ்...?//

ஆமாங்க, ஏற்கனவே சொன்ன மாதிரி மலேசியத் தமிழில்தான் கதைத் தொடர்ந்து செல்லும். எங்கள் பேச்சு வழக்கையும் மற்றவர் அறிந்துக்கொள்ள வேண்டும் அல்லவா?

//காதல் நடையில் கதை செல்கிறது...தொடருங்கள்...காத்திருக்கிறோம்...//

செல்கிறதுதான், ஆனால் எங்கே செல்கிறது என்றுதான் தெரியவில்லை... உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி.

து. பவனேஸ்வரி சொன்னது…

Divyapriya கூறியது...
//ஹ்ம்ம் நவநீதன் என்ன ஆனான்? அந்த நவநீதன் தான் இந்த ஐங்கரன்னு மட்டும் சொல்லிடாதீங்க….இன்னும் எத்தனை பகுதி? எப்ப முடியும்?//

இப்பதான் கதையே ஆரம்பிச்சிருக்கு. அதுக்குள்ள எப்ப முடியும்னு கேட்கிறீங்களே? 'அரசி' நாடகத் தொடர் மாதிரி எப்ப முடியும்'னு எனக்கே தெரியலைங்க. நவநீதனைக் காணவில்லை. என்ன ஆச்சுன்னு எனக்கும் தெரியவில்லை. கண்டுப்பிடித்தால் கொஞ்சம் கதைப் பக்கம் வரச் சொல்றேன். உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.