வியாழன், 11 ஆகஸ்ட், 2011

என்ன வித்தியாசம்?



இந்தியாவிலிருந்து வந்தவர்களையும் இந்தியன் என்கிறான். மலேசியாவில் பிறந்து வளர்ந்தவனையும் இந்தியன் என்கிறான். உண்மையில் இந்தியன் என்பவன் யார்? பிரிட்டிஷ் காலகட்டத்தின் போது இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்டவர்களே இந்தியர்கள். இந்தியர் என்று சொல்லும் போது அவற்றுள் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகியவற்றைத் தாய்மொழியாகக் கொண்டவர்களும் அடக்கம். அதே போல், அன்றைய காலக்கட்டத்தில் சிலோன் (தற்போதைய ஸ்ரீ லங்கா) நாட்டிலிருந்து வந்தவர்களை சிலோனிஸ்ட் என்று அழைத்தனர்.

இவ்வாறாக இந்தியா, ஸ்ரீ லங்கா நாடுகளிலிருந்து வந்தவர்களை வெள்ளையர்களும், மலாய்க்காரர்களும் வித்தியாசம் தெரியாமல் பொதுவாக, இந்தியன் என்றே அழைத்து வந்தார்கள். சிலோனிலிருந்து வந்தவர்களில் சிலர் மட்டும் (இன்றுவரையில்) தங்களைச் சிலோனிஸ்ட் என்று அடையாளப்படுத்தி வருகின்றனர். வெள்ளையனும் மலாய்க்காரனும் தெரியாமல் செய்த பிழையை நாம் ஏன் தெரிந்தே செய்ய வேண்டும்?

நம் முன்னோர் இந்தியாவிலிருந்து வந்ததினால், அவர்களை பொதுவாக இந்தியன் என்று அழைத்ததன் கூற்றை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியும். அதே வேளை, மலேசியாவில் பிறந்து, வளர்ந்து, மலாய் மொழியை தேசிய மொழியாகவும், தேன் தமிழ்மொழியைத் தாய் மொழியாகவும் கொண்ட எம்மை இந்தியன் என்று அடையாளப்படுத்துவது எந்த வகையில் நியாயம்?

எம் தாயின் கருவில் தோன்றிய போது எம் தாயும் தந்தையும் பேசிய மொழி தமிழ்மொழி. எனவே, கருவாக இருக்கும்போதே நான் தமிழனாக உருப்பெற்றேன். எமது தாய் எம்மை மலேசிய மலைநாட்டில் பிறசவித்தாள். எனவே, நான் மலேசியனாகிறேன். தமிழ்மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட நான் மலேசியாவில் பிறந்ததால் மலேசியத் தமிழச்சியானேன். ஈழத்தில் பிறந்திருந்தால் ஈழத்தமிழச்சியாயிருப்பேன். இலண்டனில் பிறந்திருந்தால் இலண்டன் தமிழச்சியாகியிருப்பேன். இதுவே, இந்தியாவில் பிறந்திருந்தால் எம்மை இந்தியன்/ இந்திய தமிழச்சி என்று அழைப்பதில் நியாயமுள்ளது. தமிழனாக உருப்பெற்று மலேசியனாகப் பிறந்த எம்மை இந்தியன் என அடையாளப்படுத்துவது முறையா?

அவ்வாறு அடையாளப்படுத்துவதால்தான் இன்றும் சில பேர் நம்மை இந்தியாவிற்குத் திரும்பிப் போ என்று சொல்கிறார்கள். நாம் மலேசியத் தமிழ்/ மலேசியத் தெலுங்கு/ மலேசிய மலையாளம் என்று சொல்லி வந்திருந்தால், மற்றவர்களுக்கும் நமது தாய்மொழி என்னவென்று தெரிந்திருக்கும், நமக்கு இந்த நாட்டில் உரிமை கூடியிருக்கும். இப்போதாவது உண்மை உணர்ந்து நம்மை நாம் மலேசியத் தமிழன் என்று அடையாளப்படுத்துவோமா?

இந்திய நாட்டிலிருந்து நம் நாட்டிற்கு வருபவர்களை இந்தியன் என்று அழைக்கிறோம். நம்மையும் இந்தியன் என்று அடையாளப்படுத்துகிறோம். அப்படி என்றால், நமக்கும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம்? நாம் இந்தியாவிற்குச் செல்லும் போது, ஒருவரும் நம்மை இந்தியன் என்று அழைப்பதில்லையே? மலேசியத் தமிழா என்று தானே கேட்கின்றனர். அப்பொழுதும் நம்மில் பலரால் ஏன் இந்த உண்மையை உணரமுடிவதில்லை?



                                           -மலேசியத் தமிழச்சி

8 கருத்துகள்:

Luxman.S சொன்னது…

be cair full.. i think your Singalish.. tamilions live in srilanka sine 3000years..

பெயரில்லா சொன்னது…

தமிழன் எங்கு போனாலும் இது அவனை தொடரும் ஒரு நிழல் தானே ..

அகவே ...நான் ---> நாங்கள் ஆக மாற நாங்கள் ---> நாம் ஆக மாறவேண்டும்

இதற்கு பிரிவுகள் ஏற்படுதுதால் ஒரு திர்வகது.....


tamillan angu ponalum ithu avanai thodarum oru nilall thane..

agave...nan ---> nangal aga maranangal---> naam aga maravendum

ithatku perivugal atpaduthuthaal oru thirrvagathu..........

chandrasekaran சொன்னது…

குழப்பமேன் பிறப்பால் மலேசியன் வம்சத்தால் இந்திய தமிழச்சியாக உலகமுழதும் உள்ள நடைமுறை எல்லா நாடுகளிலும் வம்சவழி குறிப்பிடுவது இயல்பு

Wayang Kulit Malaysia சொன்னது…

நாம் இந்திய வம்சாவளியினர். இனத்தால் தமிழர். சமயத்தால் ஹிந்து. இந்நாட்டில் பிறந்த நாம் பொதுவாக இப்படி தான் இருக்கிறோம். அனால் இங்கு தெலுங்கர்களும் மலையாளிகளும் உள்ளனர். இப்படி நாம் நான் தமிழ், நீ தெலுங்கு, நீ மலையாளி என பிரித்து பார்க்க ஆரம்பித்தால் இன்னும் சிரும்பான்மையிராய் ஆகி விடுவோம். அதனால்தான் இங்கு வம்சாவளி இனத்தை குறிப்பிடும் ஒரு வார்த்தையை மாறிவிட்டது.

THEENA சொன்னது…

நீங்கள் எழுதியவை முற்றிலும் உண்மை.இந்தியன் என்ற அடையாளம் அதனுள் அடங்கும் பல மொழிகள் பேசும் இனங்களை முடக்குகின்றன.மலேசியா தமிழர்களில் பாதிக்கும் மேட்பட்டவர்களுக்கு தனது இனம் என்ன என்பதையே அறியாமல் வாழ்கின்றனர்.இனத்திற்கும் மதத்திற்கும் வேறுப்பாடு தெரியாமல் வாழ்கின்றனர்.தாய் மொழியே இனத்தை உருவாகுகிறதென்ற புரிதலை நாம் ஏற்படுத்த வேண்டும்.இனம் மொழி சார்ந்தது,மதம் சார்ந்தது அல்ல என்ற உண்மையை தமிழர்களிடையே உணர்த்த வேண்டும். உங்கள் தளத்தில் இது போன்ற விழிப்புணர்வு தொடர எனது ஆதரவு தொடர எனது வாழ்த்துக்கள்.

viki சொன்னது…

nalla karuthu..keep it up..valga namme malaysia india samuthayam.....

Senthamizh Selvan சொன்னது…

முற்றிலும் சரி....

G.Paary சொன்னது…

yes i agree.....but dont u think that identifying us by telugu, tamil or malayalam will create borders between us? just my doubts :)