வெள்ளி, 9 ஜூலை, 2010

வாழ்க்கை சலித்துவிட்டதுஉலகமே இருண்டு விட்டதைப் போல்
காற்று நின்று விட்டதைப் போல்
அனைவரும் என்னை வெறுப்பது போல்
உள்ளுக்குள் ஓர் உணர்ச்சி!

மெய்யா பொய்யா? புரியவில்லை
மதியற்ற பெண்ணா? தெரியவில்லை
எல்லாமே கற்பனையா? தெளியவில்லை
என்று தீருமோ? அறியவில்லை!

வாழும் வாழ்க்கை வெறுத்துவிட்டது
சிரித்த சிரிப்பு மறந்துவிட்டது
நிம்மதி அனைத்தும் தொலைந்துவிட்டது
உணர்ச்சிகள் எல்லாம் மறத்துவிட்டது!

சாலையில் திரியும் நாயைப் போல்
சாக்கடையில் விழுந்த பூனையைப் போல்
மழையில் நனையும் மாடைப் போல்
மதிப்பற்ற வாழ்க்கை வாழ்கிறேனோ?

வாடி வதங்கிய செடியாய்
நைந்து நூலான சேலையாய்
கசக்கிப் போட்ட குப்பையாய்
உயிருள்ள பிணமாய் நான்!

சாகும் நாட்களை எண்ணி
எமனின் வரவை எதிர்ப்பார்த்து
ஆவலுடன் காத்திருக்கிறேன்
வாழ்க்கை சலித்துவிட்டதால்!

4 கருத்துகள்:

soundr சொன்னது…

//என்று தீருமோ? அறியவில்லை!//

அறியவில்லை...

சரியான சொற்தேர்வல்ல என்று எண்ணுகிறேன்..

http://vaarththai.wordpress.com

ஆண்டாள்மகன் சொன்னது…

கடை களைகட்ட ஆரம்பிச்சிருக்கு

Tamilvanan சொன்னது…

//சாகும் நாட்களை எண்ணி
எமனின் வரவை எதிர்ப்பார்த்து
ஆவலுடன் காத்திருக்கிறேன்
வாழ்க்கை சலித்துவிட்டதால்!//

வேண்டுமானால் நானே எமானாய் வ‌ருகிறேனே? எப்ப‌டி வ‌ச‌தி?

logu.. சொன்னது…

\\எவ்வளவு விசாலமாய்
பயணித்தாலும்
திரும்பி வரவே முடியாத
ஒற்றையடிப்பாதை..
வாழ்க்கை.\\

Rasithu vazhungal..
Boomi nammudaiyathu.

Intha mathiri padamellam podatheenga..
Manusanukku Bayamarukkuthu..