புதன், 12 மே, 2010

பொய் வேண்டாம்


பொய்மை வேண்டாம்
காதலில் பொய்மை வேண்டாம்
பொய் என்பது போலி
உண்மையே என்றும் நிஜம்
காதல் உண்மையானால்
அதனுள் எதற்குப் பொய்?

நீ ஒவ்வொரு முறை
பொய் சொல்லும் போதும்
அவ்வளவுக்களவு நம் காதலின்
உண்மைக் குறைகின்றது!

உண்மை குறையும் போது
நாமும் நம்மை அறியாமலேயே
ஒருவர்க்கொருவர் கொஞ்சம் கொஞ்சமாக
விலகிக் கொண்டிருக்கின்றோம்!

நமது இந்த விலகல்
நிரந்தர பிரிவிற்கு
இழுத்துச் செல்லும் என்பதை
ஒருநாளும் மறவாதே
உண்மைக் காதலில்
பொய் பேசாதே!

6 கருத்துகள்:

~~Romeo~~ சொன்னது…

வாய தொரந்தாலே பொய் பேசுறவங்களும் இந்த லிஸ்ட்ல வருவாங்களா ??

logu.. சொன்னது…

mmm..

vendamthan.

A N A N T H E N சொன்னது…

காதலின் சுவாரசியமே பொய் சொல்லி கவர்வதுதானே....?

து. பவனேஸ்வரி சொன்னது…

வணக்கம்.

ரோமியோ: கண்டிப்பாக...

லோகு: வேண்டவே வேண்டாம் :)

அனந்தன்: பிறகு வாழ்க்கையே பொய்யாகிவிடும், பரவாயில்லையா?

Tamilvanan சொன்னது…

//உண்மைக் காதலில்
பொய் பேசாதே!//

இனிமேல் எல்லோரும் பொய்க் காத‌லில் உண்மை பேசுவோம்.இப்ப‌ ச‌ந்தோச‌மா?

kabilan சொன்னது…

tamil eezathai padriya kavithai neenggal vaasithu paarthirukkiren aanaal unggal agapakkathil eezathai padriya vali theriyavillaiye ?