செவ்வாய், 19 மே, 2009

யாரடா இறந்தது?


சிங்கம் மடிந்துவிட்டதாம்
ஓநாய்கள் ஊலையிட்டு அறிவிக்கின்றன!
சிங்கத்தை நெருங்கமுடியாமல்-அதன்
பாதுகாப்பில் இருக்கும் உயிரினங்களை
அடித்துத் தின்ற ஓநாய்கள்;
பிணம் தின்னும் வெறிநாய்கள்;
மலம் தின்னும் பன்றிகள்;
தமிழனை ஏய்க்கப் பார்க்கின்றன!

யாரடா மடிந்தது?
தன்னுயிரை துச்சமெனக் கருதி
தமிழ் மானத்தைக் காக்க வந்தனா?
தமிழர்களுக்கு பாதுகாப்பு அளித்தவனா?
திமிழீழம் கேட்டு போராடுபவனா?
எதிரிக்கும் இரங்குபவனா?
யாரடா இறந்தது?

இராவணன் பிறந்த மண்ணில்
தாய்மொழி பேசக்கூடாதா?
தனிநாடு கேட்கக்கூடாதா?

சுட்டுவிட்டாயா?
என் அண்ணனை,
தமிழ் மன்னனை சுட்டுவிட்டாயா?
வதந்தியைப் பரப்பும் வெட்கம்கெட்டவர்களே,
நிஜம் வெகும் தூரம் இல்லை
உந்தன் பின்னங்கால்கள் முதுகில் மோத
தலைதெறிக்க ஓடப்போகிறீர்கள்!

எனது தமிழ் சகோதரிகளின் கால்களில்
உயிர்பிச்சைக் கேட்டு கதறப்போகின்றீர்
எமது இன இளைஞர்களைக் கண்டு
அலறியடித்து பறக்கப்போகின்றீர்
உலகெல்லாம் தமிழ்மொழி ஒலிக்கக் கேட்டு
மண்டை வெடித்துச் சாகப்போகின்றீர்!

வதந்தியா பரப்புகின்றாய்?
கோழை இராணுவமே கேள்!
உன் ஆணவம் விரைவில் அடங்கும்
எமது தலைவன் இறந்தாலும்
அவன் வளர்த்துவிட்ட இளம் தலைவர்கள்
எமது தமிழினத்தில் அதிகமடா!
பொறுமைக்கும் எல்லை உண்டு
உன் வெறியாட்டத்திற்கு முடிவுண்டு!

10 கருத்துகள்:

கிருஷ்ணா சொன்னது…

உங்கள் கவிதை, சோகம் தோய்ந்த என் இதயத்துக்கு ஒரு தற்காலிக மருந்தானது.. நன்றி!

சதீஸ் கண்ணன் சொன்னது…

nalla padaippu.

பெயரில்லா சொன்னது…

Intha Ulagathil Suriyanai Thottavanum illai.Thalaivar Prabakaranai Suttavanum illai.

( Nile Raja )

குமரன் மாரிமுத்து சொன்னது…

உங்கள் படைப்புகள் நாளுக்கு நாள் மிளிர்கின்றன.

ஈழத்தில் எம் சகோதரர்கள் சொந்த மூலையை உபயோகிக்கின்றனர்; மொக்கச் (முட்டாள்) சிங்களத்தானோ அறிவையும் இரவல் வாங்குகின்றான்.

அதனால் போர் களத்தில் கோட்டைவிட்டதை மூடி மறைக்க பிரபாகரனை சுட்டு வீழ்த்திவிட்டதாக புரளியைக் கிளப்பிவிட்டிருக்கின்றனர்.

பிரபாகரனுக்கு மரணம் இல்லை.

தீப்பெட்டி சொன்னது…

உங்களின் கோபத்தின் தீவிரத்தை திறமையாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்..

பெயரில்லா சொன்னது…

வா பகையே… வா…
வந்தெம் நெஞ்சேறி மிதி.
பூவாகவும் பிஞ்சாகவும் மரம் உலுப்பிக் கொட்டு.
வேரைத் தழித்து வீழ்த்து.
ஆயினும் அடிபணியோம் என்பதை மட்டும்
நினைவில் கொள்!”

ஆயிரம் வீரர்கள் தீயினில் போயினர்
ஆயினும் போரது நீறும், புலி
ஆடும் கொடி நிலம் ஆறும்.
பேயிருள் சூழ்ந்திடும் கானகம் மீதினில்
பாசறை ஆயிரம் தோன்றும், கருப்
பைகளும் ஆயுதம் ஏந்தும்.
மத்தளம், பேரிகை, கொட்டு புலிப்படை
மாபெரும் வெற்றிகள் சூடும், அந்த
சிங்கள கூட்டங்கள் ஓடும்.

Paaya Theriyum.Pathunga Theriyum.Payapada Theriyaathu.

Intha Ulagathil Suriyanai Thottavanum illai. Thalaivar Prabakaranai Suttavanum illai.

( Nile Raja )

நான் சொன்னது…

உங்கள் நியாயமான கோபமும் அதில் இருக்கும் உண்மையும் மிகவும் பெரிது உங்களுக்கு ஒரு பதிவு நல்ல அருமையாக எழுதுகிறார்
http://aalamaram.blogspot.com/

சுப.நற்குணன்,மலேசியா. சொன்னது…

அன்பின் பவனேசு,

24-5-2009இல் பினாங்கு, பட்டர்வெர்த்தில் நடந்த ஈழ ஆதரவுக் கூட்டத்தில் ஏறக்குறைய ஆயிரம் தமிழர்கள் முன்னிலையில் நீங்கள் மேடையில் அரங்கேற்றிய இந்த உரைவீச்சு அனைவருடைய உள்ளத்திலும் கண்டிப்பாக இடம்பிடித்திருக்கும்.

மக்கள் வழங்கிய பலத்த கரவொலியெ அதற்குச் சான்று..!

பினாங்கு துணை முதல்வர் மாண்புமிகு பேராசிரியர் இராமசாமி அவர்களின் முன்னிலையில் உங்களைக் கொண்டுபோய் நிறுத்திய தமிழச்சியின் வீரத்திருமகளாய் உங்களை அந்த நிகழ்ச்சியில் கண்டேன்.

தலைவர் பிரபாகரன் ஈழமண்ணில் மட்டுமல்ல, கடல்கந்தும் பெண் போராளிகளை உருவாக்கி உலக வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார் என்பதற்கு நீங்களும் ஒரு சான்றுதான்.

உங்கள் துணிவுக்கும் தெளிவுக்கும் தலைவணங்குகிறேன்.

தொடர்ந்து எழுதுக.. தோழி!

தமிழ் மரபியல் கட்டுக்கோப்புகளை உடைத்துக்கொண்டு வெளியே வருவதுதான் பெண் விடுதலை என்ற பொய் மாயைக்குள் சிக்கிக் கொள்ளாமல், தமிழிய உணர்வோடும் தமிழ் மரபியல் ஒழுங்கோடும் பெண்ணியத்தை முன்னெடுத்துச் செல்லுங்கள்..!

பெண்ணியம் - பெண் விடுதலை என்ற பெயரில் பெண்ணினத்தைக் கேவலப்படுத்தும் ஆண்கள் பலருடைய வஞ்சக குணத்தை வெட்டி வீழ்த்துங்கள்!

பெண்ணியம் - பெண் விடுதலை என்ற பெயரில் பெண்ணினத்தைக் கேவலப்படுத்தும் பெண்கள் சிலருடைய அறியாமையைச்
சுட்டிக் காட்டுங்கள்!

உங்களின் எழுச்சியும் வளர்ச்சியும் உங்கள் எழுத்துகளில் ஆங்காங்கே ஒளிந்துகொண்டு தலையாட்டுகின்றன.

வாழ்க நீவீர்.. என் தமிழ் உடன்பிறப்பே..!!

A N A N T H E N சொன்னது…

//உன் வெறியாட்டத்திற்கு முடிவுண்டு!//

Nichayamaa undu...!

பெயரில்லா சொன்னது…

பிரபாகரனே!
என் தலைவனே
என்னை ஈன்று எடுக்கா தாயே! தளபதியே!

உன் போராட்டம் ஆரம்பமாகிற போது- பிறக்கவில்லை நான்
பிறந்திருந்தால் உன்னுடன் போர்க்களம் புகுந்திருப்பேன்

என் கட்ட விரல் வாயில் இருக்கும் போது- உணரவில்லை நான்
என் இனத்திற்காக ஒரு எரிமலை எழுந்திருக்கிறது என்று !
அறியா வயதில் உன் முதல் மரண நாடகத்தை கேட்டேன்
அப்போதும் நான் நம்பவில்லை
என் இனத்தின் ஆலமரம் சாய்ந்ததென்று

இரண்டாம் முறையாக உன் மரணத்தைக் கேட்க
என் செவிகளே மறுத்துவிட்டன

உணர்ந்தேன்..... உணர்ந்தேன்
நீயே என் தொப்புல் கொடி உறவு என்று...

உணர்ந்தேன்....... உணர்ந்தேன்
இந்தியா என் நாடல்ல... ஈழம் தவிர வேறு ஏதுடா பிறந்த நாடு...
நெஞ்சம் பொறுக்கவில்லை..
அங்கே என் உறவு மடிகின்ற செய்தி கேட்டு...

என் உடன் பிறவா புலிகளே..
என்னை அழைத்துச் செல்லுங்கள் உங்களுடன்..
நானும் போராடுகிறேன் உங்களுடன்...
கவிதைக்காக இல்லை மேலேயுள்ள வரிகள்...

சிங்கள ராணுவமே காத்திரு...
புலிகளை அழித்து விட்டோம் என்ற ஆணவம் வேண்டாம்....
ஒரு பெரிய தவறைச் செய்துவிட்டாய் சிங்களனே...
என் தலவனைக் கொன்றுவிட்டோம் என்ற நாடகத்தை நடத்தி....
அமைதியாய் இருந்த உலக தமிழர்களை..
என் தலைவனிடம் பயிற்சி பெறாத புலிகளாக மாற்றி விட்டாயடா....

காத்திரு சிங்களனே...
இனி உனக்கு சாவு மணி காத்திருக்கிறது 5-ஆம் ஈழப் போரில்...
வருவார் என் தலைவன்..
நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு...
ஓய மாட்டார் என் தலைவர்...
தமிழர்காக ஈழம் பெறும் வரை..
மரணமே அவரைக் கண்டால் நடுங்குமடா..

-தமிழன்-