செவ்வாய், 19 மே, 2009

வதந்தியை வாந்தியெடுக்கும் ஓநாய்கள்!இனவெறி பிடித்த சிங்கள இராணுவ ஓநாய்கள் தலைவர் இறந்துவிட்டார் என்று வதந்திகளைப் பரப்பிவருகின்றனர். எமது தலைவன் துணிவைக் கண்டு வாந்திபேதியில் நடுங்கியவர்கள் வேறு வழியின்றி வதந்தியைப் பரப்ப முனைந்துவிட்டனர்! தமிழ் மக்களே, வெறிநாய்கள் பரப்பும் வதந்திகளை நம்பாதீர்.

பல்லாயிர மக்களின் கண்ணீரைத் துடைக்க வந்த நம் தலைவன், கேவலம் நீரை நாக்கால் நக்கிக் குடிக்கும் நாய்களால் இறக்க மாட்டான். பொய்யான தகவலை வெளியிட்டு கோடான கோடி தமிழ் மக்களை சோகத்தில் திளைக்க வைத்துவிட்டது இலங்கை இராணுவம். இதனுடன் சேர்ந்து வெட்கம்கெட்ட கூலிப்படைகளும் மாரடிக்கின்றன.

எம்மின பெண்கள் கதறக்கதற கற்பழிக்கப்பட்டார்கள்; எம்மின ஆண்கள் ஓரின உறவுக்கு வற்புறுத்தப்பட்டார்கள்; சிறுநீரும் மலமும் உணவாகக் கொடுக்கப்பட்டன; உடல் அங்கங்கள் அறுக்கப்பட்டன; சிறுகுழந்தையும் குண்டு வீச்சுக்குப் பழியானது; இறந்த பெண் புலிகளின் உடலையும் விட்டு வைக்காமல் நிர்வாணப்படுத்தி புணர்ந்தன இலங்கை இராணுவ வெறிநாய்கள்! இத்தனையும் தாங்கிக்கொண்டு போராடிக்கொண்டிருக்கிறார்கள் எனதருமை தமிழ் விடுதலைப் புலிகள்!

வதந்தி மேல் வதந்தி பரப்பி எமது தமிழ் மக்களை இன்னும் கோபத்திற்கு உள்ளாக்குகின்றன ஓநாய்கள். புலிகள் நியாயம், போர் தர்மம், மனிதாபிமானத்தோடு போராடிக்கொண்டிருக்கின்றனர். அப்பாடி மக்கள் பலியாவதை புலிகள் விரும்பவில்லை. அதனாலேயே முடிந்த வரையில் அப்பாவி மக்களை பலியாக்குவதைத் தவிர்த்து இராணுவத்தோடு மட்டும் மோதி வருகின்றனர். எச்சில் எலிகளைப் போல் அப்பாவி மக்களைக் கொன்று குவித்து ‘வெற்றி’ என்று மார்தட்டிக் கொள்ளவில்லை!

புலிகள் நினைத்தால், இலங்கை பூமியை நொடிக்குள் மயான பூமியாக மாற்ற முடியும். அது அவர்களுடைய நோக்கம் அன்று! ‘தமிழ் ஈழம் உருவாக வேண்டும்! தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டும்!’ அதுவே புலிகளின் எண்ணம்! கொலைவெறியும் இனவெறியும் பிடித்தவ சிங்கள இராணுவம் எதற்கு வெறியாட்டம் ஆடிக்கொண்டிருக்கின்றது என்றுதான் விளங்கவில்லை!

தமிழ் சகோதரர்களே, உறுதியை இழக்காதீர். நம்பிக்கையைக் குறைக்காதீர்! தலைவன் இன்னும் சாகவில்லை. அவன் இறந்தாலும் போராட்டம் முடியப் போவதில்லை. தமிழ் ஈழம் உருவாகும் வரை போராட்டம் தொடரும்! தமிழ் ஈழம் விரைவில் உருவாகும்!

தமிழோடு உயர்வோம்!

6 கருத்துகள்:

சதீசு குமார் சொன்னது…

நம்பிக்கையூட்டும் பதிவு!

தலைவர் பிரபாகரன் தமிழர்களின் இதயங்களில் என்றும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்.

20,21-ஆம் நூற்றாண்டின் உன்னதத் தலைவனை அவ்வளவு எளிதில் கொன்றுவிட முடியாது!

பெயரில்லா சொன்னது…

இன்னுமா உங்கள் இரத்த வெறி அடங்கவில்லை? எம் தமிழ் மக்களை அழிக்க வந்த கோடாரி காம்புகளே. ரோட்டிலும், காட்டிலும் உண்ண உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உணவு கொடுக்க வழி இல்லை. இன்னும் மக்களை பழி வாங்கப் போகின்றார்களாம். உசிப்பேற்றி உசுப்பேற்றி எம் மக்களைக் கொன்றது போதுமய்யா. வாழவாவது விடுங்கள்.

நட்புடன் ஜமால் சொன்னது…

\\தமிழோடு உயர்வோம்!\\


ஆம்!

Kaliraj சொன்னது…

கருணாவுக்கு அனேகமாக மகிந்த, நாள் குறித்திருப்பார்.

பிரபாகரன் மரணிக்காததால் தப்பித்தார்.

’கருணா’ என்று பேர் வைத்தாலே இனத்துரோகியாகவும், பணத்திற்க்கு விலைபோகுபவர்களாகவும் இருப்பார்களா?

பெயரில்லா சொன்னது…

வா பகையே… வா…
வந்தெம் நெஞ்சேறி மிதி.
பூவாகவும் பிஞ்சாகவும் மரம் உலுப்பிக் கொட்டு.
வேரைத் தழித்து வீழ்த்து.
ஆயினும் அடிபணியோம் என்பதை மட்டும்
நினைவில் கொள்!”

ஆயிரம் வீரர்கள் தீயினில் போயினர்
ஆயினும் போரது நீறும், புலி
ஆடும் கொடி நிலம் ஆறும்.
பேயிருள் சூழ்ந்திடும் கானகம் மீதினில்
பாசறை ஆயிரம் தோன்றும், கருப்
பைகளும் ஆயுதம் ஏந்தும்.
மத்தளம், பேரிகை, கொட்டு புலிப்படை
மாபெரும் வெற்றிகள் சூடும், அந்த
சிங்கள கூட்டங்கள் ஓடும்.

Paaya Theriyum.Pathunga Theriyum.Payapada Theriyaathu.

Intha Ulagathil Suriyanai Thottavanum illai. Thalaivar Prabakaranai Suttavanum illai.

( Nile Raja )

நான் சொன்னது…

உங்கள் பதிவு நம்பிக்கைஊட்டும் படியாகவே இருந்தது
நன்றி