செவ்வாய், 10 மார்ச், 2009

சோகம்!


சிரிப்பது சுமையாகிவிட்டது
அழுகை வழக்கமாகிவிட்டது
சிந்தனைத் தடைப்பட்டுவிட்டது
கண்ணீர் மடைதிறந்துவிட்டது!

வாழ்ந்துப் பார்க்கத் துடிக்கிறேன்
வாழ்க்கைத் தருவோர் யாருமில்லை
சேர்ந்து வாழத் துடிக்கிறேன்
சேர்ந்து வர எவரும் இல்லை!

காத்திருந்து காத்திருந்து
கால்களும் மறத்துவிட்டது
பார்த்திருந்து பார்த்திருந்து
பார்வையும் மங்கிவிட்டது!

இன்னமும் காத்திருக்கிறேன்
காதல் கிடைக்காதா என்று
இன்னமும் பார்த்திருக்கிறேன்
பாசம் கிடைக்குமா என்று!

இமைகளை மூடுகிறேன்
தூக்கம் வாராதா என்று
தினம் தினம் அழுகிறேன்
கண்ணீர் வற்றாதா என்று!

77 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

படம் மிக அருமை

நட்புடன் ஜமால் சொன்னது…

சிரிப்பது சுமையாகிவிட்டது
அழுகை வழக்கமாகிவிட்டது
சிந்தனைத் தடைப்பட்டுவிட்டது
கண்ணீர் மடைதிறந்துவிட்டது!\\

இன்னும் சிரியுங்கள்

சிரித்து உடையுங்கள் சுமையை.

நட்புடன் ஜமால் சொன்னது…

\\வாழ்ந்துப் பார்க்கத் துடிக்கிறேன்
வாழ்க்கைத் தருவோர் யாருமில்லை
சேர்ந்து வாழத் துடிக்கிறேன்
சேர்ந்து வர எவரும் இல்லை!\\

சோர்ந்து விடாதீர்கள்

வாழ்க்கைத்தேடி பலர் இருக்கின்றனர்

வாழ்வளியுங்கள் அவர்களுக்கு

நட்புடன் ஜமால் சொன்னது…

\\இன்னமும் காத்திருக்கிறேன்
காதல் கிடைக்காதா என்று
இன்னமும் பார்த்திருக்கிறேன்
பாசம் கிடைக்குமா என்று!\\

இல்லாதவற்கு கொடுங்கள்
உங்களுக்கானது உங்களை தேடி வரும்

நட்புடன் ஜமால் சொன்னது…

\\இமைகளை மூடுகிறேன்
தூக்கம் வாராதா என்று
தினம் தினம் அழுகிறேன்
கண்ணீர் வற்றாதா என்று!\\

துக்கம் தொலையுங்கள்

தூக்கம் வரும்

அழுது விடுங்கள்

கண்ணீர் வற்றாது

துக்கம் குறையும்

நாமக்கல் சிபி சொன்னது…

:(

கவிதா | Kavitha சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நாமக்கல் சிபி சொன்னது…

மகிழ்ச்சியை நண்பர்களுடன் பங்கிட்டுக் கொள்ளும்போது இரட்டிப்பாகும்!

சோகத்தைப் பகிர்ந்துகொள்ளும்போது பாதியாகிவிடும்!

எங்களுடன் பகிர்ந்து கொல்லுங்கள் சகோதரி!

நாங்க இருக்கிறோம்!

நட்புடன் ஜமால் சொன்னது…

கவிதா அக்கா

&

சிபி

அண்ணா

மிக்க நன்றி ...

எனக்கு இப்படி தோனவேயில்லையே!

இனியவள் புனிதா சொன்னது…

//கவிதா | Kavitha சொன்னது…
புவன்ஸ் என்ன இது.. ஒரே அழுவாச்சி?!!

என்னை அழையுங்கள்.. @ gkavith@gmail.com.. please.. I love to talk you.. plz..contact me I will send my contact number ok.//

Y blood?

மோனிபுவன் அம்மா சொன்னது…

கஷ்டத்தை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

சுமை , சோகம் குறைந்துவிடும்.

தானாகவே உரக்கம் வரும் பா

Syed Ahamed Navasudeen சொன்னது…

நீ உண்மையாக யாரையேனும் காதலித்தால் அவர்களின் சந்தோசத்தை நீ விரும்பு அது உன்னிடம் இல்லாத போதும்.

கணவன் குறட்டை விட்டு தூங்குவதை நினைத்து கவலைப்படும் பெண்ணை விட தன் கணவன் இரவில் வெளியில் இல்லாமல் தன்னோடு இருக்கிறானே என்று திருப்தி அடையும் பெண்ணின் வாழ்கையே சிறந்து இருக்கும். (இது ஜோக் மட்டும் இல்ல. கொஞ்சம் சிந்திக்கவும் தான்)

So find the positive side from the negative side.

நட்புடன் ஜமால் சொன்னது…

\\So find the positive side from the negative side.\\

கிரேட் மச்சான்

அபி அப்பா சொன்னது…

//மகிழ்ச்சியை நண்பர்களுடன் பங்கிட்டுக் கொள்ளும்போது இரட்டிப்பாகும்!

சோகத்தைப் பகிர்ந்துகொள்ளும்போது பாதியாகிவிடும்!//

சிபி! மேலே உள்ள தத்துவத்துக்கு என் கிட்ட காபிரைட் இருக்கு என்பதை சபையிலே சொல்லிக்கிறேன்!

புவன்ஸ்! டோண்ட் ஒர்ரி. சும்மா டாக் இட் ஈசியா இருங்க!

கவிதா | Kavitha சொன்னது…

புவன்ஸ் வெயிட்ங் டூ டாக் டூ யூ.. மா..

அணில் குட்டி உங்க கூட ஆட்டத்தை ஆரம்பிக்கனுமாம்.. அதுவும் வெயிட்ங்..கு..

கவிதா | Kavitha சொன்னது…

Y blood?//

Bcs Bhuvan's is same blood rey !! :)

நாமக்கல் சிபி சொன்னது…

//
அணில் குட்டி உங்க கூட ஆட்டத்தை ஆரம்பிக்கனுமாம்.. அதுவும் வெயிட்ங்..கு..//

அணில் குட்டியா ஜாலி!

ஆனா கவிதாக்காவும் கூடவே வந்து அணில் குட்டியை ஜாலியா இருக்க விடாம கண்ட்ரோல் பண்ணுவாங்களே!

நாமக்கல் சிபி சொன்னது…

//சிபி! மேலே உள்ள தத்துவத்துக்கு என் கிட்ட காபிரைட் இருக்கு என்பதை சபையிலே சொல்லிக்கிறேன்!
//

ஸாரி அபி அப்பா! நான் அதுக்கு தேநீர் ரைட் வாங்கி இருக்கேன்!

கவிதா | Kavitha சொன்னது…

நீங்க என்ன கூப்பிடலன்னா.. நான் ராத்திரி தூங்கமாட்டேன் சொல்லிட்டேன்..


நான் தூங்காமல் இருந்தால் எத்தனை பிரச்சனைகள் நாட்டுக்கு வரும்னு
உங்களுக்கு தெரியுமா? தயவுசெய்து அதை எல்லாம் தெரிஞ்சிக்கோங்க ஒகே வா.. :)

நாமக்கல் சிபி சொன்னது…

//தானாகவே உரக்கம் வரும் பா//

ஆமாம்பா!
உரக்கம் வந்தா நல்லா சத்தமா பேசலாம்!

ஓ! இவங்க சொல்ல வந்தது உறக்கமா!

:)

நாமக்கல் சிபி சொன்னது…

//நான் தூங்காமல் இருந்தால் எத்தனை பிரச்சனைகள் நாட்டுக்கு வரும்னு
உங்களுக்கு தெரியுமா? தயவுசெய்து அதை எல்லாம் தெரிஞ்சிக்கோங்க ஒகே வா.. :)//

ஆமா பதிவு போட்டு எங்களைக் கொல்லுவாங்க!

ப்ளீஸ் எங்க நிலைமையை நினைச்சிப்பாருங்க கொஞ்சம்!

டெண்டுல்கர் சொன்னது…

//ஸாரி அபி அப்பா! நான் அதுக்கு தேநீர் ரைட் வாங்கி இருக்கேன்!//

நான் பூஸ்ட் ரைட் வாங்கி வெச்சிருக்கேன்!

பூஸ்ட் ஈஸ் த சீக்ரெட் ஆஃப் மை எனர்ஜி!

சேவாக் சொன்னது…

//பூஸ்ட் ஈஸ் த சீக்ரெட் ஆஃப் மை எனர்ஜி!//

அவர் எனர்ஜி!

அபி அப்பா சொன்னது…

டொக் டொக் டொக் இங்கே என்ன கும்மி சத்தம் கேக்குது! நானும் ஆட்டைக்கு வரலாமா?

அணில் சொன்னது…

கேப்பங்கஞ்சி ஈஸ் மை சீக்ரட் ஆஃப் எனர்ஜி!

பூனை சொன்னது…

எனக்கு ஆட்டுக்கால் பாயா தான் பிடிக்கும்!

Syed Ahamed Navasudeen சொன்னது…

அணில் கூறியது...

கேப்பங்கஞ்சி ஈஸ் மை சீக்ரட் ஆஃப் எனர்ஜி!

அணிலுக்கு பழம்தானே பிடிக்கும். இப்ப கேப்ப கஞ்சியா?. ஹ்ம்ம் Financial Crisis தான் காரணமா?

அக் மார்க் அணில் சொன்னது…

//அணிலுக்கு பழம்தானே பிடிக்கும். இப்ப கேப்ப கஞ்சியா?. ஹ்ம்ம் Financial Crisis தான் காரணமா?//


யாரது என் பேரை வச்சிகிட்டு இப்படில்லாம்??

எனக்கு மலேஷியா டுரியான் பழம் தான் பிடிக்கும்!

இனியவள் புனிதா சொன்னது…

//கவிதா | Kavitha கூறியது...
நீங்க என்ன கூப்பிடலன்னா.. நான் ராத்திரி தூங்கமாட்டேன் சொல்லிட்டேன்..


நான் தூங்காமல் இருந்தால் எத்தனை பிரச்சனைகள் நாட்டுக்கு வரும்னு
உங்களுக்கு தெரியுமா? தயவுசெய்து அதை எல்லாம் தெரிஞ்சிக்கோங்க ஒகே வா.. :)//

Nannum koodathaan ungakitte pesanum :-)if not my head will crash appadinnu ellam solla maateen :-P

இனியவள் புனிதா சொன்னது…

me the 30th

இனியவள் புனிதா சொன்னது…

// கவிதா | Kavitha கூறியது...
Y blood?//

Bcs Bhuvan's is same blood rey !! :)//

then ungalai naan chellamma killi kollalaama :-))

து. பவனேஸ்வரி சொன்னது…

நட்புடன் ஜமால் கூறியது...
\\இமைகளை மூடுகிறேன்
தூக்கம் வாராதா என்று
தினம் தினம் அழுகிறேன்
கண்ணீர் வற்றாதா என்று!\\

//துக்கம் தொலையுங்கள்

தூக்கம் வரும்

அழுது விடுங்கள்

கண்ணீர் வற்றாது

துக்கம் குறையும்//

நீங்க சொன்னா சரியாகத்தான் இருக்கும். கருத்துகளுக்கு மிக்க நன்றி நண்பரே.

RAMYA சொன்னது…

சூப்பர் கவிதை!!!

RAMYA சொன்னது…

\\வாழ்ந்துப் பார்க்கத் துடிக்கிறேன்
வாழ்க்கைத் தருவோர் யாருமில்லை
சேர்ந்து வாழத் துடிக்கிறேன்
சேர்ந்து வர எவரும் இல்லை!
\\

காத்திருங்கள் கண்டிப்பா அருமையான வாழ்க்கை காத்திருக்கின்றது.

து. பவனேஸ்வரி சொன்னது…

கவிதா | Kavitha கூறியது...
//புவன்ஸ் என்ன இது.. ஒரே அழுவாச்சி?!!

என்னை அழையுங்கள்.. @ gkavith@gmail.com.. please.. I love to talk you.. plz..contact me I will send my contact number ok.//

புவன்ஸ் இல்லம்மா 'பவன்ஸ்'. ஹிஹிஹீ... நிச்சயம் உங்களை அழைக்கிறேன். கவலை வேண்டாம்.

இனியவள் புனிதா சொன்னது…

//சேர்ந்து வாழத் துடிக்கிறேன்
சேர்ந்து வர எவரும் இல்லை//

நான் அப்பவே கூப்பிட்டேன் சேர்ந்து நடக்க... நீங்கத்தான் வரல்ல :-( இப்போ என்னடான்னா கூப்பிடவே இல்லைன்னு குற்றச்சாட்டு..

து. பவனேஸ்வரி சொன்னது…

நாமக்கல் சிபி கூறியது...
//மகிழ்ச்சியை நண்பர்களுடன் பங்கிட்டுக் கொள்ளும்போது இரட்டிப்பாகும்!

சோகத்தைப் பகிர்ந்துகொள்ளும்போது பாதியாகிவிடும்!

எங்களுடன் பகிர்ந்து கொல்லுங்கள் சகோதரி!

நாங்க இருக்கிறோம்!//

நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. நிச்சயம் தங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்.

இனியவள் புனிதா சொன்னது…

//வாழ்ந்துப் பார்க்கத் துடிக்கிறேன்
வாழ்க்கைத் தருவோர் யாருமில்லை//

வாழ்க்கை அதை நாம்தான் எடுத்துக்க வேணும்..நம் வாழ்க்கை நம் கையில்... ஸ்வாமி இரஜினிவனந்தா கூறியிருக்கிறார் தெரியுமா!!!

து. பவனேஸ்வரி சொன்னது…

இனியவள் புனிதா கூறியது...
//கவிதா | Kavitha சொன்னது…
புவன்ஸ் என்ன இது.. ஒரே அழுவாச்சி?!!

என்னை அழையுங்கள்.. @ gkavith@gmail.com.. please.. I love to talk you.. plz..contact me I will send my contact number ok.//

//Y blood?//

தெரியலைங்க புனிதா. அவங்கதான் அழைக்கச் சொன்னாங்க...

நாமக்கல் சிபி சொன்னது…

//வாழ்க்கை அதை நாம்தான் எடுத்துக்க வேணும்..நம் வாழ்க்கை நம் கையில்... ஸ்வாமி இரஜினிவனந்தா கூறியிருக்கிறார் தெரியுமா!!!//

நாம் கூட அவரது தீவிர பக்தன்!

து. பவனேஸ்வரி சொன்னது…

மோனிபுவன் அம்மா கூறியது...
//கஷ்டத்தை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

சுமை , சோகம் குறைந்துவிடும்.

தானாகவே உரக்கம் வரும் பா//

உண்மைதான். கருத்துக்கு நன்றிங்க.

இனியவள் புனிதா சொன்னது…

//நட்புடன் ஜமால் கூறியது...
\\வாழ்ந்துப் பார்க்கத் துடிக்கிறேன்
வாழ்க்கைத் தருவோர் யாருமில்லை
சேர்ந்து வாழத் துடிக்கிறேன்
சேர்ந்து வர எவரும் இல்லை!\\

சோர்ந்து விடாதீர்கள்

வாழ்க்கைத்தேடி பலர் இருக்கின்றனர்

வாழ்வளியுங்கள் அவர்களுக்கு//

உண்மைத்தான்...என் அலுவலகத்தில்கூட நிறைய பூனைக்குட்டிகள் ஆதரவில்லாமல் இருக்குதுங்க..வேணும்னா சொல்லுங்க கொண்டு வந்து தரேன்.. :-)வாயில்லா ஜீவனுக்கு வாழ்வளிக்கலாமே ??

இனியவள் புனிதா சொன்னது…

//நாமக்கல் சிபி கூறியது...
//வாழ்க்கை அதை நாம்தான் எடுத்துக்க வேணும்..நம் வாழ்க்கை நம் கையில்... ஸ்வாமி இரஜினிவனந்தா கூறியிருக்கிறார் தெரியுமா!!!//

நாம் கூட அவரது தீவிர பக்தன்!//

அட வாழ்க இரஜினிவனந்தா!!!!

து. பவனேஸ்வரி சொன்னது…

Syed Ahamed Navasudeen கூறியது...
//நீ உண்மையாக யாரையேனும் காதலித்தால் அவர்களின் சந்தோசத்தை நீ விரும்பு அது உன்னிடம் இல்லாத போதும்.

கணவன் குறட்டை விட்டு தூங்குவதை நினைத்து கவலைப்படும் பெண்ணை விட தன் கணவன் இரவில் வெளியில் இல்லாமல் தன்னோடு இருக்கிறானே என்று திருப்தி அடையும் பெண்ணின் வாழ்கையே சிறந்து இருக்கும். (இது ஜோக் மட்டும் இல்ல. கொஞ்சம் சிந்திக்கவும் தான்)

So find the positive side from the negative side.//

தங்கள் கருத்துக்கும் அறிவுரைக்கும் மிக்க நன்றி நண்பரே.

து. பவனேஸ்வரி சொன்னது…

அபி அப்பா கூறியது...
//மகிழ்ச்சியை நண்பர்களுடன் பங்கிட்டுக் கொள்ளும்போது இரட்டிப்பாகும்!

சோகத்தைப் பகிர்ந்துகொள்ளும்போது பாதியாகிவிடும்!//

சிபி! மேலே உள்ள தத்துவத்துக்கு என் கிட்ட காபிரைட் இருக்கு என்பதை சபையிலே சொல்லிக்கிறேன்!

//புவன்ஸ்! டோண்ட் ஒர்ரி. சும்மா டாக் இட் ஈசியா இருங்க!//

புவன்ஸ் இல்லைங்க, பவன்ஸ்! உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

RAMYA சொன்னது…

//
சிரிப்பது சுமையாகிவிட்டது
அழுகை வழக்கமாகிவிட்டது
சிந்தனைத் தடைப்பட்டுவிட்டது
கண்ணீர் மடைதிறந்துவிட்டது!
//

இந்த சுமைகளும், வழக்கங்களும், தடைகளும் நிரந்தரம் அல்ல தோழி
உன்னைத்தேடி நீ எதிர்பார்க்கும் எல்லா இன்பங்களும் வரும்!!

நட்புடன் ஜமால் சொன்னது…

புவன்ஸ் இல்லைங்க, பவன்ஸ்!

து. பவனேஸ்வரி சொன்னது…

கவிதா | Kavitha கூறியது...
//புவன்ஸ் வெயிட்ங் டூ டாக் டூ யூ.. மா..

அணில் குட்டி உங்க கூட ஆட்டத்தை ஆரம்பிக்கனுமாம்.. அதுவும் வெயிட்ங்..கு..//

கூகலில் உங்களை இணைத்துள்ளேன். அங்கே பேசலாமே?

நட்புடன் ஜமால் சொன்னது…

\\இந்த சுமைகளும், வழக்கங்களும், தடைகளும் நிரந்தரம் அல்ல தோழி
உன்னைத்தேடி நீ எதிர்பார்க்கும் எல்லா இன்பங்களும் வரும்!!\\

ஆமா! ஆமா!

நிச்சியம் வரும்.

து. பவனேஸ்வரி சொன்னது…

கவிதா | Kavitha கூறியது...
//நீங்க என்ன கூப்பிடலன்னா.. நான் ராத்திரி தூங்கமாட்டேன் சொல்லிட்டேன்..


நான் தூங்காமல் இருந்தால் எத்தனை பிரச்சனைகள் நாட்டுக்கு வரும்னு
உங்களுக்கு தெரியுமா? தயவுசெய்து அதை எல்லாம் தெரிஞ்சிக்கோங்க ஒகே வா.. :)//

ஐயோ, அப்படியெல்லாம் பண்ணிடாதீங்க. கண்டிப்பா கூப்பிடுறேன்.

து. பவனேஸ்வரி சொன்னது…

அபி அப்பா கூறியது...
//டொக் டொக் டொக் இங்கே என்ன கும்மி சத்தம் கேக்குது! நானும் ஆட்டைக்கு வரலாமா?//

ஆ...கிளம்பிட்டாங்கய்யா... கிளப்பிட்டாங்க....

நட்புடன் ஜமால் சொன்னது…

\\ஆ...கிளம்பிட்டாங்கய்யா... கிளப்பிட்டாங்க....\\

ஹா ஹா ஹா

து. பவனேஸ்வரி சொன்னது…

இனியவள் புனிதா கூறியது...
//கவிதா | Kavitha கூறியது...
நீங்க என்ன கூப்பிடலன்னா.. நான் ராத்திரி தூங்கமாட்டேன் சொல்லிட்டேன்..


நான் தூங்காமல் இருந்தால் எத்தனை பிரச்சனைகள் நாட்டுக்கு வரும்னு
உங்களுக்கு தெரியுமா? தயவுசெய்து அதை எல்லாம் தெரிஞ்சிக்கோங்க ஒகே வா.. :)//

//Nannum koodathaan ungakitte pesanum :-)if not my head will crash appadinnu ellam solla maateen :-P//

அதுதான் நேரிடையாகவே பார்க்கப் போறோமே? ;)

து. பவனேஸ்வரி சொன்னது…

இனியவள் புனிதா கூறியது...
// கவிதா | Kavitha கூறியது...
Y blood?//

Bcs Bhuvan's is same blood rey !! :)//

//then ungalai naan chellamma killi kollalaama :-))//

இந்த விளையாட்டுக்கு நான் வரலை. ஆளை விடுங்கடா சாமி!

து. பவனேஸ்வரி சொன்னது…

இனியவள் புனிதா கூறியது...
//வாழ்ந்துப் பார்க்கத் துடிக்கிறேன்
வாழ்க்கைத் தருவோர் யாருமில்லை//

//வாழ்க்கை அதை நாம்தான் எடுத்துக்க வேணும்..நம் வாழ்க்கை நம் கையில்... ஸ்வாமி இரஜினிவனந்தா கூறியிருக்கிறார் தெரியுமா!!!//

அப்படியா? யார் அவர்? நான் கேள்விப்பட்டது கிடையாதே... இருந்தாலும் உண்மையைத்தான் கூறியுள்ளார்.

நட்புடன் ஜமால் சொன்னது…

\\இந்த விளையாட்டுக்கு நான் வரலை. ஆளை விடுங்கடா சாமி!\\

நல்லா பாருங்க

விடுங்கடா -வா ...

VIKNESHWARAN சொன்னது…

:))

து. பவனேஸ்வரி சொன்னது…

RAMYA கூறியது...
\\வாழ்ந்துப் பார்க்கத் துடிக்கிறேன்
வாழ்க்கைத் தருவோர் யாருமில்லை
சேர்ந்து வாழத் துடிக்கிறேன்
சேர்ந்து வர எவரும் இல்லை!
\\

//காத்திருங்கள் கண்டிப்பா அருமையான வாழ்க்கை காத்திருக்கின்றது.//

தங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க.

து. பவனேஸ்வரி சொன்னது…

இனியவள் புனிதா கூறியது...
//சேர்ந்து வாழத் துடிக்கிறேன்
சேர்ந்து வர எவரும் இல்லை//

//நான் அப்பவே கூப்பிட்டேன் சேர்ந்து நடக்க... நீங்கத்தான் வரல்ல :-( இப்போ என்னடான்னா கூப்பிடவே இல்லைன்னு குற்றச்சாட்டு..

நடந்துட்டாப் போச்சி... இதுல என்ன இருக்கு?

ரங்கன் சொன்னது…

நல்ல கவிதை...

ஏம்பா... கவிதா.. சிபி.. உங்க ரெண்டுபேருக்கும் வேற எடமே கிடைக்கிலயா?
அவங்க எவ்ளோ சோகமா?! எழுதி இருக்காங்க..
நீங்க என்னடான்னா கும்முகும்முனு கும்முறீங்க...

:)))))

ரங்கன் சொன்னது…

ஐ.. நான்தான் 60வது கமெண்டு...
ஜாலி..
சோகக்கவிதை போட்டும் என்னை சந்தோசப்படுத்திய அக்கா வாழ்க!!

இதுக்காகவே நீங்க ரொம்ப சந்தோசம..இருக்கப்போறீங்க..

வாழ்த்துக்கள்

அபுஅஃப்ஸர் சொன்னது…

எப்பவும்போல் வரிகள் அருமை

சோகம் தெரியுது வரிகளில்

அபுஅஃப்ஸர் சொன்னது…

இந்த பதிவுக்கு கும்மிங்ஸ் போய்க்கிட்டிருக்கா...

ம்ம் சோகத்திலும் ஒரு சந்தோஷம்... நடக்கட்டும்

புதியவன் சொன்னது…

கவிதை சோகமா இருந்தாலும் நல்லா இருக்கு...

’கால்களும் மறத்துவிட்டது’

’மரத்துவிட்டது’

கவிதா | Kavitha சொன்னது…

//Nannum koodathaan ungakitte pesanum :-)if not my head will crash appadinnu ellam solla maateen :-P//

பேசின பிறகுத்தானே கிராஷ் ஆகும்.. :).. ஹ ஹஹா..

கவிதா | Kavitha சொன்னது…

//then ungalai naan chellamma killi kollalaama :-))//

வலிக்காம கிள்ளலாம்.. வலிச்சா திருப்பி கிள்ளுவேன்..ஒகேயா. .டீல்?!!

கவிதா | Kavitha சொன்னது…

//ஏம்பா... கவிதா.. சிபி.. உங்க ரெண்டுபேருக்கும் வேற எடமே கிடைக்கிலயா?//

... ஏன் உனக்கு பொறாமை.. வேணும்னா நீயும் வந்து ஜோதி'யில ஐக்கியம் ஆயிடு....

பெயரில்லா சொன்னது…

manithanai peranthu vittu mattengiradhu engiraye thozhi thedal thaney vazhkai...rasika iyargai magizha mazhalaien serippu pasikku kanji rusikka arivu uranga uzhaippu ooivedukka thendral sogam solla natpu ne sugam solla sontham ena yethanayo erukka yethuvum illai engiraye nangal erukirom thol sainthukolthozhamaiai thayagiren madi tharugiren kan urangu...kanalagum kathal vendam kaneer madaiai anai kavithai madaiai thera athil kathal oodal inbam thunbam natpu nesam nalla nenjam thervu parimatram parigaaram ena ellam undu .....yarukku illai porattam kannil enna neerootam natpudan thamil...

ரங்கன் சொன்னது…

//... ஏன் உனக்கு பொறாமை.. வேணும்னா நீயும் வந்து ஜோதி'யில ஐக்கியம் ஆயிடு....//

தோ.. வந்துட்டேன்.. சொய்ங்க்க்க்க்க்..

அய்யோ ஜோதி சுடுதெ...
யாராச்சும் கூல் பண்ணுங்கப்பா...
அவ்வ்வ் :(

ரங்கன் சொன்னது…

பவன்.. பீ ஹாப்பி...
நோ ஃபீலிங்க்ஸ்...
கவிதா-க்கிட்ட பேசியாச்சா?

நான் சொன்னது…

பவன் ஏன் இவ்வளவு வலிகளுடன் ஒரு கவிதை?
வலிகள் எல்லாம் தேவைதானே அப்புறம் ஏன்?
கவிதை அருமை வாழ்த்துகள்

நான் சொன்னது…

கணவன் குறட்டை விட்டு தூங்குவதை நினைத்து கவலைப்படும் பெண்ணை விட தன் கணவன் இரவில் வெளியில் இல்லாமல் தன்னோடு இருக்கிறானே என்று திருப்தி அடையும் பெண்ணின் வாழ்கையே சிறந்து இருக்கும். (இது ஜோக் மட்டும் இல்ல. கொஞ்சம் சிந்திக்கவும் தான்)


ஒரு கருத்து சொல்ல விரும்புகிறேன்
இந்த கருத்தில் ஆணாதிக்க மனோபாவத்தின்
வெளிபாடு மறைமுகமாய் இருக்கிறது

logu.. சொன்னது…

\\இமைகளை மூடுகிறேன்
தூக்கம் வாராதா என்று
தினம் தினம் அழுகிறேன்
கண்ணீர் வற்றாதா என்று\\

nammai pola innum ethanaiyo
ithayangal ippadithan irukkinrana.

nallarukkunga unga lines.

து. பவனேஸ்வரி சொன்னது…

இங்கே என்ன நடக்கிறது? எனக்கு எதுவுமே புரியவில்லை. கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி...

logu.. சொன்னது…

\\இங்கே என்ன நடக்கிறது? எனக்கு எதுவுமே புரியவில்லை. கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி...\\

Ennaaaaaaaa Puriyala?

து. பவனேஸ்வரி சொன்னது…

logu.. கூறியது...
\\இங்கே என்ன நடக்கிறது? எனக்கு எதுவுமே புரியவில்லை. கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி...\\

//Ennaaaaaaaa Puriyala?//

எதுவுமே புரியலைங்க..யார் யாரோ என்னென்னவோ சொல்றாங்க.. எனக்கு எதுவுமே புரியல..

இனியவள் புனிதா சொன்னது…

//து. பவனேஸ்வரி கூறியது...
logu.. கூறியது...
\\இங்கே என்ன நடக்கிறது? எனக்கு எதுவுமே புரியவில்லை. கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி...\\

//Ennaaaaaaaa Puriyala?//

எதுவுமே புரியலைங்க..யார் யாரோ என்னென்னவோ சொல்றாங்க.. எனக்கு எதுவுமே புரியல..//

This is wat called Kummi :-)