ஞாயிறு, 1 மார்ச், 2009

வெறி வேண்டும்!

வெறி வேண்டும்
வாழ்வதற்கு வெறி வேண்டும்
வானமே இடிந்து விழுந்தாலும்
வாழும் வெறி பெருகவேண்டும்!

தோல்விகள் நிரந்தரமில்லை
வாழ்க்கையில் சுதந்திரமில்லை
கைவசம் பணமும் இல்லை
உலகத்தின் வாழ்வே தொல்லை!

தொல்லை என்னடா தொல்லை
கேட்காதேடா ஊர் சொல்லை
உடைத்து எறியடா எதிரியின் பல்லை
நமக்கு ஏதடா இங்கு இல்லை?

உலகம் நமக்குச் சொந்தம்
தோழர் நமக்குப் பந்தம்
இன்னும் ஏனடா மெளனம்
பார்க்காதேடா இங்குச் சகுனம்!

தடையில்லா முயற்சியா?
துன்பமில்லா வாழ்க்கையா?
வீழ்ச்சியில்லா எழுச்சியா?
வெறியில்லாமல் வெற்றியா?

27 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

வெறி வேண்டும்
வாழ்வதற்கு வெறி வேண்டும்
வானமே இடிந்து விழுந்தாலும்
வாழும் வெறி பெருகவேண்டும்!\\

இது மிக அருமை.

உச்சி மீது வானிடிந்து ...

நட்புடன் ஜமால் சொன்னது…

உலகம் நமக்குச் சொந்தம்
தோழர் நமக்குப் பந்தம்
இன்னும் ஏனடா மெளனம்
பார்க்காதேடா இங்குச் சகுனம்!\\

எதுகையும்
மோனையும்.

நட்புடன் ஜமால் சொன்னது…

தடையில்லா முயற்சியா?
துன்பமில்லா வாழ்க்கையா?
வீழ்ச்சியில்லா எழுச்சியா?
வெறியில்லாமல் வெற்றியா?\\

மிக அழகான எழுச்சி வரிகள்

து. பவனேஸ்வரி சொன்னது…

நட்புடன் ஜமால் கூறியது...
//வெறி வேண்டும்
வாழ்வதற்கு வெறி வேண்டும்
வானமே இடிந்து விழுந்தாலும்
வாழும் வெறி பெருகவேண்டும்!\\

//இது மிக அருமை.

உச்சி மீது வானிடிந்து ...//

பாரதியின் தாக்கம் அனைவரிடமும் இருக்கத்தானே செய்கிறது?

//எதுகையும்
மோனையும்//

எதுகை மோனை இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதவில்லை. அவ்வாறு அமைந்திருந்தால் மகிழ்ச்சியே.

//மிக அழகான எழுச்சி வரிகள்//

தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி நண்பரே.

நான் சொன்னது…

வாழ்க்கையின் தத்துவம் மிகமிக அழகு வாழ்த்துகள்

நான் சொன்னது…

மனதிற்கு தெம்பூட்டும் கருத்துகள்

அப்துல்மாலிக் சொன்னது…

வாழ்வில் துவண்டவனுக்கு உறசாகம் தரும் வரிகள்,

ஒரு புரட்சியின் விடயம் தெரிகிறது உங்களது எழுத்தில்

வாழ்த்துக்கள்

அப்துல்மாலிக் சொன்னது…

//உலகம் நமக்குச் சொந்தம்
தோழர் நமக்குப் பந்தம்
இன்னும் ஏனடா மெளனம்
பார்க்காதேடா இங்குச் சகுனம்!
//

பார்க்காதேடா இங்கு சமுனம்
ஒவ்வொரு வரியும் இடி, சகுனத்திற்கு ஒரு அடி

A N A N T H E N சொன்னது…

//உடைத்து எறியடா எதிரியின் பல்லை//

இதென்ன கொலைவெறி

//தடையில்லா முயற்சியா?
துன்பமில்லா வாழ்க்கையா?
வீழ்ச்சியில்லா எழுச்சியா?
வெறியில்லாமல் வெற்றியா?//

நானும் ரொம்ப நாளா வெறியோடத்தான் ட்ராய் பன்றேன், சிக்க மாட்டெங்குதே?

குமரன் மாரிமுத்து சொன்னது…

புரட்சிப் பெண்ணே, தொடரட்டும் உங்கள் கவி புரட்சி.

வாழ்க வளர்க!

இராகவன் நைஜிரியா சொன்னது…

உங்கள் வலைப்பூவை எனக்கு அறிமுகப் படுத்திய தம்பி ஜமாலுக்கு நன்றிகள் பல.

// தடையில்லா முயற்சியா?
துன்பமில்லா வாழ்க்கையா?
வீழ்ச்சியில்லா எழுச்சியா?
வெறியில்லாமல் வெற்றியா? //

மிக அருமையாக சொல்லப்பட்ட வார்த்தைகள்.

தடைகற்களும், துன்பங்களும், வீழ்ச்சிகளும், வெறிகளும் வாழ்க்கையின் ஓர் அங்கமாகிவிட்டன.

இராகவன் நைஜிரியா சொன்னது…

// தோல்விகள் நிரந்தரமில்லை
வாழ்க்கையில் சுதந்திரமில்லை
கைவசம் பணமும் இல்லை
உலகத்தின் வாழ்வே தொல்லை!//

இல்லை என்று இல்லாமல் போகுமோ அன்று தான் வாழ்க்கை சுகம் பெறும்

புதியவன் சொன்னது…

//உலகம் நமக்குச் சொந்தம்
தோழர் நமக்குப் பந்தம்
இன்னும் ஏனடா மெளனம்
பார்க்காதேடா இங்குச் சகுனம்!//

கவிதை முழுதும் தன்னம்பிக்கை வார்த்தைகள் வழிந்தோடுகின்றன...

து. பவனேஸ்வரி சொன்னது…

நான் கூறியது...
//மனதிற்கு தெம்பூட்டும் கருத்துகள்//

//வாழ்க்கையின் தத்துவம் மிகமிக அழகு வாழ்த்துகள்//

தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி ஐயா. தத்துவம் எதுவும் சொல்லவில்லை. மனதில் தோன்றியதை எழுதினேன். அவ்வளவே...

து. பவனேஸ்வரி சொன்னது…

அபுஅஃப்ஸர் கூறியது...
//வாழ்வில் துவண்டவனுக்கு உறசாகம் தரும் வரிகள்,

ஒரு புரட்சியின் விடயம் தெரிகிறது உங்களது எழுத்தில்

வாழ்த்துக்கள்//

தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி :)

து. பவனேஸ்வரி சொன்னது…

A N A N T H E N கூறியது...
//உடைத்து எறியடா எதிரியின் பல்லை//

//இதென்ன கொலைவெறி//

கொலைவெறி ஒன்னும் இல்லைங்க.
'உருவி எடுடா எதிரின் குடலை'னு
எழுதியிருந்தா கொலை வெறி'னு சொல்லலாம்...

//தடையில்லா முயற்சியா?
துன்பமில்லா வாழ்க்கையா?
வீழ்ச்சியில்லா எழுச்சியா?
வெறியில்லாமல் வெற்றியா?//

//நானும் ரொம்ப நாளா வெறியோடத்தான் ட்ராய் பன்றேன், சிக்க மாட்டெங்குதே?//

எதுங்க??

து. பவனேஸ்வரி சொன்னது…

இராகவன் நைஜிரியா கூறியது...
//உங்கள் வலைப்பூவை எனக்கு அறிமுகப் படுத்திய தம்பி ஜமாலுக்கு நன்றிகள் பல.

மிக அருமையாக சொல்லப்பட்ட வார்த்தைகள்.

தடைகற்களும், துன்பங்களும், வீழ்ச்சிகளும், வெறிகளும் வாழ்க்கையின் ஓர் அங்கமாகிவிட்டன.//

எமது வலைப்பதிவை வலம் வந்தமைக்கு மிக்க நன்றி ஐயா. குறைகள் இருப்பின் தாராளமாகச் சுட்டிக்காட்டுக. உங்கள் கருத்துகளுக்கு நன்றி. ஆதரவைத் தொடருங்கள்.

து. பவனேஸ்வரி சொன்னது…

புதியவன் கூறியது...
//உலகம் நமக்குச் சொந்தம்
தோழர் நமக்குப் பந்தம்
இன்னும் ஏனடா மெளனம்
பார்க்காதேடா இங்குச் சகுனம்!//

//கவிதை முழுதும் தன்னம்பிக்கை வார்த்தைகள் வழிந்தோடுகின்றன...//

தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி புதியவன்.

பெயரில்லா சொன்னது…

ஹாய்! புவனா...

ஒரு தன்னம்பிக்கை கவிதை எழுதியமைக்கு என் வாழ்த்துக்கள். கவிதையில் இன்னும் மெருகேற்றியிருக்கலாம் என்பது என் கருத்து..

அன்புடன்
ஷீ-நிசி
nisiyas.blogspot.com

பெயரில்லா சொன்னது…

மலேசிய பல்கலைகழகங்களின் தமிழ் மாணவர்களுக்கு அவசர வேண்டுகோள்....

எதிர்வரும் மார்ச் 7ஆம் தேதி, பட்டவொர்த்தில் நடைபெறவிருக்கும் "இன அழிப்பின் விளிம்பில் ஈழத்தமிழர்கள்" என்ற மாபெரும் நிதி சேகரிப்பு மற்றும் கண்டன பொதுக்கூட்டத்திற்கு மலேசிய மண்ணில் இயங்கும் அனைத்து பல்கலைக்கழகங்களின் தமிழ் மாணவர்களையும் அன்போடு அழைக்கின்றோம்.

இம்மாபெரும் பொதுக்கூட்டதிற்கு வரும் மாணவ அன்பர்கள், ஈழப்பிரச்சனையில் தங்களது மன ஓட்டத்தை வெளிபடுத்தும் வண்ணம் பதாகைகளை (banners) கொண்டு வரலாம்.

குறிப்பிட்ட தினத்தன்று, எம்மோடு இணைந்து பணியாற்ற தொண்டூழியர்களும் (volunteers) தேவைப்படுகின்றனர். தமிழ் மாணவ நெஞ்சங்கள் தங்களது சேவையை இந்நிகழ்வன்று வழங்க வேண்டுமென்று தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறோம்.
இந்நிகழ்வில் தொண்டூழிய பணியாற்றாவிடினும், தங்களது ஆதரவை ஈழத்தமிழ் மக்களின் துயர் துடைக்க குரல் கொடுக்க வேண்டும் என்று மிக பணிவோடு வேண்டுகிறேன்.

தமிழகத்தில் எழுச்சி கண்டுள்ள மாணவர்களைப் போல், மலேசிய தமிழ் மாணவர்களும் எழுச்சியோடு இந்நிகழ்வில் கலந்துக்கொள்ள வேண்டும் என்பது எமது ஆவல்.

மலாயா பல்கலைக்கழக (UM) தமிழ் மாணவர்களே.....
மலேசிய தேசிய பல்கலைக்கழக (UKM) தமிழ் மாணவர்களே.....
மலேசிய புத்ரா பல்கலைக்கழக (UPM) தமிழ் மாண்வர்களே.....
மலேசிய அறிவியல் பல்கலைக்கழக(USM) தமிழ் மாணவர்களே.....
மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழக (UTM) தமிழ் மாணவர்களே.....
துன் ராசாக் பல்கலக்கழக (UNITAR)தமிழ் மாணவர்களே.....

மற்றும் நாடாளவிய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழ் உறவுகளே,

மார்ச் 7, 2009 பினாங்கு, பட்ட்வொர்த்தில் எம்மோடு வந்திணைந்து ஈழத்தமிழர் படுகொலையை கண்டியுங்கள்.

மேல் விவரங்க்களுக்கு 016 - 438 4767 அல்லது 016 - 454 4355 என்ற எண்களில் எம்மை தொடர்பு கொள்க.

நன்றி,
மு.சத்தீஸ்,
ஏற்பாட்டுக்குழு செயலர்.

எமது அன்பிற்கும், மரியாதைக்குமுரிய தமிழ் நெஞ்சங்களே.....

எதிர்வரும் மார்ச் மாதம் ஏழாம் தேதி, பட்டவொர்த் டேவான் ஹாஜி அகமட் படாவி மண்டபத்தில் நடைபெறவிருக்கும் "இன அழிப்பின் விளிம்பில் ஈழத்தமிழர்கள்" என்ற மாபெரும் பொதுக்கூட்டத்தைப் பற்றிய விவரங்களை தங்களது வலைப்பதிவுகளில் பதிவிட்டு, இந்நிகழ்வை வெற்றிப் பெற செய்திட வேண்டுகிறோம்.

மலேசிய வரலாற்றில் முதன்முதலாக, ஒரு மாநிலத்தின் முதல்வர், துணை முதல்வர், நாடாளுமன்ற எதிரணி தலைவர், மூத்த எதிர்கட்சி தலைவர் ஆகியோர் ஒரே மேடையில் தோன்றி இலங்கை அரசாங்கத்தின் இனவெறிப் போக்கை கண்டித்து பேசவுள்ளனர். மலேசிய தமிழர் வரலாற்றில், இதுநாள் வரையிலும் இலங்கை எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்ட பொழுதிலும், இம்முறை நடத்தப்படும் இந்த பொதுக்கூட்டத்தின் வழி மலேசிய மக்கள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே எமது நோக்கம்.

இக்கூட்டமானது, வெறும் நிதி சேகரிப்பு கூட்டமாக மட்டும் முடிந்து விடாமல், இலங்கை அரசாங்கத்தின் இன்வெறி போரை வெளிப்படுத்தும் பிராச்சார கூட்டமாகவும் அமையும். இலங்கையில் நடக்கும் இன அழிப்பு போரை, தீவிரவாதத்திற்கெதிரான போர் என்ற போர்வையில் நடத்தும் இலங்கை அதிபர் இராஜபக்சேவின் போலி முகத்திரையையும் கிழிக்கும் கூட்டமாக இது அமையும். தமிழர் அல்லாத மற்ற மலேசியர்களுக்கு இலங்கையில் நடைபெறும் கொலைவெறி ஆட்டத்தை படம்பிடித்துக் காட்டி, மலேசிய மக்களிடத்தில் இலங்கை பொருட்களை புறக்கணிக்குமாறு கோரப்படும்.

இந்நிகழ்வு சம்பந்தமான விவரங்களை தத்தம் வலிப்பதிவுகளில் வெளியிட்டு, ஈழத்தமிழர் இன்னல் துடைக்க நம்மால் இயன்றதை செய்வோம். நிகழ்வு சம்பந்தமான படங்களை இவ்வலைப்பதிவில் தங்கள் உபயோகத்திற்காக பதிவிடுகிறேன். மேல் விவரங்கள், கீழ்காணும் வலைப்பதிவில் இடம்பெற்றுள்ளது. மற்ற விவரங்களுக்கு 016 - 438 4767 என்ற எண்ணில் எங்களை தொடர்பு கொள்க.

நன்றியுடன்,

மு. சத்தீஸ்,
செயலாளர்,
ஜசெக - ஈழத்தமிழர் நிவாரண நிதி

Sathis Kumar சொன்னது…

துவண்டவனையும் தட்டி எழுப்பக் கூடிய ஆற்றல் உங்களது கவிதை வரிகளுக்கு உண்டு..

தொடர்ந்து இதுபோன்று எழுதுங்கள்...

து. பவனேஸ்வரி சொன்னது…

ஷீ-நிசி கூறியது...
//ஹாய்! புவனா...

ஒரு தன்னம்பிக்கை கவிதை எழுதியமைக்கு என் வாழ்த்துக்கள். கவிதையில் இன்னும் மெருகேற்றியிருக்கலாம் என்பது என் கருத்து..

அன்புடன்
ஷீ-நிசி
nisiyas.blogspot.com//

வணக்கம் நண்பரே,
என் பெயர் புவனா அல்ல, பவனேஸ். நீங்கள் கூறியது உண்மைதான். கவிதையை மேலும் மெருகேற்றியிருக்கலாம். ஆனால், அந்த அளவிற்கு எமக்கு எழுத்தாற்றல் இல்லை. குற்றம் இருப்பின் பொருத்தருள வேண்டுகிறேன். எமது வலைப்பதிவை நோட்டமிட்டமைக்கும் தங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி.

து. பவனேஸ்வரி சொன்னது…

சதீசு குமார் கூறியது...
//துவண்டவனையும் தட்டி எழுப்பக் கூடிய ஆற்றல் உங்களது கவிதை வரிகளுக்கு உண்டு..

தொடர்ந்து இதுபோன்று எழுதுங்கள்...//

அவ்வாறான ஆற்றல் இருப்பதாகத் தாங்கள் கூறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன். தங்கள் கருத்துக்கு நன்றி.