ஞாயிறு, 1 மார்ச், 2009

காதல் மருந்து!


நினைத்ததெல்லாம்
கிடைக்கவில்லை
கிடைத்ததெல்லாம்
நிலைக்கவில்லை
நினைத்தது வேறு
நடந்தது வேறு
கேட்டது வேறு
கிடைத்தது வேறு!

இதுதான் வாழ்க்கையா
வெறுத்துவிட்டது எனக்கு
எத்தனைச் சுமைகள்
எத்தனைக் கஷ்டங்கள்
எத்தனைக் காயங்கள்
எத்தனை வலிகள்?

வலிக்கு மருந்தென
நினைத்து தவறுதலாக
நஞ்சைத் தேய்த்துவிட்டேன்
ஒவ்வொரு நொடியும்
மரித்துக்கொண்டிருக்கிறேன்!

10 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

காதலே மருந்து தான்.

மருந்து நோயும் தரும்

தீர்க்கவும் செய்யும்

நட்புடன் ஜமால் சொன்னது…

நினைத்ததெல்லாம்
கிடைக்கவில்லை
கிடைத்ததெல்லாம்
நிலைக்கவில்லை
நினைத்தது வேறு
நடந்தது வேறு
கேட்டது வேறு
கிடைத்தது வேறு!\\

வார்த்தைகள் மிக அழகு.

நட்புடன் ஜமால் சொன்னது…

நஞ்சைத் தேய்த்துவிட்டேன்
ஒவ்வொரு நொடியும்
மரித்துக்கொண்டிருக்கிறேன்!\\


நஞ்சும் ஒரு மருந்துதான்

அளவு எவ்வளவு என்பதை பொருத்து ...

து. பவனேஸ்வரி சொன்னது…

நட்புடன் ஜமால் கூறியது...
//காதலே மருந்து தான்.

மருந்து நோயும் தரும்

தீர்க்கவும் செய்யும்//

உண்மைதான் நண்பரே.

//வார்த்தைகள் மிக அழகு.//

நன்றிங்க.

//நஞ்சும் ஒரு மருந்துதான்

அளவு எவ்வளவு என்பதை பொருத்து ...//

ஆம். அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சுதானே? தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி.

நான் சொன்னது…

வாழ்க்கையில் சில கசப்பு மருந்துகளும் உண்டால் தான் நலமாக வாழ முடியும்,
ஆகவே கவலை வேண்டவே வேண்டாம்.

அபுஅஃப்ஸர் சொன்னது…

//நினைத்ததெல்லாம்
கிடைக்கவில்லை
கிடைத்ததெல்லாம்
நிலைக்கவில்லை
நினைத்தது வேறு
நடந்தது வேறு
கேட்டது வேறு
கிடைத்தது வேறு!\\
//

அதுதாங்க வாழ்க்கை..

எல்லாமே கிடைத்துவிட்டால் அப்புறம் வாழ்க்கையில் ஒரு சுவராஸ்யம் இருக்காது

புதியவன் சொன்னது…

//வலிக்கு மருந்தென
நினைத்து தவறுதலாக
நஞ்சைத் தேய்த்துவிட்டேன்
ஒவ்வொரு நொடியும்
மரித்துக்கொண்டிருக்கிறேன்!//

சோகமான வரிகள்...

து. பவனேஸ்வரி சொன்னது…

நான் கூறியது...
//வாழ்க்கையில் சில கசப்பு மருந்துகளும் உண்டால் தான் நலமாக வாழ முடியும்,
ஆகவே கவலை வேண்டவே வேண்டாம்.//

ஆம் ஐயா. கசப்பும் வாழ்க்கைக்குத் தேவைதான்... வாழும் வரை...

து. பவனேஸ்வரி சொன்னது…

அபுஅஃப்ஸர் கூறியது...
//நினைத்ததெல்லாம்
கிடைக்கவில்லை
கிடைத்ததெல்லாம்
நிலைக்கவில்லை
நினைத்தது வேறு
நடந்தது வேறு
கேட்டது வேறு
கிடைத்தது வேறு!\\
//

//அதுதாங்க வாழ்க்கை..

எல்லாமே கிடைத்துவிட்டால் அப்புறம் வாழ்க்கையில் ஒரு சுவராஸ்யம் இருக்காது//

ஒன்று இரண்டு கிடைக்கவில்லை என்றால் பரவாயில்லை. எதுவுமே கிடைக்கவில்லை என்றால் வலிக்கத்தானே செய்யும் நண்பரே?

து. பவனேஸ்வரி சொன்னது…

புதியவன் கூறியது...
//வலிக்கு மருந்தென
நினைத்து தவறுதலாக
நஞ்சைத் தேய்த்துவிட்டேன்
ஒவ்வொரு நொடியும்
மரித்துக்கொண்டிருக்கிறேன்!//

//சோகமான வரிகள்...//

சோகம் வேண்டாமே...