திங்கள், 15 டிசம்பர், 2008

ஓ, இலங்கை இராணுவமே!



இலங்கை இராணுவத்தினரின் அராஜகம் அத்துமீறிக் கொண்டிருக்கிறது! புலிகளிடம் நேருக்கு நேர் போரிட வலுவில்லாத கோழைகள் அப்பாவி மக்களின் இரத்தத்தைக் குடித்து தாகம் தீர்க்கின்றனர்.


ஏன் இந்த கொலைவெறி? தனிநாடு கேட்டது அப்படியென்ன பெரியதொரு குற்றமாகிவிட்டது? குடிகளை காத்து அரவணைக்க வேண்டிய இலங்கை அரசு தமிழ் மக்களிடம் மட்டும் ஏன் பாராபட்சம் காட்டவேண்டும்? சரி, போர்தான் மூண்டுவிட்டதே. அறப்போர் புரியவேண்டியது தானே? எதற்காக அப்பாவி மக்களைக் கொன்று குவிக்க வேண்டும்? இதுதான் இலங்கை இராணுவத்தினரின் வீரச்செயலா?


குடிகளின் பசியைத் தீர்க்க வக்கில்லை! அவர்களின் நோயைத் தீர்க்க மருந்தும் கொடுப்பதில்லை! நடப்பது அரசாட்சியா அல்லது பேயாட்சியா? எத்தனை முறை எத்தனைப் பேர் கண்டனம் தெரிவித்தும் அவிந்துப் போன மூளைக்கு விளங்கவில்லை போலும்! அப்பாவி மக்களை ஏனடா கொன்று குவிக்கின்றீர்?


இலங்கை இராணுவமே! மனதில் தைரியம் என்ற ஒன்று உண்டென்றால் புலிகளிடம் நேரடியாக மோது! அதைவிடுத்து அப்பாவி மக்களைச் சித்திரவதைச் செய்யாதே! மனிதாபிமானம் என்ற ஒன்று உண்டல்லவா? மன்னிக்கவும்! தவறான கேள்வி...மனிதர்களிடம் கேட்க வேண்டிய கேள்வியை வெறி நாய்களிடம் கேட்டால் பதில் எங்கே கிடைக்கப்போகிறது?!


என்ன பாவம் செய்தது அந்த பிஞ்சுக் குழந்தை? உனது கண்மூடித்தனமான தாக்குதலுக்கு அந்தச் சிசு தானா பலியாக வேண்டும்? இலங்கை இராணுவ மிருகங்களே, உங்களுக்கு ஈவிறக்கமே கிடையாதா? இதயமில்லா ஜந்துக்களே, கேளுங்கள்! என்னருமை தமிழீழச் சகோதரர்கள் உங்களை வெற்றிக்கொள்ளும் நாள் வெகுதூரம் இல்லை! விரைவில் தனிநாடு உருவாகும்!


நீங்கள் சிதைத்து சுடுகாடாய் ஆக்கிவிட்டப் போன இடங்கள் தமிழ் சுவாசம் பெற்று நந்தவனமாய் குலுங்கும்! விடிவு வெகுதூரம் இல்லை; அதனை அடைவதற்கு வெகுநாட்களும் இல்லை! புலிகள் புத்தாடை உடுத்தி புல்லாங்குழல் வாசிக்கும் நாள் விரைவில் வரும். குழலின் இசைக்கேற்ப ஆடுவதற்கு, ஓநாய்களே, நீங்கள் தயாராக இருங்கள்!!!


குறிப்பு: இன்றைய மக்கள் ஓசை நாளிதழில் இலங்கை இராணுவத்தின் தாக்குதலால் ஐந்து மாதக் குழந்தைப் பலியான செய்தியைக் கண்டேன். ஜீரணிக்க முடியவில்லை. மனம் வலிக்கிறது... அதன் வெளிப்பாடே மேற்கண்ட கட்டுரை.

7 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

\\மனிதாபிமானம் என்ற ஒன்று உண்டல்லவா? மன்னிக்கவும்! தவறான கேள்வி...மனிதர்களிடம் கேட்க வேண்டிய கேள்வியை வெறி நாய்களிடம் கேட்டால் பதில் எங்கே கிடைக்கப்போகிறது?!\\

வெறி நாய்களுக்கு கோபம் இவர்களை நாய்கள் என்றால்.

நட்புடன் ஜமால் சொன்னது…

\\இன்றைய மக்கள் ஓசை நாளிதழில் இலங்கை இராணுவத்தின் தாக்குதலால் ஐந்து மாதக் குழந்தைப் பலியான செய்தியைக் கண்டேன். ஜீரணிக்க முடியவில்லை. மனம் வலிக்கிறது... அதன் வெளிப்பாடே மேற்கண்ட கட்டுரை.\\

எந்த உயிர் போயினும் வலிகொண்டோம்.

அதுவும் சிறு பிள்ளை

பாதகற்களே நிறுத்துங்கள் உங்கள் ஆண்மை என்று சொல்லி கொல்லும் பேடிதனத்தை.

புதியவன் சொன்னது…

உணர்வுப் பூர்வமான எழுத்துக்கள்...உள்ளத்தை உறையச் செய்கின்றன...

logu.. சொன்னது…

\\என்ன பாவம் செய்தது அந்த பிஞ்சுக் குழந்தை? உனது கண்மூடித்தனமான தாக்குதலுக்கு அந்தச் சிசு தானா பலியாக வேண்டும்? இலங்கை இராணுவ மிருகங்களே, உங்களுக்கு ஈவிறக்கமே கிடையாதா? இதயமில்லா ஜந்துக்களே, கேளுங்கள்! என்னருமை தமிழீழச் சகோதரர்கள் உங்களை வெற்றிக்கொள்ளும் நாள் வெகுதூரம் இல்லை! விரைவில் தனிநாடு உருவாகும்!\\

athuthaan ovvoru tamil nenjathinudaiya aasaium kooda.
feel panna vachuduchu
unga lines.

பெயரில்லா சொன்னது…

//புதியவன் கூறியது...
உணர்வுப் பூர்வமான எழுத்துக்கள்...உள்ளத்தை உறையச் செய்கின்றன...//

வழிமொழிகிறேன் :-(

து. பவனேஸ்வரி சொன்னது…

வணக்கம்,

அதிரை ஜமால், நீங்கள் கூறுவது உண்மைதான். வெறி நாய்கள் கூட்டத்தில் கூட இவர்களைச் சேர்த்துக்கொள்ள முடியாது!

//பாதகற்களே நிறுத்துங்கள் உங்கள் ஆண்மை என்று சொல்லி கொல்லும் பேடிதனத்தை.//

அருமை! இவர்களை அராஜகத்திற்கு வெகுசீக்கிரமே முடிவு பிறக்கும்!

புதியவன் மற்றும் இனியவள் புனிதாவின் கருத்துக்கு நன்றி... சிறிது உணர்ச்சிவயப்பட்டதால் உருவான எழுத்து...

லோகு, வருந்த வேண்டாம். விரைவில் புலிகள் வெற்றிப்பெறுவர்!

நான் சொன்னது…

உங்கள் பதிவிற்கு நன்றி
அவர்கள் இராணுவம் அல்ல மனித உயிர்களை சாப்பிடும் நரமாமிசபட்சிகள்