நேற்றுவரை
நீ குடியிருந்த இதயம்
இன்று இருட்டில் கிடக்கின்றது
இதயத்தின் ஒளியாகிய நீயே
எனக்கென்ன? என்று சென்றபின்
ஒளியும் ஒரு கேடா?
எவ்வளவு குதூகலமாய்
என் இதய வீட்டில் குடிகொண்டாய்
வண்ண விளக்குகளால் அலங்கரித்தாய்
கூட்டிப் பெருக்கிச் சுத்தம் செய்தாய்
தண்ணீர் தெளித்துக் கோலம் போட்டாய்
சுண்ணாம்பு பூசி புதுமை தந்தாய்?
என் இதயம் கோவிலல்ல
அதில் நீ தெய்வமும் அல்ல
உனக்குப் பூசை செய்யவுமில்லை
மலர் மாலை சூட்டவுமில்லை
உன் நாமம் ஜெபித்ததும் இல்லை
உன்னை நான் வணங்கவும் இல்லை!
இதயத்தை வீடாய் வைத்தேன்
உன்னை அதில் வசிக்கும் ஒருவனாய்
என்னைப் போல் சராசரி மனிதனாய்
என் மனதைத் தெரிந்த அறிஞனாய்
வாழ்வைப் பகிர்ந்துக்கொள்ளும் கணவனாய்
நினைத்ததில் தவறேதும் உண்டோ?
நீ குடியிருந்த இதயம்
இன்று இருட்டில் கிடக்கின்றது
இதயத்தின் ஒளியாகிய நீயே
எனக்கென்ன? என்று சென்றபின்
ஒளியும் ஒரு கேடா?
எவ்வளவு குதூகலமாய்
என் இதய வீட்டில் குடிகொண்டாய்
வண்ண விளக்குகளால் அலங்கரித்தாய்
கூட்டிப் பெருக்கிச் சுத்தம் செய்தாய்
தண்ணீர் தெளித்துக் கோலம் போட்டாய்
சுண்ணாம்பு பூசி புதுமை தந்தாய்?
என் இதயம் கோவிலல்ல
அதில் நீ தெய்வமும் அல்ல
உனக்குப் பூசை செய்யவுமில்லை
மலர் மாலை சூட்டவுமில்லை
உன் நாமம் ஜெபித்ததும் இல்லை
உன்னை நான் வணங்கவும் இல்லை!
இதயத்தை வீடாய் வைத்தேன்
உன்னை அதில் வசிக்கும் ஒருவனாய்
என்னைப் போல் சராசரி மனிதனாய்
என் மனதைத் தெரிந்த அறிஞனாய்
வாழ்வைப் பகிர்ந்துக்கொள்ளும் கணவனாய்
நினைத்ததில் தவறேதும் உண்டோ?
இங்கேப் பார்!
நீ குடியிருந்த வீடு இன்று
ஈக்கள் மொய்க்கும் குப்பையாய் நாறி
ஒளியிழந்து பொலிவிழந்து மங்கி
பயனற்ற பொருளாய் மதிப்பிழந்து
பாழாய்ப் போவதைப் பார்!
அன்று நீயிருந்த வீட்டில்
இன்று எலிகளும் பூனைகளும்
ஓடி விளையாடி சண்டையிட்டு
எகத்தாளமாய் என் முன்னே கண்ணடித்து
நக்கலாய், கேளியாய், கிண்டலாய்
கைக்கொட்டிச் சிரிக்கின்றன!
13 கருத்துகள்:
கவிதை நன்றாக இருக்கிறது...
சோகமும் வாழ்க்கையில் அனுபவிக்க
வேண்டிய உணர்வு தான்...
ஆனால் அது மட்டுமே உணர்வு இல்லை...
இப்படிப்பட்ட எழுத்துக்களால் உங்கள்
மனச்சுமை குறையுமெனில் தொடர்ந்து எழுதுங்கள்...
மொத்ததில் கவிதையின் வரிகளும் வலிகளும் நன்றாகவே உள்ளன.
வாழ்க்கையில் நிறைய வலி தாங்கியிருக்கலாம்,
வலி தாங்கியே ஏன் இருக்க வேண்டும் என நினைத்து இங்கு சுமை இருக்க வந்தீர்களோ ...
இருப்பினும் வலிகள் தாண்டி, தாங்கி தான் வாழ்க்கை செல்ல வேண்டியுள்ளது.
உங்கள் வார்த்தை பிரயோகங்கள் நன்றாக உள்ளது.
அதை கொண்டு சற்றே மகிழ்வானவைகளையும் எழுதுங்களேன்.
வாவ்..எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க? ஆனாலும் உங்க இதய வீட்டில் எலியெல்லாம் மேய விடாதீங்க..அப்புறம் 'ப்ளேக்' வந்திடும்.. Juz kidding..good one!!!
வலிகளை வரிகளில்
வார்ப்பது ஒருவிதம்
வடிப்பது ஒருவிதம் - அந்த
இருவிதமும் உன்னிடம் - இனி
வரைந்திடுக நிதம்நிதம்... அதுவும்
விதம்விதம்!
வாழ்த்துக்கள்.
வலிகள் தாங்கிய வார்த்தைகள் யாவும் வலிமையானதே..
கவிதை சூப்பர்:))
valigal thangiya
vaarthaikal enraalum
vasanthamai en nenjil veesiyathu..
Keep it up..
nallarukkunga.
ஏன் இவ்வளவு விரக்தியாய் ஒரு கவிதை
periven valiyai azakaka unarthi irukerathu ungal kavithai varigal
அணில் - என்ன சொல்லுது
உங்க புகைப்படத்தில் உள்ளதைச்சொன்னேன்.
நல்லா இருக்குதுங்க கவிதை.. ரொம்ப இயல்பா வந்திருக்குது
யார் தங்கிய வீடு ?
புதியவன் கருத்துக்கு நன்றி... சுமை குறையுமென்றுதான் எழுதுகிறேன்...எழுதிக்கொண்டேதான் இருக்கிறேன்...
அதிரை ஜமால் கருத்துக்கு நன்றி. மகிழ்வானவற்றைக் கண்டால், உணர்ந்தால், நிச்சயம் எழுதுவேன்...
புனிதாவின் கருத்துக்கு நன்றி. 'ப்ளேக்' வந்தாலும் தேவலாம் போங்க...
விக்கினேசுவின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. கவிதையாகவே கருத்து சொல்லியிருக்கிறீர். அருமை.
பூர்ணிமா சரனின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
லோகுவின் கருத்துக்கு நன்றி... உங்கள் வாழ்வில் என்றும் வசந்தம் வீச என் வாழ்த்துக்கள்.
நான் அவர்களுக்கு வணக்கம். கவிதை அவ்வளவு விரக்தியாக இருப்பதாக தோன்றவில்லையே....
காயத்ரியின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி... பிரிவின் வலியல்ல தாயே...இது உயிரின் வலி!
அதிரை ஜமால், அணிலிடம் கவிதைக் கேட்டுக்கொண்டிருந்தேன். போதுமா?
சென்ஷியின் கருத்துக்கு நன்றி.
பிரகாஷின் வருகைக்கு நன்றி... கேள்விக்கு விடை அவசியம் வேண்டுமா?
கருத்துரையிடுக