திங்கள், 15 டிசம்பர், 2008

எப்படிய்யா மனசு வந்துச்சு?ஐந்து வயதல்ல...
ஐந்து மாத குழந்தை அய்யா
ஈவிரக்கமின்றி கொல்வதற்கு
எப்படிய்யா மனசு வந்தது?

அம்மா வாங்க, அய்யா வாங்க
அஞ்சடியில் படுத்துறங்கும்
எந்தமிழன் நிலை கேளுங்க...


காசு பணம் கேட்கல
ஆட்சியைப் பறிக்கல
சொந்தம்னு சொல்லிக்க
தனிநாடு கேட்டோமய்யா
செந்தமிழ்நாடு கேட்டோமய்யா!


என்ன தவறுன்னு எனக்கும் புரியல
அடிக்கிறானுங்க, விரட்டுறானுங்க
வெறி நாய் மாதிரி கடிக்கிறானுங்க!


என்னைக் கொன்னா
சந்தோஷமா சாவேன்
இனத்தையே கொன்னா
என்னய்யா செய்வேன்?


சங்கம் வச்சி வளர்த்த மொழிய
நாங்க பேசினா சங்கை அறுக்கிறானுங்க!
எங்கே போய் முறையிடுவேன்?
யார்கிட்ட போய் உதவி கேட்பேன்?


அழகா பேசிப் பார்த்தோம்
அரசாங்கம் அசையவில்லை
தெளிவா முடிவைச் சொன்னோம்
அலட்சியம் பண்ணவில்லை!


ஆயுதம் ஏந்திதான்
தனிநாடு கிடைக்கும் என்றால்
அதுக்கும் துணிந்துவிட்டோம்
துணிவிருந்தால் மோதிப் பார்ப்போம்!


பள்ளிக்கு போற பச்சப்புள்ள
காட்டுல பயிற்சி எடுக்குதய்யா
துள்ளிக்குதிக்கிற வயசுப்புள்ள
காக்கிசட்டைக்குள்ள முடங்குதய்யா!


இன மான உணர்வுக்காக
இரும்பாக்கினோம் உணர்ச்சியெல்லாம்
எந்தமிழ் மொழிக்காக சமர்ப்பித்தோம்
ஈழத் தமிழ் மக்கள் உயிரையெல்லாம்!


பூச்சூட வேண்டிய கன்னிப்பொன்னு
புலியாகி உலவுது காட்டுக்குள்ள
மக்களைக் காக்கும் ராணுவம்
நாயாகி வேட்டையாடுது ஊருக்குள்ள!


மனசாட்சி இல்லாம
மனுசங்கள சுட்டுப்போட்டான்
ஈவிறக்கம் இல்லாம
அராஜகம் செஞ்சி வரான்!


போராடுறோம் போராடுறோம்
உயிருக்காக இல்ல அய்யா
இன மான உணர்வுக்காக...
உயிர் கொடுத்து போராடுறோம்
தனிநாடு பெறுவதற்காக!


குண்டு பாஞ்சா தாங்கும் நெஞ்சு
செய்தி பார்த்து ஒடிஞ்சிப் போச்சி!


தமிழ் மண்ணின் கால் பதிச்சு
துள்ள வந்த பச்சப்புள்ள
கலியுக உலகில் வாழ
பிறவியெடுத்த பிஞ்சுப்புள்ள
ராணுவத் தாக்குதல்ல செத்துப்போச்சு
ஐந்து மாத சின்னப்புள்ள!


9 கருத்துகள்:

அதிரை ஜமால் சொன்னது…

வந்துட்டேன் ...

அதிரை ஜமால் சொன்னது…

\\பள்ளிக்கு போற பச்சப்புள்ள
காட்டுல பயிற்சி எடுக்குதய்யா
துள்ளிக்குதிக்கிற வயசுப்புள்ள
காக்கிசட்டைக்குள்ள முடங்குதய்யா!\\

வேதனையாக உண்ர்ந்தேன் இவ்வரிகளில்

அதிரை ஜமால் சொன்னது…

\\பூச்சூட வேண்டிய கன்னிப்பொன்னு
புலியாகி உலவுது காட்டுக்குள்ள
மக்களைக் காக்கும் ராணுவம்
நாயாகி வேட்டையாடுது ஊருக்குள்ள!\\

என்ன சொல்வது என்று தெரியவில்லை

ஏதேனும் சொல்ல வார்த்தை வரவில்லை.

அதிரை ஜமால் சொன்னது…

\\தமிழ் மண்ணின் கால் பதிச்சு
துள்ள வந்த பச்சப்புள்ள
கலியுக உலகில் வாழ
பிறவியெடுத்த பிஞ்சுப்புள்ள
ராணுவத் தாக்குதல்ல செத்துப்போச்சுஐந்து மாத சின்னப்புள்ள!\\

குலம் கட்டியது என் கண்கள்
அப்பாவி உயிர்களை கொல்லுகின்றன
பாவிகளின் கன்-கள்

VIKNESHWARAN சொன்னது…

நெஞ்சை கனக்கச் செய்யும் துணுக்குத் தோரண வரிகள், பாராட்டுகள்... மேலும் எழுதுக...

இனியவள் புனிதா சொன்னது…

மனதை நெகிழ வைக்கும் வரிகள் :-)

புதியவன் சொன்னது…

//என்னைக் கொன்னா
சந்தோஷமா சாவேன்
இனத்தையே கொன்னா
என்னய்யா செய்வேன்?//

உணர்வின் வலி வரி முழுதும் தெரிகிறது...

து. பவனேஸ்வரி சொன்னது…

வணக்கம்,

அதிரை ஜமாலின் கருத்துகளுக்கு நன்றி... நமக்கு கண்கள் மட்டுமே குளமாகின்றன... அங்கோ, நம் தமிழீழ சகோதரர்களின் இரத்தம் அல்லவா குளமாகத் தேங்கி நிற்கின்றது?

விக்னேஸ்வரனின் கருத்துக்கு நன்றி...கனமாவது நெஞ்சம் மட்டுமல்ல நம் கண்களும் தான்...

இனியவள் புனிதாவின் கருத்துக்கு நன்றி. நெகிழத்தான் செய்தது, மனமும் என் உயிரும்...

புதியவனின் கருத்துக்கு நன்றி... வலி தாங்காமல் தான் கவிதையாக வடித்துள்ளேன்...

நான் சொன்னது…

வலிக்கிறது என்ன செய்வது தமிழனே இன்னும் உணர்ந்துகொள்ளவில்லையே
உங்களுக்கு நன்றி