வெள்ளி, 4 நவம்பர், 2011

மனுநீதி

இது மிகவும் அநீதியானது. அண்மையில் தமிழகம் சென்ற போது  திருச்சி. கே. செளந்தரராசன் எழுதிய இந்தப் புத்தகத்தை வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஒற்றுமையாக வாழ்ந்து வந்த தமிழ்ச் சமூகத்திடையே ‘மனுதர்ம சாஸ்திரத்தை’ திணித்து, சாதி என்னும் கொடிய நோயை ஆரியர்கள் பரப்பியுள்ளனர். ‘மனுநீதி’ இந்துக்களின் பண்டையகால நீதிநூல் என இதுவரையில் உலக வரலாற்றில் படித்துள்ளேன். முதன் முறையாக அதனுள்ளே இருக்கும் சில அநீதிகளையும் அசிங்கங்களையும் படிக்கும் வாய்ப்புக் கிட்டியது.

நீதி என்றாலே அது அனைவருக்கும் பொதுவாகவும் சமமாகவும் இருக்க வேண்டும். ஆனால், ‘மனுநீதி’ சொல்வது என்ன? ஒரு குலத்துக்கொரு நீதி என்ற வகையில் மிகவும் அநியாயமாக இருக்கிறது. அதுமட்டுமின்றி சூத்திரன் என்பவன் விபச்சாரியின் மகன் என்றும் கொச்சைப்படுத்துகிறது. இப்படிப்பட்ட நூல் இன்னமும் இந்துக்களின் அடிப்படைச் சட்டமாக இந்தியாவில் அமல்படுத்தப்படுகிறது என்பது வேதனைக்குரிய விடயம்.

இந்த நூலில் இந்துத் தெய்வங்களின் வெட்கம் கெட்ட வரலாறு குறித்தும் எழுதப்பட்டுள்ளது. பரசிவன்-பார்வதி திருமணத்தின் போது பிரம்மன் பார்வதியின் தொடையைப் பார்த்து இச்சைக் கொண்டதும், அதனால் தோன்றிய இந்திரியத்திலிருந்து பிறந்தர்கள்தான்  அகஸ்தியன், சல்லியன், மண்டோதரி என்று மனுதர்மம் கூறுகிறது. அதுமட்டுமின்றி குழந்தைப் பெறுவதற்காக ஒருவன் தனது தாய், தமக்கை, மகள் என யாரோடு வேண்டுமானலும் கூடிப் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழர்களின் ஒழுக்கத்தையே குழி தோண்டிப் புதைக்கிறது மனுநீதி! மிருகம் முதல் மகள் வரை அனைவருடனும் கூடிப் புணர்ந்த பிரம்மாவின் யோக்கியதையை மனுநீதி எடுத்துரைக்கிறது.

அதுமட்டுமின்றி, நமது கடவுள்கள் ஓரினச் சேர்க்கையிலும் ஈடுபட்டுள்ளதாக மனுதர்மம் கூறுகிறது. அதாவது, பிரம்மனும் பரமசிவனும் கூடிப்புணர்ந்து ‘ஐயப்பன்’ எனும் பிள்ளையைப் பெற்றதாக அது தெரிவிக்கின்றது! அத்தோடு நில்லாமல், விஷ்ணுவும் நாரதரும் புணர்ந்து 60 பிள்ளைகளைப் பெற்றிருக்கிறார்கள்! இப்போதுதான் ஏன் நாரதர் அடிக்கடி விஷ்ணு புராணம் பாடுகிறார் என்று தெரிகிறது.

பிராமணனை முன்னிலைப் படுத்தும் மனுநீதி, சூத்திரன் என்று கூறப்படுபவர்களை மிருகத்திலும் கேவலமாகச் சித்தரிக்கிறது. அதுமட்டுமின்றி பிராமணன் சொல் படிதான் அரசாங்கம் இயங்க வேண்டும் என்றும் மனுநீதி சொல்கிறது. இதுதான் நீதியா? பெண் என்பவள் எப்போதும் சுயமாகச் செயல்படக் கூடாது. இளமையில் தந்தையின் கண்காணிப்பிலும், பின்னர் கணவனின் கண்கானிப்பிலும், கணவன் இறந்த பிறகு பிள்ளைகளின் கட்டுப்பாட்டிலும் இருக்க வேண்டும் என மனுதர்மம் குறிப்பிடுகிறது.

இதுதான் நமது தர்மமா? இப்படிப்பட்ட  அசிங்கமான, அநீதியான ஆரியர்கள் அறிமுகப்படுத்திய நீதி நூல் நமக்குத் தேவையா? இந்த நூலைப் படித்தப் பிறகு இந்து தெய்வங்களைப் பற்றி ஒருவன் எப்படி மேலான கொள்கைகளைக் கொண்டிருக்க முடியும்? அல்லது மனுநீதியை எப்படி முழுமனதாக ஏற்றுக்கொள்ள முடியும்? இத்தகைய நூல் இந்துக்களின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நூலாக இருப்பது கொடுமையிலும் கொடுமை! கடவுள், கடவுள் என்று மனிதனையும் மனிதத் தன்மையையும் மறந்தவர்கள் மனுநீதி கூறும் கதைகளுக்கு விளக்கம் கொடுத்தாலோ, அல்லது நியாயப்படுத்தினாலோ தேவலாம்! வாய்ப்பிருந்தால் நீங்களும் ஒரு முறைப் படித்துப் பாருங்கள் தோழர்களே.

6 கருத்துகள்:

J K சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
J K சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Karthikeyan சொன்னது…

எழுதிவர்கள் மீது பிழை இல்லை புரிதல் சரியில்லை.

பிராமணனுக்குரிய தர்மம் இறைவனை தேடுபவர்களுக்கு உரியது. அதாவது இன்றைய பிராமணர்கள் யாரும் பிராமணர் இல்லை. சத்ரியனுக்கு உரிய தர்மம் நாட்டை ஆளும் ஆட்சி செய்யும் உயர் அதிகாரிகளுக்கு உரியது . வைசியனுக்கு உரிய தர்மம் பணத்தை போட்டு சொந்தமாக தொழில் செய்வோனுக்கு உரியது. சூத்திரனுக்கு உரிய தர்மம் எல்லா வேலையாட்களுக்கும் உரியது. அதாவது சில நேரம் நாம் பிரமனனாகவோ சில நேரம் சூத்திரனாகவோ இருக்ககூடும். எப்ப எதோ அப்பா அது.

மேலும் புராணங்கள் அனைத்தும் தத்துவார்த்தம்.
தேவர்களுக்கும் அந்தக்கரணம் உண்டு என்பதை குறிக்கவும்.
பெண்ணின் அங்கத்தை பார்த்தால் இச்சை வரும் ஓரினசேர்கையும் incest வகை உறவுகளும் உலகத்தில் உண்டு என்பதை தெரிவிக்கவும். பரிபாசையாக முடித்து வைக்கப்பட்ட தத்துவங்கள். இறைவனை தேடும் யோகிக்கு மட்டும் இந்த முடிச்சுகள் அவிழ்க்கப்படும். மற்றவருக்கு புரியாத புதிர்

விஷ்ணு என்பது பரமாத்மா நாரதா என்பது ஜீவாத்மா 60
என்பது நான்கு யோகம் தவிர்த்த ஏனைய 60 கலைகள்.
யோகிக்கு 60 கலையும் சாத்தியம்.நான்கு யோகத்தின் மூலமாகவே கலைகள்.

J K சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Karthikeyan சொன்னது…

சூத்திரன் விபசாரியின் மகன் என்பதன் தத்துவம். விபசாரியின் மகன் விபசாரிக்கு பணம் கொடுப்பவனிடம் அடங்கி நடக்க வேண்டும். ஒரு போதும் தன் உள்ளுணர்வை நேரடியாக வெளிப்படுத்த முடியாது. அதை போன்றே வேலைக்கு செல்லும் எல்லோரும் தன் தலைமை இடத்துக்கு அடங்கி நடக்க வேண்டி வரும் என்பது மறை பொருள்.


http://www.facebook.com/velkarthikeyan

ஜெகதீஸ்வரன் நடராஜன் சொன்னது…

எந்த பதிப்பகம் வெளியிட்டது போன்ற தகவல்களை சொன்னால் வாங்கி படிக்க ஏதுவாக இருக்கும். இது மூலமா இல்லை சாரமா