செவ்வாய், 19 ஏப்ரல், 2011

இறைவா…இருக்கின்றாயா???



இறைவா!!!
எங்கே இருக்கிறாய்?
எமது சகோதரிகள் கதறியழுகிறார்களே
உமது காதில் விழவில்லையா?

கூட்டம் கூட்டமாக
அவர்களது கற்பு சூறையாடப்படுகிறதே
அதனை நீ பார்க்கவில்லையா!
எங்களைக் காப்பாற்றுங்கள் என்று
ஓலமிட்டு அலறுகிறார்களே
உன் காதுகளைப் பொத்திக்கொண்டாயா?

உம்மைச் சிலையாகப் பார்த்ததினால்
கல்லாக சமைந்து விட்டாயா?
இறைஞ்சி அழைப்பதனால்
இம்சையென்று ஒதுக்கிவிட்டாயா?

பிறவி கொடுக்கும் பிறப்புறுப்பில்
துப்பாக்கி வைத்துச் சுட்டால்
என்ன துடிதுடிப்பாள்-அவள்
எப்படி மடிந்திருப்பாள்?

நிழற்படத்தைப் பார்க்கும் போதே
அடிவயிறும் கலங்கிடுதே
அவள் பட்டத் துன்பம் எண்ணும் போது
உடல் ஆவிப் பிரிகிறதே!

ஏன் படைத்தாய் இறைவா
துடிதுடித்துச் சாகத்தானோ?
வாழும் இளம் குருத்து
வெயிற்பட்டு வேகத்தானோ?

6 கருத்துகள்:

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

இறைவன் என்று ஒருவன் இருந்திருப்பான்.. இந்த கொடுமை கண்டு பொறுக்க மாட்டாது தற்கொலை செய்திருப்பான்

து. பவனேஸ்வரி சொன்னது…

உண்மைதான் நண்பரே...

பெயரில்லா சொன்னது…

facebook page என்ன ஆச்சு?

து. பவனேஸ்வரி சொன்னது…

அட, தேடி இங்கேயும் வந்துவிட்டீர்களா? சிறிது காலத்திற்கு சமூக வலைத்தலத்திலிருந்து ஒதுங்கியிருக்கலாம் என்ற எண்ணத்தில் தற்காலிகமாக முடக்கி வைத்துள்ளேன் நண்பரே.

பெயரில்லா சொன்னது…

தமிழச்சியின் பக்கத்தில் நீங்கள் எழுதியது நன்றாக இருந்தது....கோபப்படாமல் சிலரிடம் அளவோடு வாக்குவாதத்தை வைத்துக்கொண்டால் தேவை இல்லாத பிரச்சனைகளை தவிர்க்கலாமே.....

து. பவனேஸ்வரி சொன்னது…

எப்படி அய்யா கோபப்படாமல் இருப்பது? எனக்கு மட்டும் வாக்குவாதம் புரிய ஆசையா என்ன? சில சமயங்களில் சிலர் கதைக்கும் விதம் எம்மையும் அறியாமல் உணர்ச்சிவயப்பட வைக்கிறது.அவ்வளவே....யார் மீதும் தனிப்பட்ட முறையில் எமக்குக் கோபம் கிடையாது. தவிர சமீப காலமாக நிறைய நபர்கள் தேடி வந்து வாக்குவாதம் செய்கின்றனர். மிரட்டல்களும் குவிகின்றன. இவற்றிலிருந்து தற்காலிக ஓய்வுக்காகவே முகநூலை முடக்கி வைத்துள்ளேன். உங்கள் அன்பிற்கு நன்றி :) மனம் நெகிழ்ந்தேன்.