திங்கள், 21 பிப்ரவரி, 2011

உடல் இங்கே உயிர் அங்கே



விரும்புகிறேன்
உன்னை விரும்புகிறேன்
உன்னோடு சேர்ந்து வாழ
மிகவும் விரும்புகிறேன்!

சொந்தம் என்ன சொல்லுமோ
பந்தம் என்னை இகழுமோ
குடும்பத்தில் உன்னைப் பிடிக்குமோ
கரம் பிடிக்கக் கூடுமோ?

உடல் மட்டும் இங்கே
உயிர் உன்னோடு அங்கே
இதயம் மட்டும் இங்கே
நினைவுகளெல்லாம் அங்கே!

காலங்கள் வேகமாய்
இறக்கைக் கொண்டு பறக்குமா
நம் வயதுதான் சீக்கிரம்
ஏணி வைத்து ஏறுமா?

இறுதிவரை உன் காதல்
மாறாமல் வளருமா?
காலங்கள் கடந்த பின்னர்
சலித்துப் போய் தேயுமா?

அச்சமாக உள்ளதே
மனதில் ஆசை துள்ளுதே
உன் நினைவு வாட்டுதே
காதல் என்னைக் கொல்லுதே!

என்னருகில் நீ வேண்டும்
உன் தோளில் சாயவேண்டும்
உன்னருகில் நான் வேண்டும்
என் மடியில் உறங்க வேண்டும்!

குழந்தைப் போல் உன்னை
செல்லமாய் கொஞ்ச வேண்டும்
உன் மனதில் என்றுமே
நான் மட்டும் இருக்க வேண்டும்!

எனக்கு நீ வேண்டும்
உனக்குள் நான் வேண்டும்
ஈருடல் ஓருயிராய்
என்றுமே வாழ வேண்டும்!

கனவுகள் வருதே
தனிமையில் சுடுதே
பகலெல்லாம் உறைகிறதே
இரவெல்லாம் கரைகிறதே!

மனதினிலே சிலுசிலுப்பு
கனவினிலே சலசலப்பு
இமைகளில் துடிதுடிப்பு
இதயத்தில் படபடப்பு!

சாகும் வரை உன் காதல்
உறுதியாய் இருக்குமா?
எதிர்ப்புகள் வந்தாலும்
சமாளித்து நிற்குமா?

4 கருத்துகள்:

logu.. சொன்னது…

Kathalla santhegamlam koodathu pavans..


Kavithai nallarukku.

து. பவனேஸ்வரி சொன்னது…

லோகு: சந்தேகம் என்று கூற முடியாது. இது ஒரு வகை பயம் கலந்த உணர்வு நண்பரே :)

ஜூலியட் சொன்னது…



உணர்வு பயப்படும் படி
உறவுகள் உள்ளதென்றால்
அது யாரின் தவறு

ஜூலியட் சொன்னது…


பொங்கல் நல் வாழ்த்துக்கள்