திங்கள், 20 டிசம்பர், 2010

தூற்றுவார் தூற்றட்டும்!


வாழ்த்துகளுக்கு மதி மயங்கிப் போவதும்
வசை மொழிகளால் மனமுடைந்து போவதும்
எழுத்துக்களுக்கு வடிகால் போடுவதும்
பழக்கமில்லை எமக்கு!

முகத்தையும் முகவரியையும் மறைத்துக்கொண்டு
அனைத்தும் அறிந்தவன் போல் பேசிக்கொண்டு
கொச்சைத் தமிழில் எழுதிக்கொண்டு
மார் தட்டுகிறாய் எம் இனத்தைக் கொன்று!

காட்டிக் கொடுப்பதும் கூட்டிக் கொடுப்பதும்
‘கருநாய்நிதி’ வழி வந்த உமக்கு சகஜம்தான்
வால் பிடிப்பதும் கால் பிடிப்பதும்
பிரபாகரன் வழி வந்த எமக்கு பழக்கமில்லை!

உன் ஆதாரமற்ற பேச்சுக்கு
ஆத்திரப்பட்டு அறிவிழப்பேன் என்றோ
கவலைக் கொண்டு கண்ணீர் வடிப்பேன் என்றோ
எம் பிழை என்று மன்றாடுவேன் என்றோ நினைத்தாயோ?

உன் கூறுகெட்ட எழுத்தே
தப்பான தலைவன் பக்கம் நீ நிற்பதை
மேளம் கொட்டி தாளம் தட்டி
கூப்பாடு போட்டுச் சொல்கிறதே!

யாருக்கு வேண்டும் உன் குடியுரிமை?
குடிகெடுக்கும் தலைவனுக்கு ஓட்டுப் போட்டு
இலவசப் பொருட்களுக்கு ஆசைப்பட்டு
இன மான உணர்வை அடகு வைக்கவா?

இந்தியன் என்ற சொல்லைவிட
தமிழன் என்று சொல்லி
தலை நிமிர்ந்து மார் தட்டி
உலகெங்கும் சுற்றுவேன் நான்!

கருத்தே இல்லாத உன் கருத்துகளை
நான் நீக்கப்போவதும் இல்லை
அதனால் மனம் உடைந்து எம் எழுத்துகளை
நிறுத்தப் போவதும் இல்லை!

போற்றுவார் போற்றட்டும்
தூற்றுவார் தூற்றட்டும்
அது எண்ணிக்கை இல்லா கணக்கு
கவலை இல்லை எமக்கு!

11 கருத்துகள்:

ப.கந்தசாமி சொன்னது…

நன்றாக இருக்கிறது.

logu.. சொன்னது…

sariyaga sonnai pavans..
antha mathiri payalungaluku ithellam paththathu..

padam pattaiya kelapputhu..

Unknown சொன்னது…

நல்ல கோபம் கொப்பளிக்கும் கவிதை ஆனால் அதனை சரிவர சொல்லமுடியாது குழம்பியுள்ளீர்கள் .. அடுத்த முறை எழுதும்போது பலமுறை படித்து அதன்பின் திருத்தி எழுதினால் நிச்சயம் சிறப்பாக வரும் ..

மற்றபடி இன உணர்வுள்ள உங்கள் எழுத்துக்கு என் வந்தனம் ...

"உழவன்" "Uzhavan" சொன்னது…

மிகச் சரியான கவிதை

பெயரில்லா சொன்னது…

வஞ்சியே
நியாயமற்ற வரிகளின்

நெறிஞ்சிமுள் வலியினால்

நெஞ்சம் கணன்றதன்

நீள்நடுக்கம் கண்டேன்

chadrasekaran சொன்னது…

வஞ்சியே
நியாயமற்ற வரிகளின்

நெறிஞ்சிமுள் வலியினால்

நெஞ்சம் கணன்றதன்

நீள்நடுக்கம் கண்டேன்

chadrasekaran சொன்னது…

வாழ்வில்
வஞ்சம் தீர்தவனும்
வஞ்சித்து வாழ்பவனும்
வழிகாட்டி யாவரேல்
வையகம் தீராதுயரே

chandrasekaran சொன்னது…

உலகில்
மனிதநேயம் உள்ளவரை
இந்தியனோ தமிழனோ
மான்போடு வாழலாம்
மங்கைநீ சான்றல்லவோ.

வால்பையன் சொன்னது…

//கருநாய்நிதி//

:-)

து. பவனேஸ்வரி சொன்னது…

கருத்துரை வழங்கிய அனைவருக்கும் நன்றி. உங்கள் தூண்டுதலே எம்மை மென்மேலும் எழுதத் தூண்டுகின்றன.

Unknown சொன்னது…

போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் அது எண்ணிக்கை இல்லா கணக்கு கவலை இல்லை எமக்கு! - வரிகள் மிகவும் பிடித்திருகிறது...