புதன், 24 மார்ச், 2010

எனக்குத் தகுதியில்லை!


காதல் கடல் போன்றது
எனக்கு நீந்தத் தெரியாது
காதல் மலர் போன்றது
என்னிடம் நறுமணம் எல்லை!

காதல் பெண் போன்றது
என்னிடம் மென்மை இல்லை
காதல் தென்றல் போன்றது
என்னால் தவழ முடியாது!

காதல் கொடி போன்றது
என்னால் படர இயலாது
காதல் மலைப் போன்றது
என்னிடம் உறுதி இல்லை!

காதல் கட்டுரைப் போன்றது
என்னிடம் கருத்து இல்லை
காதல் கவிதைப் போன்றது
என்னிடம் நயங்கள் இல்லை!

காதல் நடனம் போன்றது
என்னிடம் நளினம் இல்லை
காதல் உயிர்ப் போன்றது
எனக்கு ஜீவனே இல்லை!

7 கருத்துகள்:

அக்பர் சொன்னது…

கவிதை அருமை

logu.. சொன்னது…

Kathal iyalbanathu..

iyalbai irungal..
kathal ungalidam vazhum..

" thookkamilla iravugalin
sathamillamal kathara
ninaikku ennangalin valithan inge kathal enum peyaril.."

Nallarukku pavans..

www.bogy.in சொன்னது…

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

VELU.G சொன்னது…

நல்லாயிருக்குங்க

நிறைய எழுதுங்க

Tamilvanan சொன்னது…

காதல் போதை போன்றது
என்னிடம் பீர் இல்லை
காத‌ல் ப‌சி போன்ற‌து
என்னிட‌ம் சாப்பாடு இல்லை

து. பவனேஸ்வரி சொன்னது…

அக்பர்: நன்றி நண்பரே...

லோகு: இயல்பானது காதல், ஒத்துக்கொள்கிறேன்...ஆனால், இன்று அனைத்தும் செயற்கை மயமாகிவிட்டதே (காதல் உட்பட).

வேலு: நன்றி...எழுதுகிறேன்...நீங்கள் தொடர்ந்து வாசித்தால்... :)

தமிழ்வாணன்: அட, இது கூட நன்றாகத்தான் இருக்கிறது........

logu.. சொன்னது…

// து. பவனேஸ்வரி கூறியது...
அக்பர்: நன்றி நண்பரே...

லோகு: இயல்பானது காதல், ஒத்துக்கொள்கிறேன்...ஆனால், இன்று அனைத்தும் செயற்கை மயமாகிவிட்டதே (காதல் உட்பட).

வேலு: நன்றி...எழுதுகிறேன்...நீங்கள் தொடர்ந்து வாசித்தால்... :)

தமிழ்வாணன்: அட, இது கூட நன்றாகத்தான் இருக்கிறது........//

Chance illa pavans..
kandippa irukkathu..

kathal unmaiyanathuthan..
unmaiyillathapothu athu eppadi kathalagum?

athuku peru veranga.