திங்கள், 22 மார்ச், 2010

உயிரே!


கண்கள் கலங்குகின்றது
சத்தம் வெளிவராமல்
கதறி அழுகின்றேன்
இதயம் ஏங்குகின்றது
ஏங்கி ஏங்கி நொந்து
பலவீனமாகிவிட்டது!

யாருக்கும் தெரியாமல்
தினமும் வேண்டுகிறேன்
என்னைக் கொல்லாதே
உயிரைத் திருடிவிட்டு
உயிரற்ற உடலாய்
நடைப்பிணமாக உலாவரும்
என்னைக் கொல்லாதே!

4 கருத்துகள்:

Madurai Saravanan சொன்னது…

கொல்வதிலும் சுகம் உள்ளது . கவிதை அருமை. வாழ்த்துக்கள்.

~~Romeo~~ சொன்னது…

அருமை

இராகவன் நைஜிரியா சொன்னது…

பரந்து உள்ளது உலகம். அழகான மரங்களும், ப்றவை யினமும் உள்ளது.

வெளியில் வாங்க சகோதரி.

து. பவனேஸ்வரி சொன்னது…

மதுரை சரவணன்: :) நன்றி நண்பரே...

ரோமியோ: நன்றி...

இராகவன் நைஜிரியா: வருகிறேன்....மிக விரைவில்...