வெள்ளி, 29 ஜனவரி, 2010

உன்னை மட்டும்!


உன்னருகில்
அமர்ந்திருக்கையில்
ஏதோ ஒரு சுகம்
உன் தோளில்
தலை சாய்த்திருக்கையில்
நெஞ்சுக்குள் நிம்மதி
என் விரல்களை
உன் விரலோடு
நீ அழுத்திப் பிடிக்கையில்
ஒருவித நம்பிக்கை!

இதற்குமுன்
எனக்கிது நிகழ்ந்ததில்லை
என்னுடன் இவ்வளவு
நெருக்கமாக இதுவரை
யாரும் பழகியதில்லை
பழகுவதற்கு நான்
அனுமதித்ததும் இல்லை
நீ மட்டும் எப்படி?

நாம் ஒருநாள் கூட
முழுமையாகப் பழகவில்லை
அப்படி இருக்கையில்
நமக்குள் எப்படி
இவ்வளவு நெருக்கம்?
நீ சிறிது நேரம்
என்னை விட்டு
விலகிச் சென்றால் கூட
என் மனம் சலனப்படுகிறது!

உன்னை நிரந்தரமாக
பிரிந்து விடுவேனோ என
நெஞ்சம் அஞ்சுகிறது
நானா இப்படி மாறிவிட்டேன்
எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது!

உன்னிடம் அப்படி
என்ன சக்தி உண்டு
எனது வாழ்க்கையில்
எத்தனையோ பேர்
வந்தார்கள் சென்றார்கள்
அவர்களுக்கெல்லாம்
இடம் தராத என் இதயம்
எப்படி உன்னை மட்டும்
அனுமதித்தது?

2 கருத்துகள்:

ananthen சொன்னது…

யாருங்க அவர் ரொம்ப பாவமுங்க... பத்திரமா கண்கலங்காம பார்த்துக்கோங்க!

து. பவனேஸ்வரி சொன்னது…

அனந்தன்: நானும் தேடிக்கொண்டிருக்கிறேன் நண்பரே...கண்டீர்களானால் என்னிடம் கூறுங்கள்