செவ்வாய், 29 டிசம்பர், 2009

தாமதிக்காதே!


ஏன் மறைக்கின்றாய்
என் மீது உனக்குக் காதல்
என்பதை ஏன் மறைக்கிறாய்?
பயமா அல்லது வெட்கமா?
ஏன் இன்னும் என்னைக்
காக்க வைக்கின்றாய்?

தினம் தினம் தவிக்கின்றேன்
அனலில் புழுவாய் துடிக்கின்றேன்
நீயும் என்னைப் போலென்று
எனக்குத் தெரியாதா?
ஏன் தயங்குகின்றாய்?

நீ தாமதிக்கும்ஒவ்வொரு வினாடியும்
நான் என் நம்பிக்கையை
இழந்துக் கொண்டிருக்கின்றேன்
நான் என் நம்பிக்கையை
இழக்கும் ஒவ்வொரு நொடியும்
நீ என்னை இழக்கின்றாய்!

4 கருத்துகள்:

தேவன் மாயம் சொன்னது…

உணர்வுகளைக் கவிதையாக வடித்த விதம் அருமை!!

logu.. சொன்னது…

cuta irukkunga pavans..

Tamilvanan சொன்னது…

யாரோ...

நான் தாமதிக்கும்
ஒவ்வொரு வினாடியும்
நீயும் உன்னை இழக்கின்றாய்

இது எப்ப‌டி இருக்கு..

து. பவனேஸ்வரி சொன்னது…

தேவன் மாயம்: நன்றி நண்பரே...

லோகு: நன்றி.... :)

தமிழ்வாணன்: இதுவும் நன்றாகத்தான் இருக்கின்றது...