செவ்வாய், 28 ஜூலை, 2009

நினைத்துப் பார்க்கின்றேன்…


மாலை வேளையிலே
சன்னல் கம்பிகளின் ஊடே
சின்னத் சின்னத்தாய் மழைச்சாறல்கள்
மனதில் உறங்கிக் கிடந்த நினைவுகளை
சன்னமாய் தட்டி விட்டன;
நினைத்துப் பார்க்கின்றேன்…

அன்றொருநாள்
அடை மழையின் ஊடே
ஒரு குடைக்குள் இருவர் அடைக்கலம் தேடி
குளிரில் நடுங்கிக் கைக்கோர்த்த நினைவுகள்
என் மேல் ஒரு துளி நீர் படாமல்
நீ முழுக்க நனைந்தாயே;
நினைத்துப் பார்க்கின்றேன்…

கடற்கரை ஓரந்தனில்
கையோடு கை கோர்த்து
கால் மீது கால் வைத்து
தட்டுத் தடுமாறி நடந்த நினைவுகல்
ஒருகணம் நிலைத் தடுமாறி
மண்ணில் விழுந்து புரண்டதை
நினைத்துப் பார்க்கின்றேன்…

நலமின்றி நானிருக்க
இரவெல்லாம் உறக்கமின்றி
நொடிக்கொரு தரம் நலம் விசாரித்து
தவிதவித்த நினைவுகள்
எனக்காகக் கவலை கொண்டு
வாடி நின்ற முகத்தை
நினைத்துப் பார்க்கின்றேன்…

பசியென்று நான் சொல்ல
கடைகடையாய் நீ அலைய
வாடிய முகம் கண்டு
துவண்ட நினைவுகள்
சிறுகுழந்தைப் போல் எனக்கு
உணவூட்டி மகிழ்ந்தாயே
நினைத்துப் பார்க்கின்றேன்…

எனது கண்ணீரைக் கூட
ஆனந்தக் கண்ணீராக்கியவன் நீ
கட்டிய மனக்கோட்டைகள் பல
சிலவற்றை நனவாக்கிய நினைவுகள்
பலவற்றை பகல் கனவாய்;
வெறும் கனவாய் விட்டுச் சென்றாயே
நினைத்துப் பார்க்கின்றேன்…

13 கருத்துகள்:

சதீசு குமார் சொன்னது…

வரிக்கு வரி நினைத்துப் பார்க்கும் கவிதையை ரசித்துப் படித்தேன்...

tamilvanan சொன்னது…

கவிதை நன்று.

ஏன் உங்கள் கவிதைகளில் சோகம் இழைந்தோடுகிறது?

சிவனேசு சொன்னது…

பிரிவுகளும் பல சமயம் உறவுகள் உள்ளத்திலிருந்து பிரியாமலிருக்க உதவுவது உங்கள் கவிதை வழி புரிகிற‌து தோழி!

விண்ணப்பம் : எங்கே கூடிய விரைவில் ஒரு மகிழ்ச்சிக்கவிதையை எழுதி எல்லோரையும் மகிழச்செய்யுங்கள் பார்ப்போம்!

நட்புடன் ஜமால் சொன்னது…

நீண்ட நாட்களுக்கு பிறகு

நல்லதொரு “நினைத்துப் பார்த்தல்”

சிவனேசுவின் விண்ணப்பம்

நானும் விண்ணப்பிக்கிறேன்.

புனிதா||Punitha சொன்னது…

ஒரு குடையின் கீழ் பல இனிய நினைவுகள் குடை திரும்பியிருக்கின்றன... அழகான ஞாபகங்கள் ஆனால் வலியோடு :-(

புனிதா||Punitha சொன்னது…

ஹ்ம்ம் காலையிலேயே இந்த கவிதை என்னுள் பல தூறல்களைத் தூவிச் சென்றது.

கிருஷ்ணா சொன்னது…

சினிமாக்காரர்கள் பார்த்தால் உங்கள் கற்பனைகளை 'சுட்டு'பாடலாக்கிவிடக் கூடும்.. அந்த 'குடைக்குள் மழை' ஞாபகம்.. ரொம்ப Romantic..! வாழ்த்துக்கள்!

கதிர்ராஜூ.பழ சொன்னது…

"நினைத்து பார்க்கின்றேன்" படிக்கவே சுகமாக இருக்க
நினைத்து பார்த்த உங்களுக்கு சொல்லத்தான் வேண்டுமா????

logu.. சொன்னது…

Pavns..

Attagaasam.
Valigal iyalbai solliyirukkireergal.
migavum rasithen.

Ninaivugal sogamenru entha ithayamum avatrai veruppathillai..

its great hearts.

துபாய் ராஜா சொன்னது…

//மாலை வேளையிலே
சன்னல் கம்பிகளின் ஊடே
சின்னத் சின்னத்தாய் மழைச்சாறல்கள்
மனதில் உறங்கிக் கிடந்த நினைவுகளை
சன்னமாய் தட்டி விட்டன;
நினைத்துப் பார்க்கின்றேன்…//

ஆரம்பமே அருமை.

//அன்றொருநாள்
அடை மழையின் ஊடே
ஒரு குடைக்குள் இருவர் அடைக்கலம் தேடி
குளிரில் நடுங்கிக் கைக்கோர்த்த நினைவுகள்
என் மேல் ஒரு துளி நீர் படாமல்
நீ முழுக்க நனைந்தாயே;
நினைத்துப் பார்க்கின்றேன்…

கடற்கரை ஓரந்தனில்
கையோடு கை கோர்த்து
கால் மீது கால் வைத்து
தட்டுத் தடுமாறி நடந்த நினைவுகல்
ஒருகணம் நிலைத் தடுமாறி
மண்ணில் விழுந்து புரண்டதை
நினைத்துப் பார்க்கின்றேன்…//

கண்முன் காட்சிகள்.

//நலமின்றி நானிருக்க
இரவெல்லாம் உறக்கமின்றி
நொடிக்கொரு தரம் நலம் விசாரித்து
தவிதவித்த நினைவுகள்
எனக்காகக் கவலை கொண்டு
வாடி நின்ற முகத்தை
நினைத்துப் பார்க்கின்றேன்…

பசியென்று நான் சொல்ல
கடைகடையாய் நீ அலைய
வாடிய முகம் கண்டு
துவண்ட நினைவுகள்
சிறுகுழந்தைப் போல் எனக்கு
உணவூட்டி மகிழ்ந்தாயே
நினைத்துப் பார்க்கின்றேன்…//

சுகமான நினைவுகள்.

//எனது கண்ணீரைக் கூட
ஆனந்தக் கண்ணீராக்கியவன் நீ
கட்டிய மனக்கோட்டைகள் பல
சிலவற்றை நனவாக்கிய நினைவுகள்
பலவற்றை பகல் கனவாய்;
வெறும் கனவாய் விட்டுச் சென்றாயே
நினைத்துப் பார்க்கின்றேன்…//

கனவுகள் நிறைவேற வாழ்த்துக்கள்.

கே.பாலமுருகன் சொன்னது…

நல்லதொரு காதல் கவிதை, உணர்வுகளினூடே பயணித்து அழகான வரிகளில் காதலையும் வலியையும் சொல்லிச் செல்கின்றன.
மொழிநடையும் கவர்கின்றன.
வாழ்த்துகள். தொடர்ந்து நிறைய வாசியுங்கள்

manokarhan krishnan சொன்னது…

//எனது கண்ணீரைக் கூட
ஆனந்தக் கண்ணீராக்கியவன் நீ
கட்டிய மனக்கோட்டைகள் பல
சிலவற்றை நனவாக்கிய நினைவுகள்
பலவற்றை பகல் கனவாய்;
வெறும் கனவாய் விட்டுச் சென்றாயே
நினைத்துப் பார்க்கின்றேன்…//நன்று உங்கள் கவிதை வரிகள்.சோகத்தில் சுகம் காணும் சகோதரியே....
சோகத்தில் செதுக்க படும் சிற்பம் சாகவரம் பெற்றவை.தஜ்மாகலை போன்று.உளியின் ஓசை கூட உயிர் பெறும் உங்கள் கவித வரியில்.....வாழ்த்துக்கள்...
வாழ்க வளமுடன்.

விக்னேஷ்வரி சொன்னது…

ரொம்ப நல்லாருக்கு.