வெள்ளி, 8 மே, 2009

இதுதான் வாழ்க்கையா?


பெண்ணே…
பள்ளிச் சென்று பயின்றாய்
பின்பு பல்கலைக்கழகம் சென்றாய்
படிப்பு முடிந்து வேலை செய்தாய்!

காதல் கொண்டாய்
கல்யாணம் செய்தாய்
கரண்டி பிடித்தாய் கையில்!

குழந்தை பிறந்தது
கடமை நிறைந்தது
ஓடுகிறாய் ஓடுகிறாய்
வீட்டிலிருந்து வேலைக்கும்
வேலையிலிருந்து வீட்டிற்கும்!

இதுதான் உனது வாழ்க்கையா?
என்னக் கண்டாய் இதில் நீ?
பிறப்பிற்கும் இறப்பிற்கும் நடுவில்
நீ சாதித்ததெல்லாம் இதுதானா?

8 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

:-))

பெயரில்லா சொன்னது…

ஹ்ம்ம்ம்!!ஒன்னியும் சொல்றதுக்கில்ல... நான் எஸ்ஸ்ஸ் ஆகிக்கிறேன்!!!

புதியவன் சொன்னது…

//பிறப்பிற்கும் இறப்பிற்கும் நடுவில்
நீ சாதித்ததெல்லாம் இதுதானா?//

நல்ல கேள்வி முதலில் இதுக்கு நீங்க என்ன பதில் சொல்லுறீங்க...?

கவிதை எளிமையா நல்லா இருக்கு பவனேஸ்வரி...

maruthamooran சொன்னது…

நல்லாயிருக்கு,
பெண்மையின் ஏங்கங்கள் அவர்களுக்குள்ளேயே அடங்கிப் போகின்றன என்பது வருத்தமளிக்கும் உண்மை.

கிருஷ்ணா சொன்னது…

//பிறப்பிற்கும் இறப்பிற்கும்
நடுவில்
நீ சாதித்ததெல்லாம்
இதுதானா?//

எதைச் சாதிக்க வேண்டும் என்று தொடர்ந்து சொல்லி இருக்கலாமே.. சாதனையாக நீங்கள் எதைக் கருதுகிறீர்கள் என்று எழுதுங்களேன்.. ப்ளீஸ்ஸ்

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

//கரண்டி பிடித்தாய் கையில்!//

கரண்டியை வேறெங்கு பிடிப்பார்கள்?

//பிறப்பிற்கும் இறப்பிற்கும் நடுவில்
நீ சாதித்ததெல்லாம் இதுதானா?//

பல்கலை கிடைப்பது சாதனை
வேலை கிடைப்பது சாதனை
குழந்தை பெற்றது சாதனை.

இது எல்லாம் சாதனை இல்லை என்றால் எது சாதனைனு நீங்களே சொல்லுங்களே...

நான் சொன்னது…

உங்கள் கேள்விகளில் நியாயமும் அதே நேரம் ஒரு துடிப்பும் தெரிகிறது
வாழ்த்துகள்

prakash சொன்னது…

hai bhavanes,

nalla pathivu, i like the poem.