வியாழன், 2 ஏப்ரல், 2009

நீ மட்டும்!


நான் பூவாக இருந்தால்
நீ மட்டுமே பறிக்க வேண்டும்
கனியாக இருந்தால்
நீ மட்டுமே சுவைக்க வேண்டும்!

நான் நீராக இருந்தால்
நீ மட்டுமே அருந்த வேண்டும்
காற்றாக இருந்தால்
நீ மட்டுமே சுவாசிக்க வேண்டும்!

நான் கடலாக இருந்தால்
நீ மட்டுமே மூழ்க வேண்டும்
எழுத்தாக இருந்தால்
நீ மட்டுமே வாசிக்க வேண்டும்!

நான் மழையாக் இருந்தால்
நீ மட்டுமே நனைய வேண்டும்
பெண்ணாக இருப்பதால்
நீ மட்டுமே நேசிக்க வேண்டும்!

9 கருத்துகள்:

புனிதா சொன்னது…

;-)

நட்புடன் ஜமால் சொன்னது…

அருமையா

’வேண்டு’-தல்

பெயரில்லா சொன்னது…

nesathin muzhumai neeya therigiraai...anbin velipaadu aazhamaai therigiradhu...azhagu

சக்தி சக்திதாசன் சொன்னது…

அருமையான வரிகள் காதலின் ஊடுருவலைத் துருவிக் காட்டுகின்றன

அன்[உடன்
சக்தி

gayathri சொன்னது…

ella linesm nalla iruku

இராகவன் நைஜிரியா சொன்னது…

அருமை... காதல் உணர்வை மிக அருமையாக வெளிப் படுத்தியுள்ளீர்கள்.

புதியவன் சொன்னது…

உங்கள் ஆசைகள் நல்லா இருக்கு...

நான் சொன்னது…

இதன் ஆழமும் அர்த்தமும் மிகவும் வலிமையாய் அமைந்திருக்கிறது
வாழ்த்துகள்

து. பவனேஸ்வரி சொன்னது…

கருத்துகள் தெரிவித்த அனைத்த வாசகர்களுக்கும் நன்றி.