புதன், 18 மார்ச், 2009

மன்னிக்கவும்!


நட்பிற்கு இனியவனே
நேசிக்கிறேன் என்பதைவிட
வெறுக்கிறேன் என்றிருந்தால்
மிகவும் மகிழ்ந்திருப்பேன்!

நானொரு புரியாத புதிர்
விடைத் தேட முயற்சிக்காதே
அது முடியாத காரியம்-ஏனெனில்
எனக்கு நானே கேள்விக்குறி!

என்னைப் பொறுத்தவரை
காதல் என்பது விஷம்
ஒருமுறை அருந்திவிட்டேன்
மறுநொடி இறந்துவிட்டேன்!

இப்பொழுது என்னிடம்
இதயமும் இல்லை-அதில்
ஈரமும் இல்லை-ஏனெனில்
என் காதல் கைகூடவில்லை!

வாடிவிட்ட மலர் மீண்டும் மலராது
இறந்துவிட்ட காதல் மீண்டும் பிறக்காது
தொலைந்துப் போன இதயம் மீண்டும் திரும்பாது
காயம் பட்ட மனம் என்றும் ஆறாது!

இந்த வரிகளைத் தடவிப்பார்
எனது மனக்காயங்கள் தென்படும்
இந்த வரிகளை அனுபவித்துப்பார்
எனது வலிகள் உனக்குப் புரியும்!

ஆறுதல் தேட முயன்றேன்
நீயோ ஆதரிக்க வருகின்றாய்
துன்பத்தைப் பகிர்ந்துக்கொள்ள நினைத்தேன்
நீயோ வாழ்க்கையப் பகிரப் பார்க்கின்றாய்!

காதலிக்க நேரமில்லை
காத்திருக்க காலமில்லை
மென்மையான மனமும் இல்லை
வாழ்வில் என்றும் வசந்தம் இல்லை!

பட்ட காயம் போதுமடா
காயம் இன்னும் வலிக்குதடா
வடுக்கள் இன்னும் மறையவில்லை
வலிகள் இன்னும் குறையவில்லை!

வலியை மறைக்கப் பார்க்கின்றேன்
தோற்று நானும் தவிக்கின்றேன்
ஏற்கனவே இறந்து விட்டேன்
பிழைக்க வைக்கப் பார்க்காதே!

நினைத்ததைச் சொன்னதில் தவறில்லை
எனக்கோ அதிலே நாட்டமில்லை
நினைத்தது எதுவும் நடப்பதில்லை
எனக்குக் காதல் ராசி இல்லை!

17 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

நானொரு புரியாத புதிர்
விடைத் தேட முயற்சிக்காதே
அது முடியாத காரியம்-ஏனெனில்
எனக்கு நானே கேள்விக்குறி!\\

இது ரெகுலரா படிக்கிறமே!

நட்புடன் ஜமால் சொன்னது…

முழுதும் படித்த பிறகு

என்ன சொல்வதென்று தெரியவில்லை

எல்லாம் நலவாய் அமைய எமது பிரார்த்தனைகள் ...

பெயரில்லா சொன்னது…

//வாடிவிட்ட மலர் மீண்டும் மலராது
இறந்துவிட்ட காதல் மீண்டும் பிறக்காது
தொலைந்துப் போன இதயம் மீண்டும் திரும்பாது
காயம் பட்ட மனம் என்றும் ஆறாது//

Who said so...?

உதிர்ந்த பூக்கள் மீண்டும் மீண்டும் புதிதாய் மலர்ந்துக் கொண்டேத்தான் இருக்கின்றன... பூமியும் ஒவ்வொரு முறையும் தன்னைத்தானே புதுபித்துக் கொண்டுதான் இருக்கிறது. இதயம் அது எங்கும் தொலையவில்லை தோழி அது உன்னிடமே உள்ளது..காலமும் நீ விரும்பிய காயத்தை ஒரு நாள் ஆற்றும்.. ஆனால் அதற்கு மனக்கதவை திறந்து வைக்க வேண்டுமே அதற்கு :-)தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும்..

பெயரில்லா சொன்னது…

ஹாய்..சூப்பர் வரிகள் பவனி..இந்த வரிகளையே கொஞ்சமாய் ராப் செய்துப் பார்த்தேன்...வாவ் அசத்தல்.! :-)

குமரன் மாரிமுத்து சொன்னது…

நாளுக்கு நாள் உங்கள் கவிதை / உரைவீச்சின் தரம் உயருவதாகத் தோன்றுகின்றது. வளர்க!

இராகவன் நைஜிரியா சொன்னது…

வரிகள் அனைத்தும் அருமை.

கவிதை ஒரு புனைவு என்றால் இன்னும் அருமை.

புனைவு அல்ல என்றால், மனது வேதனைப் படுகின்றது.

// நானொரு புரியாத புதிர்
விடைத் தேட முயற்சிக்காதே
அது முடியாத காரியம்-ஏனெனில்
எனக்கு நானே கேள்விக்குறி! //

எதுவுமே புரியாத புதிர் கிடையாது.. எல்லாவற்றிக்கும் விடை உண்டு... ஆனால் காலம் அதற்கான விடையைக் கொடுக்கும்.

// என்னைப் பொறுத்தவரை
காதல் என்பது விஷம்
ஒருமுறை அருந்திவிட்டேன்
மறுநொடி இறந்துவிட்டேன்! //

காதல் என்பது விஷமல்ல..அது ஒரு அமிர்தம்.. காதல் சாகா வரம் கொடுக்கும் அமிர்தம். அதை எத்துனை முறை வேண்டுமானாலும் பருகலாம்

இராகவன் நைஜிரியா சொன்னது…

// வாடிவிட்ட மலர் மீண்டும் மலராது
இறந்துவிட்ட காதல் மீண்டும் பிறக்காது
தொலைந்துப் போன இதயம் மீண்டும் திரும்பாது
காயம் பட்ட மனம் என்றும் ஆறாது! //

உப்பும் தண்ணியும் சேர, சேர எல்லாம் சரியாகும் என்று சொல்லுவார்கள். அது மாதிரி காலம் எல்லாவற்றையும் மாற்றும்.

புதியவன் சொன்னது…

//இந்த வரிகளைத் தடவிப்பார்
எனது மனக்காயங்கள் தென்படும்
இந்த வரிகளை அனுபவித்துப்பார்
எனது வலிகள் உனக்குப் புரியும்!//

உணர்வுகளை வார்த்தைகளில் சொன்ன விதம் அருமை...

பெயரில்லா சொன்னது…

ஏன் இவ்வளவு சோகம்!

மிக இயல்பான எளிமையான வரிகளில் உள்ள வலிகளை அறிந்துகொள்ளமுடிகிறது!

நல்லதொரு கவி தோழி!

து. பவனேஸ்வரி சொன்னது…

நட்புடன் ஜமால் கூறியது...
//முழுதும் படித்த பிறகு

என்ன சொல்வதென்று தெரியவில்லை

எல்லாம் நலவாய் அமைய எமது பிரார்த்தனைகள் ...//

உங்கள் பிராத்தனைக்கு நன்றி ஜமால்...

து. பவனேஸ்வரி சொன்னது…

இனியவள் புனிதா கூறியது...
//வாடிவிட்ட மலர் மீண்டும் மலராது
இறந்துவிட்ட காதல் மீண்டும் பிறக்காது
தொலைந்துப் போன இதயம் மீண்டும் திரும்பாது
காயம் பட்ட மனம் என்றும் ஆறாது//

//Who said so...?

உதிர்ந்த பூக்கள் மீண்டும் மீண்டும் புதிதாய் மலர்ந்துக் கொண்டேத்தான் இருக்கின்றன... பூமியும் ஒவ்வொரு முறையும் தன்னைத்தானே புதுபித்துக் கொண்டுதான் இருக்கிறது. இதயம் அது எங்கும் தொலையவில்லை தோழி அது உன்னிடமே உள்ளது..காலமும் நீ விரும்பிய காயத்தை ஒரு நாள் ஆற்றும்.. ஆனால் அதற்கு மனக்கதவை திறந்து வைக்க வேண்டுமே அதற்கு :-)தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும்..//

ஒரு மொட்டிலிருந்து ஒரு மலர்தான் பூக்கும் புனிதா. காய்ந்த பூக்கள் மீண்டும் மலர்ச்சிப் பெறுவதில்லை. அடைத்த பிணப்பெட்டியை யாரும் மீண்டும் திறப்பதில்லை. மனக்கதவும் அப்படியே... உங்கள் கருத்துக்கு நன்றி.

து. பவனேஸ்வரி சொன்னது…

குமரன் மாரிமுத்து கூறியது...
//நாளுக்கு நாள் உங்கள் கவிதை / உரைவீச்சின் தரம் உயருவதாகத் தோன்றுகின்றது. வளர்க!//

உங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே.

து. பவனேஸ்வரி சொன்னது…

இராகவன் நைஜிரியா கூறியது...
//வரிகள் அனைத்தும் அருமை.

கவிதை ஒரு புனைவு என்றால் இன்னும் அருமை.

புனைவு அல்ல என்றால், மனது வேதனைப் படுகின்றது.

// நானொரு புரியாத புதிர்
விடைத் தேட முயற்சிக்காதே
அது முடியாத காரியம்-ஏனெனில்
எனக்கு நானே கேள்விக்குறி! //

எதுவுமே புரியாத புதிர் கிடையாது.. எல்லாவற்றிக்கும் விடை உண்டு... ஆனால் காலம் அதற்கான விடையைக் கொடுக்கும்.

// என்னைப் பொறுத்தவரை
காதல் என்பது விஷம்
ஒருமுறை அருந்திவிட்டேன்
மறுநொடி இறந்துவிட்டேன்! //

காதல் என்பது விஷமல்ல..அது ஒரு அமிர்தம்.. காதல் சாகா வரம் கொடுக்கும் அமிர்தம். அதை எத்துனை முறை வேண்டுமானாலும் பருகலாம்//

உங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே.

து. பவனேஸ்வரி சொன்னது…

இராகவன் நைஜிரியா கூறியது...
// வாடிவிட்ட மலர் மீண்டும் மலராது
இறந்துவிட்ட காதல் மீண்டும் பிறக்காது
தொலைந்துப் போன இதயம் மீண்டும் திரும்பாது
காயம் பட்ட மனம் என்றும் ஆறாது! //

//உப்பும் தண்ணியும் சேர, சேர எல்லாம் சரியாகும் என்று சொல்லுவார்கள். அது மாதிரி காலம் எல்லாவற்றையும் மாற்றும்.//

காலம் அனைத்தையும் மறக்கச் செய்யும் என்று நானும் எதிர்ப்பார்க்கிறேன். கருத்துக்கு நன்றி நண்பரே.

து. பவனேஸ்வரி சொன்னது…

புதியவன் கூறியது...
//இந்த வரிகளைத் தடவிப்பார்
எனது மனக்காயங்கள் தென்படும்
இந்த வரிகளை அனுபவித்துப்பார்
எனது வலிகள் உனக்குப் புரியும்!//

//உணர்வுகளை வார்த்தைகளில் சொன்ன விதம் அருமை...//

தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே.

து. பவனேஸ்வரி சொன்னது…

ஷீ-நிசி கூறியது...
//ஏன் இவ்வளவு சோகம்!

மிக இயல்பான எளிமையான வரிகளில் உள்ள வலிகளை அறிந்துகொள்ளமுடிகிறது!

நல்லதொரு கவி தோழி!//

அறிய முடிந்தால் மகிழ்ச்சி தோழி...

நான் சொன்னது…

நன்றாக எழுதிஇருக்கிறீர்கள் வாழ்த்துகள்
ஆனால் உங்களை உங்களுக்கே கேள்விகுறி என்று சொன்னதன் அர்த்தம் தான் புரியவில்லை ஏன் என்றால் உங்களை பற்றி நீங்களே குறிப்பிட்டிருக்கிறீர்கள் உங்கள் மனம் உங்கள் விருப்பம் சார்ந்து தான் செயல்பட வேண்டும் இதில் மற்றவர்களின் திணிப்பு சரியாகாது