வியாழன், 19 மார்ச், 2009

நீ யார்?அடிக்கடி சண்டையிட்டாய்
வெறுப்புடன் பேச வைத்தாய்
நெஞ்சத்தை நோகடித்தாய்
தனிமையில் அழ வைத்தாய்
இத்தனையும் செய்ய நீ
என் எதிரியல்ல!

பாசமாய் பழகினாய்
அன்பாய் பார்த்தாய்
கனிவுடன் பேசினாய்
நேசத்தை வளர்த்தாய்
இத்தனையும் செய்த நீ
என் நண்பனல்ல!

அக்கறைக் காட்டினாய்
அதிகாரம் செய்தாய்
அறிவுரைகள் வழங்கினாய்
அரவணைத்துக் கொண்டாய்
இத்தனையும் செய்த நீ
என் பெற்றோர் அல்ல!

புதுப்பாடம் கற்பித்தாய்
சந்தேகங்கள் தீர்த்தாய்
சிந்தனைகள் வளர்த்தாய்
தவறுகளைத் திருத்தினாய்
இத்தனையும் செய்த நீ
என் ஆசான் அல்ல!

எனக்கு நீ எதிரியல்ல
ஆருயிர் நண்பனல்ல
தவமிருந்த பெற்றோர் அல்ல
சொல்லிக்கொடுக்கும் ஆசான் அல்ல
பாசமூட்டும் அன்னை அல்ல
நீ யார், தெரியுமா?

சில நேரம் அழ வைத்தாலும்
பல நேரம் சிரிக்க வைத்தாய்
நெஞ்சத்தை நோகடித்தாலும்
மகிழ்ச்சியை எனக்களித்தாய்
நீ யார் தெரியுமா?
என் மூச்சு!

அன்பாய் பழகினாலும்
அளவோடு நிறுத்திக்கொண்டாய்
கனிவுடன் பேசினாலும்
பணிவுடன் நடந்துக்கொண்டாய்
நீ யார் தெரியுமா?
என் உயிர்!

காலம் மாறலாம்
என் காதல் மாறாது
காலம் சென்றாலும்
நம் உறவு மறையாது
உலகம் அழிந்தாலும்
நம் காதல் அழியாது!

10 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

\\காலம் மாறலாம்
என் காதல் மாறாது
காலம் சென்றாலும்
நம் உறவு மறையாது
உலகம் அழிந்தாலும்
நம் காதல் அழியாது!\\

மிகவும் இரசித்தேன் ...

அழகான காதல்

நட்புடன் ஜமால் சொன்னது…

காதல்

என்பது

எந்த நிலையிலும் காதலிப்பது

வாழ்க காதல்

காதலாய் ...

நட்புடன் ஜமால் சொன்னது…

என் எதிரியல்ல!

என் நண்பனல்ல!

என் பெற்றோர் அல்ல!

என் ஆசான் அல்ல!

இவர்கள் யார் என்று அழகா சொன்னீர்கள்

நட்புடன் ஜமால் சொன்னது…

நீ யார் தெரியுமா?
என் மூச்சு!

நீ யார் தெரியுமா?
என் உயிர்!


உணர்ந்து சொன்னதை உணர்ந்து கொண்டோம் ...

நட்புடன் ஜமால் சொன்னது…

அழகான காதல்

அழகானது காதல்

இனியவள் புனிதா சொன்னது…

அருமையான வரிகள் :-)

புதியவன் சொன்னது…

//சில நேரம் அழ வைத்தாலும்
பல நேரம் சிரிக்க வைத்தாய்
நெஞ்சத்தை நோகடித்தாலும்
மகிழ்ச்சியை எனக்களித்தாய்//

இந்த காதல் வரிகள் அருமை...

அபுஅஃப்ஸர் சொன்னது…

வரிகள் அருமை வாழ்த்துக்கள்

நான் சொன்னது…

உங்கள் காதலின் ஆழம் அதன் பிடிப்பு அத்தனையும் மிகவும் அருமை
உங்கள் உணர்வுகளின் வடிகால் தான் இந்த கவிதை போலும் வாழ்த்துகள்

RAJMAGAN சொன்னது…

enna bavaneswarii??
ore kathal malaiyai irukirathu??
mmmmm..nadakattum nadakattumm..
virakthiyaana kavithaigal..
kottum malhzayil sudaana nescafe pola..