செவ்வாய், 10 பிப்ரவரி, 2009

காதல்…


துன்பத்தின் எல்லை
கண்ணீரின் மறு உருவம்
உடலின் கடைசி இரத்தத்தையும்
உறிஞ்சி எடுக்கும் பிசாசு!

நிம்மதியைக் கெடுத்து
நன்னெறியைச் சாகடித்து
பிஞ்சிலேயே பழுக்க வைத்து
அழுகி விழும் கசப்பான பழம்!

இதயம் திறந்து உயிரில் நுழைந்து
நமக்கே தெரியாமல் உயிரைக் கொல்லும்
விழியில் விழுந்து நினைவில் கரைந்து
உயிரை வாங்கும்!

பாம்பினிலே விஷம் மிக்கது
துன்பத்திலே கொடுமையானது
கொடுமைகளிலே கொடூரமானது
உயிரைக் கொல்லும் கிருமியானது!

அனைவருக்கும் பொதுவானது
ஒரு சிலருக்கே அதிஷ்டமானது
அன்புக்குரியவரையும் கொல்லும் ஆயுதம்
வாழ்வை அழிக்கும் அழிவில்லா காதல்!

13 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

\\அனைவருக்கும் பொதுவானது
ஒரு சிலருக்கே அதிஷ்டமானது\\

:(

logu.. சொன்னது…

Hai pavan..

unaga ovoru linesum..
saththiyamana varththaigal..
romba arumaiya irukkunga..

NIjankl eppothum
azhagakathan irukkum..
ungal kavithaikalai pola..

nallarukkunga..
Keep it up.

புதியவன் சொன்னது…

காதல் பாவங்க மன்னிச்சு விட்டுடுங்க...

புதியவன் சொன்னது…

//அனைவருக்கும் பொதுவானது
ஒரு சிலருக்கே அதிஷ்டமானது//

இது முற்றிலும் உண்மை...

ஆதவா சொன்னது…

பிப்ரவரி ஆனாலே காதல் கவிதைகள் ஆங்காங்கே துள்ளுமே!!!

ஆனாலும் காதலை இப்படியெல்லாமா திட்டுவது?? பாம்பைவிட விஷமிக்கதா??? அடப்பாவம் காதலே!!!!

உடலின் கடைசி இரத்தத்தையும்
உறிஞ்சி எடுக்கும் பிசாசு!

நன்று......

சில வரிகளில் சிலாகித்தேன்...

Divyapriya சொன்னது…

// அன்புக்குரியவரையும் கொல்லும் ஆயுதம்//

இந்த வரிகள் அருமை…

வெற்றி சொன்னது…

அனைத்தும் எதிமறையா இருக்கே?

"புறம் பார்த்துவரின் விசம்,
அகம் பார்த்துவரின் அமிர்தம்"

நல்லது. அருமையான வரிகள்.

RAJMAGAN சொன்னது…

kathalin valiyum athu erpadutum vethanayum,
vilanggattum manitharku..

து. பவனேஸ்வரி சொன்னது…

நட்புடன் ஜமால் கூறியது...
\\அனைவருக்கும் பொதுவானது
ஒரு சிலருக்கே அதிஷ்டமானது\\

:(

ஏங்க இவ்வளவு சோகம்?

து. பவனேஸ்வரி சொன்னது…

லோகு அவர்களின் கருத்துக்கு நன்று. குறைகள் இருந்தால் கூறுங்கள். அதிகமாகப் புகழ வேண்டாம்.

நான் சொன்னது…

அந்த வலிகளிலும் ஓர் மகிழ்ச்சி இருக்கிறதே

து. பவனேஸ்வரி சொன்னது…

வணக்கம்,

//புதியவன் கூறியது...
காதல் பாவங்க மன்னிச்சு விட்டுடுங்க...//

காதல் பாவம் இல்லைங்க. காதலிக்கிறவங்கதான் பாவம். உங்கள் கருத்துக்கு நன்றி புதியவன்.

வணக்கம் ஆதவா,
இதுவும் காதல் கவிதைத்தான். நான் காதலைத் திட்டவில்லை. உண்மையைச் சொன்னேன். எனது வரிகளில் பிழை இருப்பின் திருத்துக. கருத்துக்கு நன்றி.

//Divyapriya கூறியது...
// அன்புக்குரியவரையும் கொல்லும் ஆயுதம்//

இந்த வரிகள் அருமை…//

உங்கள் கருத்துக்கு நன்றிங்க.

து. பவனேஸ்வரி சொன்னது…

வணக்கம்,

//தேனியார் கூறியது...
அனைத்தும் எதிமறையா இருக்கே?

"புறம் பார்த்துவரின் விசம்,
அகம் பார்த்துவரின் அமிர்தம்"

நல்லது. அருமையான வரிகள்.//

கருத்துக்கு மிக்க நன்றி. நீங்கள் குறிப்பிட்டிருந்த வரிகளும் அருமையாக இருக்கின்றன. ஆதரவைத் தொடருங்கள்.


ராஜ்மகனின் கருத்துக்கு நன்றி. காதலில் வலி உங்களிடமும் இருப்பது போல் தெரிகிறதே...


//நான் கூறியது...
அந்த வலிகளிலும் ஓர் மகிழ்ச்சி இருக்கிறதே//

இன்பத்தில் துன்பமும், துன்பத்தில் இன்பமும் உலக இயல்புதானே? உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.