வெள்ளி, 5 டிசம்பர், 2008

நீ இல்லாததால்…


பூவில் வாசம் இல்லை
வானில் நிலவு இல்லை
இரவில் கனவு இல்லை
நீ என்னருகில் இல்லாததால்!

தென்றல் சுடுகின்றது
நிலவு கொதிக்கின்றது
தேன் கூட கசக்கின்றது
நீ என்னருகில் இல்லாததால்!

காது கேட்கவில்லை
கண்ணில் பார்வையில்லை
மொழிகள் நினைவில்லை
நீ என்னருகில் இல்லாததால்!

நெஞ்சம் தவிக்கின்றது
உடல் கனக்கின்றது
ஆன்மா துடிக்கின்றது
நீ என்னருகில் இல்லாததால்!

பேச்சில் பொருளில்லை
உணவில் ருசியில்லை
உடலில் வலுவில்லை
நீ என்னருகில் இல்லாததால்!

தனிமையில் வாழ்கிறேன்
நம்பிக்கை இழக்கிறேன்
உலகையே வெறுக்கிறேன்
நீ என்னருகில் இல்லாததால்!

16 கருத்துகள்:

அதிரை ஜமால் சொன்னது…

மீ த 1st

அதிரை ஜமால் சொன்னது…

\\தனிமையில் வாழ்கிறேன்
நம்பிக்கை இழக்கிறேன்
உலகையே வெறுக்கிறேன்
நீ என்னருகில் இல்லாததால்!\\

ஏன்... (வடிவேல் பாணியில்)

அதிரை ஜமால் சொன்னது…

\\பூவில் வாசம் இல்லை
வானில் நிலவு இல்லை
இரவில் கனவு இல்லை
நீ என்னருகில் இல்லாததால்!\\

இரவில் கனவு இல்லை
நீ இல்லாதல் என் கண்களில் உறக்கம் இல்லை.

அதிரை ஜமால் சொன்னது…

\\தென்றல் சுடுகின்றது
நிலவு கொதிக்கின்றது
தேன் கூட கசக்கின்றது
நீ என்னருகில் இல்லாததால்!\\

வலி வலி வலி

அதிரை ஜமால் சொன்னது…

\\காது கேட்கவில்லை
கண்ணில் பார்வையில்லை
மொழிகள் நினைவில்லை
நீ என்னருகில் இல்லாததால்!\\

மிக அருமையான வரிகள்

அதிரை ஜமால் சொன்னது…

\\நெஞ்சம் தவிக்கின்றது
உடல் கனக்கின்றது
ஆன்மா துடிக்கின்றது
நீ என்னருகில் இல்லாததால்!\\

நீரை விட்டு வெளிவந்த மீன் துடிப்பது போல் இருக்கின்றது உங்கள் காதல் துடிப்பு.

அதிரை ஜமால் சொன்னது…

\\பேச்சில் பொருளில்லை
உணவில் ருசியில்லை
உடலில் வலுவில்லை
நீ என்னருகில் இல்லாததால்!\\

ருசியில்லாத உணவு உள்ளே செல்வதில்லை அதனால் உடலில் வலுவில்லை.

வலி தெரிகிறது உங்கள் வரிகளில்.

து. பவனேஸ்வரி சொன்னது…

வணக்கம் அதிரை ஜமாஸ்,
உங்களுக்கு ரசிக்கும் தன்மை அதிகமாகவே இருக்கிறது. கருத்துகளுக்கு நன்றி...

புதியவன் சொன்னது…

//தனிமையில் வாழ்கிறேன்
நம்பிக்கை இழக்கிறேன்
உலகையே வெறுக்கிறேன்
நீ என்னருகில் இல்லாததால்!//

வெறுமை சொல்லும் வரிகள்.
கவிதை நல்லா இருக்கு...

நேர்மறையான எண்ணங்கள் சொல்லும்
கவிதைகளும் எழுதலாமே...!?

து. பவனேஸ்வரி சொன்னது…

வணக்கம்,
புதியவன் எந்த நேர்மறையான எண்ணங்களைப் பற்றி எழுதச் சொல்கிறீர்கள்?

புதியவன் சொன்னது…

இல்லை முடியாது
என்பது போன்றவை
எதிர்மறை சொற்கள்
இருக்கிறது முடியும்
என்பவை நேர்மறை
சொற்கள்.

இது உங்களுக்கும் தெரிந்திருக்கும்
இது போன்ற சொற்கள் நமக்குள் தன்னம்பிக்கையை வளர்க்கும்...

அதனால், இது போன்ற வார்த்தைகளை உங்கள் கவிதைகளில் சேர்த்துக் கொள்ளலாமே... இது என்னுடைய ஒரு சிறிய கருத்து மட்டுமே...

மு.வேலன் சொன்னது…

நீ என்னருகில் இல்லாததால்!

யார் இந்த நீ?

இனியவள் புனிதா சொன்னது…

//தனிமையில் வாழ்கிறேன்
நம்பிக்கை இழக்கிறேன்
உலகையே வெறுக்கிறேன்
நீ என்னருகில் இல்லாததால்//

பிடிச்சிருக்கு..:-)

நான் சொன்னது…

நீ என்னருகில் இல்லாததால்!

நீ என்னருகில் இருந்ததால்!
மாற்றி எழுத முயற்ச்சிக்கலாமே

து. பவனேஸ்வரி சொன்னது…

வணக்கம்,

புதியவனின் கருத்துக்கு நன்றி. நேர்மறையான எண்ணங்களைக் கொண்ட கவிதைகளையும் எழுத முயற்சிக்கிறேன். உங்களது கருத்துக்களை வரவேற்கிறேன்.

மு.வேலன் அவர்களே, அருகில் இல்லாத அந்த "நீ"யைப் பற்றித் தெரிந்து பயனேதும் இல்லையே...

இனியவள் புனிதாவின் கருத்துக்கு நன்றி.

நான் அவர்களே,'நீ என்னருகில் இருந்ததால்'.......நல்ல தலைப்பு. எழுத முயற்சிக்கிறேன். கருத்துக்கு நன்றி.

திகழ்மிளிர் சொன்னது…

அதிரை அவர்களின் வலைச்சரப் பதிவின்
மூலம் வருகின்றேன்.
அருமையான வரிகள்