வியாழன், 2 ஜூன், 2011

எதற்கு வாழ்கிறேன்?






யாரிடத்தில் சொல்வேன்


யார் தோளில் சாய்வேன்

யார் மடியில் துயில்வேன் –நான்

யாரிடத்தில் அழுவேன்?



இன்று மட்டும் அனுமதி

கொஞ்சம் அழுது கொள்கிறேன்

இனி எனக்கு எங்கே நிம்மதி?

நான் தொலைந்துப் போகிறேன்!



கனவு கண்டு கனவு கண்டு

வாழ்ந்துப் பார்க்கிறேன் –நான்

நிஜத்தினிலே மனமுடைந்து

மரித்துப் போகிறேன்!



கதைக்கக்கூட துணையுமின்றி

கூண்டில் வாழ்கிறேன் –பிறர்

சிரிக்க வைத்து உள்ளுக்குள்ளே

அழுது தீர்க்கிறேன்!



வேதனையைத் தாங்கிக்கொண்டு

வெளியில் சிரிக்கிறேன் –நான்

தன்னந்தனியே அமர்ந்துக்கொண்டு

கதறி அழுகிறேன்!



காலை மாலை தினமும் உன்னை

நினைத்து உருகிறேன் -நான்

வலிகள் தாங்கி சுமைகள் தாங்கி

எதற்கு வாழ்கிறேன்?







9 கருத்துகள்:

logu.. சொன்னது…

\\கனவு கண்டு கனவு கண்டு

வாழ்ந்துப் பார்க்கிறேன் –நான்

நிஜத்தினிலே மனமுடைந்து

மரித்துப் போகிறேன்!\\

Nijamana varigal.

து. பவனேஸ்வரி சொன்னது…

நன்றி நண்பரே!

கிருஷ்ணா சொன்னது…

என்ன தோழீ.. வர வர ஒரே சோகம்?! கவிதையில் கண்ணீரின் ஈரம் தெரிவது போல் இருக்கிறது.. கண்கள் யாருடையது என்றுதான் தெரியவில்லை!

Yaathoramani.blogspot.com சொன்னது…

மிக மிக அருமை
சோகத்தின் சுமையை
படிப்பவர் நெஞ்சில் ஏற்றிப்போகும்
அற்புத படைப்பு
தொடர வாழ்த்துக்கள்

rajamelaiyur சொன்னது…

Nice kavithai

து. பவனேஸ்வரி சொன்னது…

கிருஷ்ணா: கண்கள் என்னுடையவை....ஆனால், கண்ணீர் எமக்குச் சொந்தமில்லை :)


இரமணி: சோகத்தின் சுமை உங்கள் நெஞ்சில் ஏற்றப்பட்டிருந்தால், அதற்காக வருந்துகிறேன் ஐயா.

இராஜா: நன்றி ஐயா.

பிரபாஷ்கரன் சொன்னது…

சுகமான கவிதை வரிகள் கனவுகள் இலையென்றால் வாழ்க்கை சுவாரசியம் இல்லாமல் போய் விடும் கவிதை அருமை

து. பவனேஸ்வரி சொன்னது…

கனமான இயத்துடன் எழுதியதைச் சுகமான வரிகள் என்கிறீர்களே?

eye brows சொன்னது…

arumaiyana kavithai, plse come to my blogspot and reply me tholi...........