வியாழன், 19 பிப்ரவரி, 2009

அழிவை நோக்கி…



ஓர் இனத்தின் அடையாளமே அவர்கள் பேசும் மொழிதான். உலகத்தில் எத்தனையோ மொழிகள் இருப்பினும் பழமை வாய்ந்த மொழியாய், செம்மொழியாய் இருப்பது நமது தாய்மொழியாம் தமிழ்மொழியாகும். உலகம் தோன்றிய காலம் முதல் இன்று வரையில் எத்தனையோ மொழிகள் தோன்றி அழிந்துவிட்டன. உலகிலேயே முதன் முதலில் சங்கம் வைத்து மொழியை வளர்த்த இனம் நாம்.

தமிழ்மொழியில் உள்ள சிறப்பு வேறெந்த மொழியிலும் இல்லை என ஆணித்தரமாகக் கூறலாம். வையம் புகழும் திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் தமிழில் எழுதப்பட்டது. நமது பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் எடுத்தியம்பும் எத்தனையோ நூல்கள் நமது இலக்கியத்தில் உண்டு. பன்மொழிக் கற்ற மகாகவி பாரதியார் கூட “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதானது எங்கும் காணோம்” என்றுதான் பாடியிருக்கிறார்.

அத்தகையச் சிறப்புமிக்க நம் தாய்மொழி, செழுமை வாய்ந்த தமிழ்மொழி இன்று அழிவை நோக்கிச் செல்கிறது என்றால் அது மிகையில்லை. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமென்றால் முதலில் அவ்வினத்தின் மொழியை ஒழிக்க வேண்டும் என்பது நாமறிந்த உண்மை. நமது மலேசிய மலைநாட்டில் வசிக்கும் நம்மினக் குழந்தைகளுக்கு தமிழறிவு ஊட்டுவது தமிழ்ப்பள்ளிகளே. அத்தகைய தமிழ்ப்பள்ளிகள் இன்று அழிவை நோக்கிச் சென்றுக்கொண்டிருக்கின்றன.

நம்மின மக்களே ‘ஏன் வேறு பள்ளிக்கு அனுப்பக்கூடாதா?’, ‘தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புவதால் என்ன பயன்?’, ‘தமிழ் சோறு போடுமா?’ என்றெல்லாம் கேள்வி மேல் கேள்வி கேட்கின்றனர். இவர்களது இச்செயலானது மல்லாக்கப் படுத்து தன் மேலேயே உமிழ்வது போல்தான் இருக்கிறது. என்ன ஒரு மடத்தனமான கேள்வி!

உன் மொழியை நீ கற்காவிட்டால் பிற இனத்தவனா அக்கறையுடன் வந்துப் படிக்கப் போகிறான்? தங்கள் பிள்ளைகளைச் சீனப் பள்ளிக்கும் தேசியப் பள்ளிக்கும் அனுப்பும் மரத்தமிழர்களே, எத்தனை சீனர்களும் மலாய்க்காரர்களும் அவர்கள் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புகிறார்கள் என்று சிந்தித்துப் பார்த்தீர்களா? வீட்டிலிருக்கும் அம்மாவை (தமிழ்) விட பக்கத்து வீட்டிலிருக்கும் ஆண்ட்டி (பிறமொழி) உங்களுக்கு உயர்வோ? ஏன் தமிழ் படிக்க வேண்டும் என்று மூக்கால் அழும் முட்டாள்களே கேளுங்கள்!

நமக்கென்று இந்நாட்டில் சொல்லிக்கொள்ளும்படியாக எதுவும் இல்லை. இருக்கும் மொழியையும் நமது பண்பாடு, கலாச்சாரத்தையாவது காப்பாற்றலாம் அல்லவா? தமிழ்ப்பள்ளிகளில் மொழியோடு சேர்ந்து சமயமும் நன்னெறியும் போதிக்கப்படுகிறது. அதனால் நம்மின பிள்ளைகள் சிறு வயதிலேயே சமயத்தை அறிந்துக்கொள்ள ஏதுவாகயிருக்கிறது. பழமொழியும், செய்யுளும், ஆத்திச்சூடியும், ராமாயண மகாபாரத கதைகளும், சிலப்பதிகாரமும், மணிமேகலையும் தமிழ்ப்பள்ளியைத் தவிர்த்து வேற்று பள்ளிகளில் சொல்லிக் கொடுப்பார்களா?

‘நான் தமிழன்’; ‘நான் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியன்’; ‘நான் தமிழ்ச் சமுதாயத்தின் பிரதிநிதி (அரசியல்வாதி); நான் தமிழாசிரியன்; நான் தமிழ் எழுத்தாளன் என்று மார்தட்டிக்கொள்ளும் மரத்தமிழனே, உன் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளியில் சேர்க்க மட்டும் எப்படியடா நீ மறந்து போனாய்? ‘தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பாவிட்டால் என்ன? நான் தான் வீட்டிலேயே பிள்ளைகளுக்குத் தமிழ் சொல்லிக்கொடுக்கிறேனே’ என்று சமாதானம் கூற முனையாதே!

வேற்றுமொழிப் பள்ளிகளில் தமிழ் ஒரு பாடமாக அமையலாம். ஆனால், அதைப் படித்தே தீர வேண்டும் என்ற கட்டாயம் ஒரு போதும் விதிக்கப்படமாட்டாது. நீங்கள் வேற்றுப் பள்ளிகளுக்குப் பிள்ளைகளை அனுப்புவதால் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கைக் குறைகிறது. குறைந்த மாணவர்களைக் கொண்ட பள்ளிகளை இழுத்து மூடுவதற்கு நம் நாட்டில் சிலர் வழி மேல் விழி வைத்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர். தமிழ்ப்படித்தவர்கள் எண்ணிக்கைக் குறைந்தால் அடுத்தபடியாக தமிழ் சார்ந்த துறைகளும் வீழ்ச்சியைச் சந்திக்கும். வானொலியிலும் தொலைக்காட்சியிலும் இப்பொழுது உள்ளதை விட பன்மடங்கு தமிழ்க்கொலை நடக்கும்.

எனதருமைத் தோழர்களே இந்நாட்டில் தமக்கென சொந்த மொழியில்லாது பிறமொழிச் சொற்களை (தமிழ்மொழி உட்பட) இரவல் வாங்கி (கொள்ளையிட்டு) ஒரு மொழியினை உருவாக்கி அதுவே தமது தாய்மொழி என்றும் அதிகாரப்பூர்வ மொழியென்றும் அடையாளம் காட்டி மார்த்தட்டிக்கொள்கின்றனர் சிலர். இவர்களின் நடுவே தொன்மையான மொழியினைத் தாய்மொழியாகக் கொண்ட நாமோ தமிழ்ப்படிப்பதற்கும் தயங்கி நம்மை நாமே தாழ்த்திக்கொள்ளலாமா?

இனம், மொழி உணர்வுக்காக உயிரையே துச்சமெனக் கருதிப் போராடும் புலிகள் மரபில் வந்தவர்களல்லவா நாம்? நமக்கு மட்டும் என்னவாயிற்று? வாய்ப்பு இருந்தும் பயன்படுத்திக்கொள்ளாமல் எதற்காக அகம்பாவத்தோடுத் திரிய வேண்டும்?

தாயை இழந்தவன் அனாதை; மொழியை இழந்தவனும் அனாதை தானே? சொந்த மொழிக்கூடத் தெரியாமல் நம் பிள்ளைகள் அனாதையாக வாழ வேண்டுமா? உலகம் அவர்களைப் பார்த்து நகைக்க வேண்டுமா? நமது இலக்கியங்களைப் படிக்கத் தெரியாமல் அவர்கள் திகைக்க வேண்டுமா? பிறநாட்டில் வசிக்கும் நம்மின சகோதரர்கள் அவர்களைப் பழிக்க வேண்டுமா? இதனைத் தமிழர்களாகிய நாம் சகிக்க வேண்டுமா? சிந்தித்துப்பாருங்கள்; விடை காணுங்கள்…

வீழ்வது நாமாக இருப்பினும்
வாழ்வதும் வளர்வதும் தமிழாக இருக்கட்டும்!

24 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

\\வீழ்வது நாமாக இருப்பினும்
வாழ்வதும் வளர்வதும் தமிழாக இருக்கட்டும்!\\

வீழ்வது நாமுல் அல்ல ...

நட்புடன் ஜமால் சொன்னது…

ஓர் இனத்தின் அடையாளமே அவர்கள் பேசும் மொழிதான்\\

சரியே

நட்புடன் ஜமால் சொன்னது…

தமிழ்மொழியில் உள்ள சிறப்பு வேறெந்த மொழியிலும் இல்லை என ஆணித்தரமாகக் கூறலாம்.\\

நிச்சியமாய்

நட்புடன் ஜமால் சொன்னது…

\\நம்மின மக்களே ‘ஏன் வேறு பள்ளிக்கு அனுப்பக்கூடாதா?’, ‘தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புவதால் என்ன பயன்?’, ‘தமிழ் சோறு போடுமா?’ என்றெல்லாம் கேள்வி மேல் கேள்வி கேட்கின்றனர். இவர்களது இச்செயலானது மல்லாக்கப் படுத்து தன் மேலேயே உமிழ்வது போல்தான் இருக்கிறது. என்ன ஒரு மடத்தனமான கேள்வி!\\

மேட்டர் சரிதான் மேடம் ...

இன்னும் சில வருடங்கள் கழித்து இதே சொல்வீங்களான்னு தெரிவியுங்க

நட்புடன் ஜமால் சொன்னது…

\\ஏன் தமிழ் படிக்க வேண்டும் என்று மூக்கால் அழும் முட்டாள்களே கேளுங்கள்!\\

காரம் ஜாஸ்தி ...

நட்புடன் ஜமால் சொன்னது…

\\எனதருமைத் தோழர்களே இந்நாட்டில் தமக்கென சொந்த மொழியில்லாது பிறமொழிச் சொற்களை (தமிழ்மொழி உட்பட) இரவல் வாங்கி (கொள்ளையிட்டு) ஒரு மொழியினை உருவாக்கி அதுவே தமது தாய்மொழி என்றும் அதிகாரப்பூர்வ மொழியென்றும் அடையாளம் காட்டி மார்த்தட்டிக்கொள்கின்றனர் சிலர். இவர்களின் நடுவே தொன்மையான மொழியினைத் தாய்மொழியாகக் கொண்ட நாமோ தமிழ்ப்படிப்பதற்கும் தயங்கி நம்மை நாமே தாழ்த்திக்கொள்ளலாமா?\\

மிக அருமை ...

நட்புடன் ஜமால் சொன்னது…

\\தாயை இழந்தவன் அனாதை; மொழியை இழந்தவனும் அனாதை தானே? சொந்த மொழிக்கூடத் தெரியாமல் நம் பிள்ளைகள் அனாதையாக வாழ வேண்டுமா? உலகம் அவர்களைப் பார்த்து நகைக்க வேண்டுமா? நமது இலக்கியங்களைப் படிக்கத் தெரியாமல் அவர்கள் திகைக்க வேண்டுமா? பிறநாட்டில் வசிக்கும் நம்மின சகோதரர்கள் அவர்களைப் பழிக்க வேண்டுமா? இதனைத் தமிழர்களாகிய நாம் சகிக்க வேண்டுமா? சிந்தித்துப்பாருங்கள்; விடை காணுங்கள்…\\

விடை காணுவோம் என்பதே நலம்.

புதியவன் சொன்னது…

உங்கள் மொழிப் பற்று மெய் சிலிர்க்க வைக்கிறது...கவலைப் பட வேண்டாம் உலகம் உள்ள வரை தமிழும் நிலைத்திருக்கும்...

சுரேஷ் மனோ சொன்னது…

சூப்பர்!
சந்தேக் மச்சாம் பூங்கா!!

சொந்த பில்லையை.. சீன ஸ்கூல்லெ.. மலாய் ஸ்கூல்லெ பொட்டு விட்டு.. தமிழ் ஸ்கூல்லெ சாத்திட்டாங்க.. ஒடைச்சிட்டாங்கனு ஆர்பாட்டம் பன்னுராங்க சில தமிழ் மக்கள்! எல்லா மலேசிய தமிழர்களூம் அவுங்க பில்லைங்கலெ தமிழ் ஸ்கூல்லெ போட்டாலே போதும்.... தமிழ் ஸ்கூல்லெ சாத்துரதும் ஒடைக்கிரதும் நிருத்தலாமே!!!

நட்புடன் ஜமால் சொன்னது…

\\புதியவன் கூறியது...

உங்கள் மொழிப் பற்று மெய் சிலிர்க்க வைக்கிறது...கவலைப் பட வேண்டாம் உலகம் உள்ள வரை தமிழும் நிலைத்திருக்கும்...\\

சரியே நண்பரே ...

து. பவனேஸ்வரி சொன்னது…

நட்புடன் ஜமால் கூறியது...
\\நம்மின மக்களே ‘ஏன் வேறு பள்ளிக்கு அனுப்பக்கூடாதா?’, ‘தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புவதால் என்ன பயன்?’, ‘தமிழ் சோறு போடுமா?’ என்றெல்லாம் கேள்வி மேல் கேள்வி கேட்கின்றனர். இவர்களது இச்செயலானது மல்லாக்கப் படுத்து தன் மேலேயே உமிழ்வது போல்தான் இருக்கிறது. என்ன ஒரு மடத்தனமான கேள்வி!\\

//மேட்டர் சரிதான் மேடம் ...

இன்னும் சில வருடங்கள் கழித்து இதே சொல்வீங்களான்னு தெரிவியுங்க//

சில வருடங்கள் கழித்தல்ல, எத்தனை வருடம் கழித்தாலும் இதையே சொல்லுவேன். வேண்டுமென்றால் ஞாபகம் வைத்துக் கேட்டுப் பாருங்கள் நண்பரே.

\\ஏன் தமிழ் படிக்க வேண்டும் என்று மூக்கால் அழும் முட்டாள்களே கேளுங்கள்!\\

//காரம் ஜாஸ்தி ...//

சுரணைக் கெட்ட ஜென்மங்களுக்கு உறைக்கப் போவதில்லை. ஆகவே காரத்தைப் பற்றி கவலை வேண்டாம். உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி நண்பரே.

நட்புடன் ஜமால் சொன்னது…

\\சுரணைக் கெட்ட ஜென்மங்களுக்கு உறைக்கப் போவதில்லை. ஆகவே காரத்தைப் பற்றி கவலை வேண்டாம். உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி நண்பரே.\\

உறைக்க வைக்க வேண்டும்

செய்வோம் ...

து. பவனேஸ்வரி சொன்னது…

புதியவன் கூறியது...
//உங்கள் மொழிப் பற்று மெய் சிலிர்க்க வைக்கிறது...கவலைப் பட வேண்டாம் உலகம் உள்ள வரை தமிழும் நிலைத்திருக்கும்...//

தமிழ் நிலைத்திருக்கும் என்பது உண்மை. ஆனால் எத்தனை சதவிகிதம் பயன்பாட்டில் இருக்கும் என்பதுவே இங்கே கேள்விக்குறி ஐயா. தமிழ் இனி மெல்லச் சாகும் என்றான் பாரதிதாசன். அவனது கூற்று உண்மையாகிவிடும் போல் உள்ளதே. உங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே.

து. பவனேஸ்வரி சொன்னது…

சுரேஸ் மனோ,
அவர்களின் கருத்துக்கு நன்றி. மிகவும் சிரமப்பட்டு தமிழில் எழுத முயன்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள். இன்னும் முயன்றால் சிறப்பாக தங்களால் எழுத இயலும். நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மையே. சில தமிழ் அறிஞர்கள் கூட தங்கள் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பாமல் வேறு பள்ளிகளுக்கு அனுப்புவதை நான் கண்கூடாகப் பார்துள்ளேன். அவர்களைக் குறைக் கூறிப் பயனில்லை. அவர்களுக்குச் சிந்திக்கும் திறனைக் குறைவாகக் கொடுத்த ஆண்டவனைதான் குறைக்கூற வேண்டும். உங்கள் கருத்துகளுக்கு நன்றி அன்பரே.

து. பவனேஸ்வரி சொன்னது…

நட்புடன் ஜமால் கூறியது...
\\சுரணைக் கெட்ட ஜென்மங்களுக்கு உறைக்கப் போவதில்லை. ஆகவே காரத்தைப் பற்றி கவலை வேண்டாம். உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி நண்பரே.\\

//உறைக்க வைக்க வேண்டும்

செய்வோம் ...//

எப்படி ஐயா உறைக்கச் செய்வது?

தேவன் மாயம் சொன்னது…

ஓர் இனத்தின் அடையாளமே அவர்கள் பேசும் மொழிதான். உலகத்தில் எத்தனையோ மொழிகள் இருப்பினும் பழமை வாய்ந்த மொழியாய், செம்மொழியாய் இருப்பது நமது தாய்மொழியாம் தமிழ்மொழியாகும். உலகம் தோன்றிய காலம் முதல் இன்று வரையில் எத்தனையோ மொழிகள் தோன்றி அழிந்துவிட்டன. உலகிலேயே முதன் முதலில் சங்கம் வைத்து மொழியை வளர்த்த இனம் நாம்///

உண்மைதான்..

து. பவனேஸ்வரி சொன்னது…

thevanmayam கூறியது...
ஓர் இனத்தின் அடையாளமே அவர்கள் பேசும் மொழிதான். உலகத்தில் எத்தனையோ மொழிகள் இருப்பினும் பழமை வாய்ந்த மொழியாய், செம்மொழியாய் இருப்பது நமது தாய்மொழியாம் தமிழ்மொழியாகும். உலகம் தோன்றிய காலம் முதல் இன்று வரையில் எத்தனையோ மொழிகள் தோன்றி அழிந்துவிட்டன. உலகிலேயே முதன் முதலில் சங்கம் வைத்து மொழியை வளர்த்த இனம் நாம்///

//உண்மைதான்..//

உண்மைதான். அதனை உணர்ந்தால் அனைவருக்கும் நன்மைதான். கருத்துக்கு நன்றி நண்பரே.

தேவன் மாயம் சொன்னது…

தமிழ் நிலைத்திருக்கும் என்பது உண்மை. ஆனால் எத்தனை சதவிகிதம் பயன்பாட்டில் இருக்கும் என்பதுவே இங்கே கேள்விக்குறி ஐயா. தமிழ் இனி மெல்லச் சாகும் என்றான் பாரதிதாசன். அவனது கூற்று உண்மையாகிவிடும் போல் உள்ளதே. உங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே.///

தமிழ் பற்றி என் பதிவை நேரமிருப்பின் படிக்கவும்!http://abidheva.blogspot.com/2009/01/blog-post_20.html

தமிழ் சொன்னது…

/எனதருமைத் தோழர்களே இந்நாட்டில் தமக்கென சொந்த மொழியில்லாது பிறமொழிச் சொற்களை (தமிழ்மொழி உட்பட) இரவல் வாங்கி (கொள்ளையிட்டு) ஒரு மொழியினை உருவாக்கி அதுவே தமது தாய்மொழி என்றும் அதிகாரப்பூர்வ மொழியென்றும் அடையாளம் காட்டி மார்த்தட்டிக்கொள்கின்றனர் சிலர். இவர்களின் நடுவே தொன்மையான மொழியினைத் தாய்மொழியாகக் கொண்ட நாமோ தமிழ்ப்படிப்பதற்கும் தயங்கி நம்மை நாமே தாழ்த்திக்கொள்ளலாமா?/

சரியாகச் சொன்னீர்கள்



/வீழ்வது நாமாக இருப்பினும்
வாழ்வதும் வளர்வதும் தமிழாக இருக்கட்டும்!/

உணமை தான்

அழிவை நோக்கி என்பதை விட
ஆக்கத்தை நோக்கிப் பயணிப்போமே



வாழ்த்துகள்

து. பவனேஸ்வரி சொன்னது…

thevanmayam கூறியது...
தமிழ் நிலைத்திருக்கும் என்பது உண்மை. ஆனால் எத்தனை சதவிகிதம் பயன்பாட்டில் இருக்கும் என்பதுவே இங்கே கேள்விக்குறி ஐயா. தமிழ் இனி மெல்லச் சாகும் என்றான் பாரதிதாசன். அவனது கூற்று உண்மையாகிவிடும் போல் உள்ளதே. உங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே.///

//தமிழ் பற்றி என் பதிவை நேரமிருப்பின் படிக்கவும்!http://abidheva.blogspot.com/2009/01/blog-post_20.html//

நிச்சயம் படிக்கிறேன் நண்பரே.

து. பவனேஸ்வரி சொன்னது…

வணக்கம் திகழ்மிளிர் அவர்களே,

//
/வீழ்வது நாமாக இருப்பினும்
வாழ்வதும் வளர்வதும் தமிழாக இருக்கட்டும்!/

உணமை தான்

அழிவை நோக்கி என்பதை விட
ஆக்கத்தை நோக்கிப் பயணிப்போமே//

நிச்சயமாக. உங்கள் கருத்துக்கும் தமிழ் உணர்வுக்கும் நன்றி.

நான் சொன்னது…

நன்றாக ஒரு பதிவு தமிழின் உணர்வு இதில் வெளிப்படுகிறது. நன்று வாழ்த்துகள்

து. பவனேஸ்வரி சொன்னது…

நான் கூறியது...
//நன்றாக ஒரு பதிவு தமிழின் உணர்வு இதில் வெளிப்படுகிறது. நன்று வாழ்த்துகள்//

உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா.

navan சொன்னது…

wow... super la sister.... thank u very much.. tamilukkaaga vaalvoom, ettanai ettanai jaathigal vanthalum, naammudaya jaathi ondre onru, athu nam TAMIL jhaathi.. tanggaludaya tamil unarvukku enathu manamaarntha nadri, tanggalai poondru, ovvoru tamilanin manathilum tamil patru iruka vendum enbathe en aaval..... Vaalga valamudan..... meendum nandri, vaaltukkal.....