வெள்ளி, 20 பிப்ரவரி, 2009

எங்கே செல்லும்…? (14)முகிலன் எதையோ நினைத்துச் சிரித்துக்கொண்டான். அவனை நோக்கிச் சென்ற கவிதா நாணத்துடன் புன்னகைத்தாள்.

“அப்புறம், உன் ஆளப் பார்த்தாச்சா? என்ன சொன்னாரு?” என வினவினான் முகிலன்.

“ஒன்னுமே சொல்லல. கடைக்கிட்ட நின்னுக்கிட்டு இருந்தாங்க, பார்த்துச் சிரிச்சாங்க. அவ்ளோதான். பேசக்கூட இல்ல…” என்று வருத்தம் தோய்ந்தக் குரலில் சொன்னாள் அவள்.

“ஓ, மேடத்துக்குப் பார்த்த போதாதோ? கிட்டவந்து பேசணுமோ? நம்ம வீட்ல யாராவது பார்க்கணும் அப்பதான் நீ அடங்குவே!”

“ஹஹஹா… நாங்கனா மாட்டிக்க மாட்டோமா. எதச் செஞ்சாலும் ப்பிளான் பண்ணி செய்யணும்,” என்று வடிவேலு பாணியில் கூறினாள் அவள்.

“செய்வீங்க, செய்வீங்க! நீங்க யாரு? நீங்க எல்லாத்தையும் செய்வீங்க. என்னை மாட்டி விட்டிடாம இருந்தா சரி,” என்றான் முகிலன்.

“என்ன முகி இப்படிச் சொல்ற? நாம அப்படியா பழகுறோம்? எனக்கு ஏதாவது பிரச்சனைனா அது உனக்கு வந்த மாதிரிதானே?” என்று கிண்டலாய் கேட்டாள் கவிதா.

முகிலன் அவளைப் பார்த்துச் செல்லமாய் முறைத்தான். அந்நேரம் பார்த்து பாட்டி அவ்விடம் வரவும் அவ்விருவரும் பேச்சை மாற்றினர். முகிலன் பாட்டியிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டுச் சென்றுவிட்டான்.

அவ்வாரம் முழுவதும் கவிதா ஐங்கரனின் நினைவிலேயே கழித்தாள். அவனை மீண்டும் சந்திக்கும் மார்க்கத்தை யோசித்துக்கொண்டிருந்தாள். முகிலனும் பாட்டி வீட்டிற்கு வந்தபாடியில்லை. இறுதியாக அவ்வார இறுதியில் ஐங்கரன் அன்று வரச்சொன்ன கோவிலுக்குச் சென்று பார்ப்பது என்று முடிவுக்கட்டினாள். எப்படியாயினும் அவன் கோவிலுக்கு வந்தே தீருவான் என்று அவள் உள்மனம் கூறியது.

கவிதாவுடன் பள்ளியில் பயிலும் ஆனால் அவளைவிட வயது மூத்த சங்கரி, கோமளா என்ற இரு சகோதரிகளிடம் தனதுக் கதையைக் கூறி தன்னுடன் கோவிலுக்கு வருமாறு வேண்டினாள். அவர்களும் இந்த மாதிரி விசயங்களில் கில்லாடிகள் என்பதால் அவளுக்கு உதவுவதாக ஒப்புக்கொண்டனர்.

வெள்ளிக்கிழமை வந்தது. சங்கரி, கோமளா, கவிதா ஆகிய மூவரும் கோவிலுக்குக் கிளம்பினர். போகும் வழியிலேயே ஐங்கரனைச் சந்திக்க வேண்டும் என்று கவிதா தனக்குத் தெரிந்த சாமிப்பெயர்களை எல்லாம் கூறி வேண்டிக்கொண்டாள். அவள் வேண்டுதல் வீண்போகவில்லை. அவள் எதிர்ப்பார்த்தபடியே ஐங்கரன் அவளுக்கு முன்னதாகக் கோவிலில் அமர்ந்திருந்தான். ஏனோ தெரியவில்லை, அவனைப் பார்த்த மறுவினாடியே கவிதாவின் தலை தரை நோக்கித் தாழ்ந்தது. இது அவளுக்கே வியப்பாக இருந்தது.

இறைவனை தரிசித்துக் கோவிலை வலம் வரும்போது கூட கவிதாவின் கண்கள் ஐங்கரன் இருக்கும் இடத்தையே நாடின. தலைக் கவிழ்ந்திருந்தாலும் ஓரக்கண்ணால் அவனைப் பார்ப்பதை அவளால் தவிர்க்க முடியவில்லை.

அவளும் தோழிகளும் கோவிலைவிட்டுக் கிளம்ப முற்படும் போது ஐங்கரனின் நண்பன் ஒருவன் அவ்விடம் வந்தான். நேரே கவிதாவிடம் வந்த அவன்,

“எக்ஸ்கியூஸ்மீ, ஐங்கரன் உங்கக்கிட்ட பேசணும்’னு சொன்னாங்க. கொஞ்ச நேரம் வர்றீங்களா?” என்றான்.

கவிதாவிற்கு நெஞ்சம் பதைப்பதைத்தது. தான் ஒரு ஆண் மகனுடன் பேசுவதை யாராவதுப் பார்த்துவிடுவார்களோ என்ற அச்சம் பரவியது. அவள் மருண்ட விழிகளுடன் தன் தோழிகளைப் பார்த்தாள். அவர்கள் கண்ணாலேயே அவளுக்குத் தைரியம் சொல்லி போய் வரும்படி சைகைக் காட்டினர். கவிதா கால்கள் நடுங்க அவனைத் தொடர்ந்துச் சென்றாள்.

அங்கே சாந்தமே உருவாக ஐங்கரன் கோவிலின் பின்னால் அமர்ந்திருந்தான். அவளைக் கண்டதும் எழுந்து நின்றான்.

“ஹாய்!” என்றான்.

“ஹாய்,” என்று புன்னகைத்தாள் அவள்.

“தெரியாத மாதிரிப் போறீங்க? என்கிட்ட பேச மாட்டீங்களா?” என்றான் அவன்.

கவிதாவிற்கு அவனிடம் நிறைய பேச வேண்டும் போல் இருந்தது. ஆனால் அவனுடன் பேசுவதை யாராவதுப் பார்த்து வீட்டின் சொல்லிவிடுவார்களோ என்று அஞ்சினாள். அதனால் அவளால் அவனைச் சரியாகப் பார்க்கக் கூட முடியவில்லை.

“சாரி. நான் வீட்டுக்குப் போகணும். வீட்ல யாராவதுப் பார்த்தா பிரச்சனையாகிடும்,” என்றுச் சொல்லிக் கொண்டே சுற்றும் முற்றும் வந்துப் போகிறவர்களைக் கலவரத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் அவளை வேடிக்கையாகப் பார்த்தான்.

தொடரும்…

13 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

\\“என்ன முகி இப்படிச் சொல்ற? நாம அப்படியா பழகுறோம்? எனக்கு ஏதாவது பிரச்சனைனா அது உனக்கு வந்த மாதிரிதானே?” என்று கிண்டலாய் கேட்டாள் கவிதா.\\

நக்கல்ஸ் ...

நட்புடன் ஜமால் சொன்னது…

செல்லமாய் முறைத்தான்\\

நல்லாக்கீதே ...

நட்புடன் ஜமால் சொன்னது…

\\“சாரி. நான் வீட்டுக்குப் போகணும். வீட்ல யாராவதுப் பார்த்தா பிரச்சனையாகிடும்,” என்றுச் சொல்லிக் கொண்டே சுற்றும் முற்றும் வந்துப் போகிறவர்களைக் கலவரத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் அவளை வேடிக்கையாகப் பார்த்தான்.

தொடரும்…\\

எஃபக்ட் மிஸ்ஸிங்

ஏன் ...

(அந்த நேரத்தில் அங்கே வந்த ...)

இப்படி போட்டிருக்கலாமோ ...

து. பவனேஸ்வரி சொன்னது…

நட்புடன் ஜமால் கூறியது...
\\“சாரி. நான் வீட்டுக்குப் போகணும். வீட்ல யாராவதுப் பார்த்தா பிரச்சனையாகிடும்,” என்றுச் சொல்லிக் கொண்டே சுற்றும் முற்றும் வந்துப் போகிறவர்களைக் கலவரத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் அவளை வேடிக்கையாகப் பார்த்தான்.

தொடரும்…\\

//எஃபக்ட் மிஸ்ஸிங்

ஏன் ...

(அந்த நேரத்தில் அங்கே வந்த ...)

இப்படி போட்டிருக்கலாமோ ...//

தொடரும் போடும் போதே நினைத்தேன். நீங்கள் இப்படிக் கூறுவீர்கள் என்று. அடிக்கடி அதே பாணியைக் கடைப்பிடித்தால் வாசகர்களுக்குச் சலிப்பு தட்டிவிடும் என்று தோன்றியது. அதனால்தான் இப்படி...

புதியவன் சொன்னது…

//கவிதாவிற்கு நெஞ்சம் பதைப்பதைத்தது. தான் ஒரு ஆண் மகனுடன் பேசுவதை யாராவதுப் பார்த்துவிடுவார்களோ என்ற அச்சம் பரவியது. அவள் மருண்ட விழிகளுடன் தன் தோழிகளைப் பார்த்தாள். அவர்கள் கண்ணாலேயே அவளுக்குத் தைரியம் சொல்லி போய் வரும்படி சைகைக் காட்டினர். கவிதா கால்கள் நடுங்க அவனைத் தொடர்ந்துச் சென்றாள்.//

ஒரு பெண்ணின் உணர்வுகளைச் சொன்ன விதம் அருமை...தொடருங்கள்...

நட்புடன் ஜமால் சொன்னது…

\\தொடரும் போடும் போதே நினைத்தேன். நீங்கள் இப்படிக் கூறுவீர்கள் என்று. அடிக்கடி அதே பாணியைக் கடைப்பிடித்தால் வாசகர்களுக்குச் சலிப்பு தட்டிவிடும் என்று தோன்றியது. அதனால்தான் இப்படி...\\

அட பரவாயில்லையே ...

இது கூட நல்லா இருக்கு ...

நட்புடன் ஜமால் சொன்னது…

உங்க எழுத்து இதுவரை சலிக்கவில்லை

தொடருங்கள் உங்கள் பாணியிலேயே

Divyapriya சொன்னது…

பொண்ணு பேசருதுக்கே இவ்ளோ வெட்கப் படராளா? ஹ்ம்ம்... :))

நான் சொன்னது…

நல்லாவே இருக்கு தொடர வாழ்த்துகிறேன்

து. பவனேஸ்வரி சொன்னது…

புதியவன் கூறியது...
//ஒரு பெண்ணின் உணர்வுகளைச் சொன்ன விதம் அருமை...தொடருங்கள்...//

கருத்துக்கு நன்றி நண்பரே. தொடரும்...

து. பவனேஸ்வரி சொன்னது…

நட்புடன் ஜமால் கூறியது...
//உங்க எழுத்து இதுவரை சலிக்கவில்லை

தொடருங்கள் உங்கள் பாணியிலேயே//

நிஜமாகவா? உங்கள் கூற்று எனக்கு ஊக்கமளிக்கிறது. மிக்க நன்றி நண்பரே.

து. பவனேஸ்வரி சொன்னது…

Divyapriya கூறியது...
//பொண்ணு பேசருதுக்கே இவ்ளோ வெட்கப் படராளா? ஹ்ம்ம்... :))//

இயற்கைதானே?

து. பவனேஸ்வரி சொன்னது…

நான் கூறியது...
//நல்லாவே இருக்கு தொடர வாழ்த்துகிறேன்//

நீங்க சொன்னா நல்லாதான் இருக்கும். கருத்துக்கு நன்றி ஐயா...