“கவிதாவோட பாட்டி தேடுவாங்களாம். சொல்லிக்காமல் வந்திருச்சி. அதான் போவுது,” என்று சமாளித்தாள் தேவி. ஐங்கரன் ஏமாற்றத்துடன் அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தான்.
கோவிலைச் சுற்றி சுற்றி வந்தக் கவிதா அடிக்கடி ஐங்கரன் இருக்கும் திசையைக் கடைக்கண்ணால் காணவே செய்தாள். ஐங்கரனும் அவளைக் காணத் தவறவில்லை.
‘ஐங்கரன்! இதுதானா உங்கள் பெயர்? எவ்வளவு அழகானப் பெயர். அன்றுத் திடலில் பெயரைக் கூடச் சொல்லாமல் சென்று விட்டீர்கள். உங்களை நினைத்து எத்தனை நாட்கள் ஏங்கினேன் தெரியுமா? இப்பொழுது மறுபடியும் உங்களைச் சந்தித்தும் பேசும் சக்தியை அறவே இழந்து நிற்கிறேனே. என்ன வந்தது என் கண்களுக்கு? உங்கள் கண்களை நோக்கவும் சக்தியின்றி தானாகவே நிலத்தை நோக்குகின்றதே. நான் ஏன் இப்படி மாறிவிட்டேன்?’ என்ற பலவாறாக மனதுக்குள்ளேயே பேசிக்கொண்டாள்.
‘அட, என்ன இது? இலக்கியமாக எண்ணுகின்றேனே? ஒரு வேளை அதிகமாக நாவல்கள் படிப்பதனால் ஏற்படும் தாக்கமாக இருக்குமோ? இருக்கலாம், இருக்கலாம். இருந்தால்தான் தவறு என்ன?” என்று தனக்குள் சிரித்தும் கொண்டாள்.
பூசை அனைத்தும் முடிந்து அவரவர் இல்லம் திரும்பினர். ஐங்கரன் என்ற பெயரும் அவனது அழகிய முகமும் அவளைத் தூங்கவிடாது இம்சித்தன. மீண்டும் எப்போது அவனைக் காணுவோம் என்று அனுதினமும் ஏங்கத் தொடங்கினாள். பலவாறாகச் சிந்தித்து பின்னர் ஒரு முடிவுக்கு வந்தாள்.
தனது மாமன் மகனான முகிலன் படிக்கும் அதே பள்ளியில்தான் ஐங்கரனும் படிக்கிறான் என்பது அவள் முன்பே அறிந்த விஷயம்தான். இம்முறைக் கொஞ்சம் துணிவை வரவழைத்துக் கொண்டு முகிலனிடமே ஐங்கரனைப் பற்றி விசாரிக்கத் துணிவுக் கொண்டாள். ஒருநாள், முகிலன் பாட்டி வீட்டிற்கு வந்திருந்தான். தேவியின் வீட்டிலிருந்து அப்பொழுதுதான் திரும்பி வந்த கவிதா முகிலனைக் கண்டதும் உற்சாகம் கொண்டாள்.
“ஹாய் முகி! எப்போ வந்தே? ரொம்ப நாளாச்சி உன்னைப் பார்த்து,” என்று சொல்லியவாறு அவனது தோளை உறுமையுடன் தட்டினாள் கவிதா. தன்னைவிட இரண்டு வயது மூத்தவனாக இருந்த போதிலும் சிறு வயதிலிருந்து ஒன்றாக வளர்ந்து வந்த காரணத்தால் ஒருமையுடனே அவனை அழைக்க உரிமைப் பெற்றிருந்தாள் அவள்.
“ஹாய்… இப்பதான் வந்தேன். நீ எங்கப் போய் சுத்திட்டு வர்றே? தேவி வீட்லேர்ந்து வர்றியா?” என்றான் முகிலன்.
“ஆமா! ஏய், நானே உன்னைப் பார்க்கணும்’னுதான் நினைச்சிக்கிட்டு இருந்தேன். நல்ல வேளை நீயே வந்துட்டே. ஒங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்.”
“என்ன, சொல்லு,” என்றான் முகிலன்.
“மொதல்ல இந்த விஷயத்தை நீ யார்கிட்டேயும் சொல்ல மாட்டேன்’னு சத்தியம் பண்ணு. அப்புறமாதான் சொல்லுவேன்.”
“சரி, சத்தியமா சார்கிட்டேயும் சொல்ல மாட்டேன். சொல்லு, என்ன விஷயம்?”
“உனக்கு உன்னோட ஸ்கூல்’ல படிக்கிற ஐங்கரனைத் தெரியுமா?”
முகிலன் அவளை ஏற இறங்கப் பார்த்தான். “ம்ம்…தெரியும். ஏன்?”
“ஆள் எப்படி? ஒ.கே’வா?” அன்று ஆர்வத்துடன் கேட்டாள் கவிதா. முகிலன் சந்தேகக் கண்களை அவள் மீது நாட்டினான்.
“என்னப் பார்க்கிறே? அன்னைக்குக் கோவில்’ல பார்த்தேன். உன்னோட ஸ்கூல்’னு கேள்விப் பட்டேன். அதான் உனக்குத் தெரியுமான்னு கேட்டேன்.”
“என்ன? அவன் உனக்கு ‘லைன்’ போடுறானா?”
“அப்படிப் போட்டாலும் பராவாயில்ல,” என்று முனுமுனுத்தாள் கவிதா.
“என்ன சொன்ன?” என்று தன் காதில் சரியாகத்தான் அவள் முனகியது விழுந்ததா என்று காதுகளையே நம்ப மாட்டாமல் கேட்டான் முகிலன்.
“ஒன்னுமில்ல… நீ எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும். முடியுமா?”
“ஹ்ம்ம்ம்…சொல்லு. செய்யறேன்,” என்றான் முகிலன். அவளிடம் முடியாது என்று கூற முடியுமா என்ன? சின்ன வயதிலிருந்தே அவளை நன்கு அறிந்து வைத்திருப்பவன் தானே.
ஆனால், கவிதா விசயத்தைக் கூறிய மறு நிமிடமே முகிலனின் முகம் மாறியது. “அடப்பாவி…!” என்று தன்னையும் மீறி கூறிவிட்டான்.
தொடரும்…

6 கருத்துகள்:
அட அதுக்குள்ளேயே ...
இப்ப தானே கவிதைய படிச்சேன்
இப்ப
கவிதாவையா ...
அவங்க கவிதாவா
கவி-தா வா !
\\“ஆள் எப்படி? ஒ.கே’வா?” அன்று ஆர்வத்துடன் கேட்டாள் கவிதா\\
இதுவரை பார்த்த கவிதாவுக்கும் இந்த வரிகளுக்கும் ஒரு வித்தியாசம் தெரிகிறதே.
நீண்ட நாள் நண்பன் என்பதாலா !
அல்லது
’அது’ உள்ளே வந்துடுச்சே அதனாலா!
\\“அப்படிப் போட்டாலும் பராவாயில்ல,” என்று முனுமுனுத்தாள் கவிதா.\\
ஆஹா ஆஹா
கவிதா வாழ்க
காதல் வாழ்க
\\ஆனால், கவிதா விசயத்தைக் கூறிய மறு நிமிடமே முகிலனின் முகம் மாறியது. “அடப்பாவி…!” என்று தன்னையும் மீறி கூறிவிட்டான்.\\
ம்ம்ம் - இந்த ‘தொடரும்’ ஓக்கே ...
//“அப்படிப் போட்டாலும் பராவாயில்ல,” என்று முனுமுனுத்தாள் கவிதா.//
ரசித்தேன் இந்த வரிகளை...தொடருங்கள் வாழ்த்துக்கள்...
வணக்கம்,
ஜமாலின் கருத்துகளுக்கு நன்றி.இதுவரை பார்த்த கவிதாவுக்கும் இந்த வரிகளுக்கும் ஒரு வித்தியாசம் தெரிகிறதே.
நீண்ட நாள் நண்பன் என்பதாலா !
அல்லது
’அது’ உள்ளே வந்துடுச்சே அதனாலா!//
இரண்டுமே இருக்கலாம் அல்லவா? ஹஹஹா... இந்தத் 'தொடரும்' உங்களைக் கவரும் என்று எதிர்ப்பார்க்கிறேன்.
புதியவன் கூறியது...
//“அப்படிப் போட்டாலும் பராவாயில்ல,” என்று முனுமுனுத்தாள் கவிதா.//
ரசித்தேன் இந்த வரிகளை...தொடருங்கள் வாழ்த்துக்கள்...//
நிச்சயம் தொடருவேன். நீங்களும் தொடர்ந்து வாருங்கள்...கருத்துக்கு நன்றி.
//
கருத்துரையிடுக