வியாழன், 15 ஜனவரி, 2009

பேய்கள் கூட்டம்!


உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசும்
நரிகள் கூட்டமடா-இது
பேய்கள் கூட்டமடா!

போலியான பாசமும்
அப்பாவி வேசமும் போட்டு
ஏய்க்கும் கும்பலடா-இது
பேய்கள் கூட்டமடா!

கொட்டும் மழையினிலே
ஆடு நனைகிறதென்று அழும்
ஓநாய்கள் கூட்டமடா-இது
பேய்கள் கூட்டமடா!

அப்பாவி வேடம் பூண்டு
பாவங்கள் பல செய்யும்
கொடும்பாவி கூட்டமடா-இது
பேய்கள் கூட்டமடா!

முன்னேறப் பாதைக்காட்டி
தடைகளையும் தோற்றுவிக்கும்
மோசடி கும்பலடா-இது
பேய்கள் கூட்டமடா!

வாய் இனிக்க பேசிவிட்டு
தலையினிலே மண் போடும்
நயவஞ்சர் கூட்டமடா-இது
பேய்கள் கூட்டமடா!

14 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

\\"பேய்கள் கூட்டம்!"\\

கூட்டமாவாஆஆஆஆஆஅ

நட்புடன் ஜமால் சொன்னது…

\\போலியான பாசமும்
அப்பாவி வேசமும் போட்டு
ஏய்க்கும் கும்பலடா\\

வருந்த வேண்டிய உண்மையான விடயம் ...

நட்புடன் ஜமால் சொன்னது…

\\வாய் இனிக்க பேசிவிட்டு
தலையினிலே மண் போடும்
நயவஞ்சர் கூட்டமடா-இது
பேய்கள் கூட்டமடா!\\

நிதர்சணம் ...

அப்துல்மாலிக் சொன்னது…

//முன்னேறப் பாதைக்காட்டி
தடைகளையும் தோற்றுவிக்கும்
மோசடி கும்பலடா//

சிந்திக்க வேண்டிய விடயம்...
உங்கள் வரிகளில் கோபம் தெறிக்கிறது..

மு.வேலன் சொன்னது…

மனிதர்களைப் பற்றி எப்பொழுது எழுத போகிறீர்கள்?

பெயரில்லா சொன்னது…

vanakam,

nalla oru kavithai, ganangalai karuporulaga vaithu eluthiya kavitai sirapu.

புதியவன் சொன்னது…

சமூகத்தின் மேல் ஏன் இவ்வளவு கோபம்...?
கவிதை வரிகள் அருமை...

A N A N T H E N சொன்னது…

//மனிதர்களைப் பற்றி எப்பொழுது எழுத போகிறீர்கள்?//
ஹாஹா... அதானே... மனுசங்கள பத்தி எழுதலையா?

து.பவனேஸ் எங்களை மாதிரி தேவர்களைப் பற்றியும் சீக்கிரமா எழுதுங்க

A N A N T H E N சொன்னது…

//இது
பேய்கள் கூட்டமடா!//

சுருக்கென தைக்கும் தலைப்பு

//போலியான பாசமும்
அப்பாவி வேசமும் போட்டு
ஏய்க்கும் கும்பலடா-இது
பேய்கள் கூட்டமடா!//

இருக்கத்தான் செய்றாங்க

A N A N T H E N சொன்னது…

கவிதை ரொம்ப நல்லாருக்கு

//வாய் இனிக்க பேசிவிட்டு
தலையினிலே மண் போடும்
நயவஞ்சர் கூட்டமடா-இது
பேய்கள் கூட்டமடா!//

என்ன இப்படி சொல்லிட்டீங்க? அப்போ நான் முதல்ல நால்லாருக்கு சொன்னதும் அப்படித்தான்னு சொல்ல வரீங்களா?

து. பவனேஸ்வரி சொன்னது…

வணக்கம்,

ஆமாங்க ஜமால், இப்போதெல்லாம் பேய்கள் கூட்டமாகத்தான் திரிகின்றன.

\\போலியான பாசமும்
அப்பாவி வேசமும் போட்டு
ஏய்க்கும் கும்பலடா\\

வருந்த வேண்டிய உண்மையான விடயம் ...//

மிகவும் வருந்த வேண்டாம். உடலுக்கு நல்லதல்ல.

து. பவனேஸ்வரி சொன்னது…

வணக்கம்,

அபுஅஃப்ஸர் கருத்துக்கு நன்றி. நன்றாக சிந்தியுங்கள்...வரிகளில் கோபமா? விரக்தி என்று சொல்லலாமே?

வாங்க வேலன். மனிதர்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன். கண்டுப்பிடிப்பது கடினமாக இருக்கின்றது. உங்களைப் போல் ஒரு சிலர் மட்டுமே கண்ணுக்குத் தெரிகின்றனர். கூட்டமாகத் தெரியும் போது, 'மனிதர் கூட்டம்' என்று எழுதிவிடுகிறேன். சரியா?

நண்பர் பிரகாஷ் அவர்களின் கருத்துக்கு நன்றி.

வணக்கம் புதியவன். ஏன் என்று கேட்டால் என்னவென்று பதில் சொல்வது? அடி மேல் அடி விழுந்தால் கோபம் வராதா?

வாங்க அனந்தன். நீங்க தேவரா? சொல்லவே இல்லையே? எப்படி அய்யா பூலோகத்தில் வந்து மாட்டிக்கொண்டீர்? நீங்களும் இந்திரனைப் போல திருட்டுத்தனம் செய்ய பூலோகம் தேடி வந்தீரோ?

//கவிதை ரொம்ப நல்லாருக்கு

//வாய் இனிக்க பேசிவிட்டு
தலையினிலே மண் போடும்
நயவஞ்சர் கூட்டமடா-இது
பேய்கள் கூட்டமடா!//

என்ன இப்படி சொல்லிட்டீங்க? அப்போ நான் முதல்ல நால்லாருக்கு சொன்னதும் அப்படித்தான்னு சொல்ல வரீங்களா?//

நான் ஒன்னும் சொல்லல. நீங்களே அப்படி நினைச்சிக்கிட்டா நான் என்னங்க சொல்றது?

logu.. சொன்னது…

\\
Kobamai ezhuthiyirunthaalum nallathaan irukkunga..

keep it up..\\

து. பவனேஸ்வரி சொன்னது…

வணக்கம்,
லோகுவின் கருத்துக்கு நன்றி :)