புதன், 24 டிசம்பர், 2008

அன்பு!


அன்பு என்பது
அழகான வார்த்தை மட்டுமல்ல
ஆழமானதும் கூட…
‘அன்பு’ என்று சொல்லும் போதே
இரு இதழ்களும் இணைகின்றன
பல அற்புதங்களை நிகழ்த்தும்
வல்லமையுடையது அன்பு!

அம்மாவின் அன்பு அரவணைப்பில்
அப்பாவின் அன்பு கண்டிப்பில்
ஆசானின் அன்பு போதிப்பில்
அண்ணனின் அன்பு அதிகாரத்தில்
ஆண்டவனின் அன்பு அருளில்
ஆன்மாவின் அன்பு உடலில்!

அன்பு செலுத்து
அதையும் அளவோடு செலுத்து
யாரிடம் அன்பாக இருக்கிறாய்
என்பது முக்கியமான ஒன்றல்ல
எதனால் அன்பு செலுத்துகிறாய்
எப்படி அன்பாய் இருக்கிறாய்
என்பதுவே முக்கியம்!

வாழ்க்கைக்கு முடிவுண்டு
அன்பிற்கு அழிவில்லை
மனிதனுக்கு விதியுண்டு
அன்பினிலே சதியில்லை
பணம் பந்தியிலே
குணம் குப்பையிலே
அன்பு உயிரிலே!

பிறருக்கு அன்பு செலுத்துவதைவிட
பிறரிடமிருந்து கிடைக்கும் அன்பில்
நீ சொர்க்கத்தைக் காண்பாய்
எது உனக்கு வேண்டுமென்று
நீ நினைக்கின்றாயோ-அதை
மற்றவர்களுக்குக் கொடு!

எதையும் கொடுத்தால்தானே
திரும்பவும் பெற முடியும்?
அன்பு மட்டும் அதற்கு
விதிவிலக்கா என்ன?


அன்பு என்பது
தங்கக் கட்டிகள் அல்ல
சிக்கனம் பிடித்து சேர்த்து வைப்பதற்கு
அன்பை பணம் கொடுத்தா
வாங்கப் போகிறாய்?
பின்பு ஏன் இந்தக் கஞ்சத்தனம்?
அன்பை அள்ளி வீசு-உன்னையும்
உலகம் ‘ஏசு’ என்று புகழும்!

மிருகத்திடம் செலுத்தும் அன்பில்
சிறிதாவது மனிதனிடம் காட்டியிருக்கலாம்
ஏனெனில், அன்பு பஞ்சமாகி
மனிதன் மிருகமாகி வருகிறான்!

அன்புக்காக ஏங்கும் ஜீவன்கள் பல
அன்பே உருவான ஜீவன்கள் சில
இவற்றுள் நீயும் நானும் எங்கே?

20 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

அன்பு - ஆஹா எவ்வளவு அழகான வார்த்தை.

நட்புடன் ஜமால் சொன்னது…

\\அன்பு என்பது
அழகான வார்த்தை மட்டுமல்ல
ஆழமானதும் கூட…
‘அன்பு’ என்று சொல்லும் போதே
இரு இதழ்களும் இணைகின்றன
பல அற்புதங்களை நிகழ்த்தும்
வல்லமையுடையது அன்பு!\\

நிஜம்.

நட்புடன் ஜமால் சொன்னது…

\\அன்பு செலுத்து
அதையும் அளவோடு செலுத்து
யாரிடம் அன்பாக இருக்கிறாய்
என்பது முக்கியமான ஒன்றல்ல
எதனால் அன்பு செலுத்துகிறாய்
எப்படி அன்பாய் இருக்கிறாய்
என்பதுவே முக்கியம்!\\

அருமை.

நட்புடன் ஜமால் சொன்னது…

\பிறருக்கு அன்பு செலுத்துவதைவிட
பிறரிடமிருந்து கிடைக்கும் அன்பில்
நீ சொர்க்கத்தைக் காண்பாய்
எது உனக்கு வேண்டுமென்று
நீ நினைக்கின்றாயோ-அதை
மற்றவர்களுக்குக் கொடு!\\

தெளிவான விஷயம் தாங்கிய வரிகள்

நட்புடன் ஜமால் சொன்னது…

\\எதையும் கொடுத்தால்தானே
திரும்பவும் பெற முடியும்?
அன்பு மட்டும் அதற்கு
விதிவிலக்கா என்ன?\\

சில சமயம் கொடுக்காமலும் கிடைக்கும்

சில சமயம் கொடுத்தாலும் கிடைக்காது

--- எனது கருத்து.

நட்புடன் ஜமால் சொன்னது…

\\அன்புக்காக ஏங்கும் ஜீவன்கள் பல
அன்பே உருவான ஜீவன்கள் சில
இவற்றுள் நீயும் நானும் எங்கே?\\

அருமையான கேள்வி ...

நமக்குள்ளே பல முறை எழும் கேள்வி

பதில் பதில்

இன்னும் தேடலில்...

நட்புடன் ஜமால் சொன்னது…

உலகே உன்னை ‘ஏசி'னாலும்,

நீ அன்பு காட்டு.

முதலில் உன்னிடம் அன்பாயிரு, மற்றவரிடம் நிச்சியம் அன்பு காட்டுவாய்.

மு.வேலன் சொன்னது…

//அம்மாவின் அன்பு அரவணைப்பில்
அப்பாவின் அன்பு கண்டிப்பில்
ஆசானின் அன்பு போதிப்பில்
அண்ணனின் அன்பு அதிகாரத்தில்
ஆண்டவனின் அன்பு அருளில்
ஆன்மாவின் அன்பு உடலில்!//
தங்கையின் அன்பும் அக்காளின் அன்பும் எப்படிப் பட்டதென்று சொல்லவில்லயே...

gayathri சொன்னது…

எது உனக்கு வேண்டுமென்று
நீ நினைக்கின்றாயோ-அதை
மற்றவர்களுக்குக் கொடு

nalla varikal

logu.. சொன்னது…

\\அன்புக்காக ஏங்கும் ஜீவன்கள் பல
அன்பே உருவான ஜீவன்கள் சில
இவற்றுள் நீயும் நானும் எங்கே?\\

naangallam kodukkira vagainga..
neenga eappadeeeee?

logu.. சொன்னது…

Anbu..
koduthal sirappanathu enraal..
peruthal mahathaanathu..

mmm.. unga kavithai..
romba nallarukkunga.

ஆதவன் சொன்னது…

உங்களுக்குக் கவிதை உள்ளம் இயல்பாகவே அமைந்துள்ளது. உங்களின் ஆர்வத்தை மேலும் வளர்த்துகொள்க!

அடிப்படையில், சந்தம், உவமை, எதுகை, மோனை முதலானவற்றில் மேலும் கவனம் வைத்தால் உங்கள் கவிதையில் இனிமை கூடிடும்.. சுவை சேர்ந்திடும்!

அதற்கு மேலும் போக எண்ணமிருந்தால் யாப்பிலக்கணத்தை ஒரு ஓட்டம் பார்த்துவிடுங்கள். பிறகு, உங்கள் வரிகள் எப்படி பிறக்கிறது என்று பாருங்கள்.

தொடர்ந்து எழுதுங்கள்..! பாராட்டுகள்!!

நான் சொன்னது…

மிருகத்திடம் செலுத்தும் அன்பில்
சிறிதாவது மனிதனிடம் காட்டியிருக்கலாம்
ஏனெனில், அன்பு பஞ்சமாகி
மனிதன் மிருகமாகி வருகிறான்!

அழகான வார்த்தைகள் அருமையான கவிதை மொத்தத்தில் அருமையாக அன்பை சொல்லிஇருக்கிறீர்கள்

புதியவன் சொன்னது…

//எதையும் கொடுத்தால்தானே
திரும்பவும் பெற முடியும்?
அன்பு மட்டும் அதற்கு
விதிவிலக்கா என்ன?//

ஆழமான வரிகள்...
கவிதை அன்பாய் அழகாய் இருக்கிறது...

A N A N T H E N சொன்னது…

அன்பைப் பற்றி அழகாக கவிதையாகவே சொல்லி இருக்கீங்க... அன்பே ஒரு கவிதைதான் இல்ல? அருமையான பகிர்வு

//அன்பு செலுத்து அதையும் அளவோடு செலுத்து... //
&
// அன்பு என்பது தங்கக் கட்டிகள் அல்ல சிக்கனம் பிடித்து சேர்த்து வைப்பதற்கு அன்பை பணம் கொடுத்தா வாங்கப் போகிறாய்? பின்பு ஏன் இந்தக் கஞ்சத்தனம்? //
இவை இரண்டுக்கும் உள்ள முரண்பாட்டைத் தவிர்த்திருக்கலாம்.

உங்கள் கவிதை ஒன்றை தமிழ் ஓசையில் கண்டேன், வாசித்தேன். வாழ்த்துக்கள்... மகிழ்ச்சி

து. பவனேஸ்வரி சொன்னது…

வணக்கம்,
கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. உங்கள் அறிவுரைகளை நிச்சயம் கருத்தில் கொள்வேன். தவறுகள் இருப்பின் தயவு கூர்ந்து சுட்டிக் காட்டவும்.

A N A N T H E N சொன்னது…

//தவறுகள் இருப்பின் தயவு கூர்ந்து சுட்டிக் காட்டவும்.//

தோ பாருங்க, "தவறு" என்ற வார்த்தை இங்கே இருக்கு... சுட்டி காட்டுறது என்ன, காட்டியே கொடுப்பேன்

து. பவனேஸ்வரி சொன்னது…

வணக்கம் அனந்தன்,
இங்கேயும் ஆரம்பிச்சுட்டிங்களா?

A N A N T H E N சொன்னது…

ச்சே ச்சே அப்படியேல்லாம் இல்ல... எழுதுங்க... உங்க தொடர் கதையைப் படிச்சிட்டு இருக்கேன்

து. பவனேஸ்வரி சொன்னது…

அனந்தனுக்கு நன்றி. உங்கள் ஆதரவுத் தொடர்ந்தால் எனது கதையும் தொடரும்... :)