திங்கள், 17 நவம்பர், 2008

அவளும் இவளும்…


அன்று மைதீட்டிய கண்களுடன்
அபிநயம் பிடித்தாள் அவள்
இன்று கண்களில் வெறியுடன்
ஆயுதம் ஏந்துகிறாள் இவள்!

வாரி பின்னிய அவள் கூந்தலில்
சரம் சரமாய் மல்லிகை
இவளின் செம்பட்டை கூந்தலில்
விதவிதமாய் காட்டுச் செடிகள்!

அவளின் காசு மாலையும் ஒட்டியானமும்
பார்ப்போரை மயக்கங்கொள்ள வைத்தன
இவள் அணிந்திருக்கும் துப்பாக்கிக் குண்டுகளோ
காண்போரை பீதிக்கொள்ள வைக்கின்றன!

கைவளையல் குலுங்க பட்டாடை பளபளக்க
அன்ன நடையிட்டாள் அவள்
காக்கிச் சட்டையுடன் துப்பாக்கி வெடிவெடிக்க
சீறி வருகிறாள் இவள்!!

அன்று புலியிடம் போரிட்டாள்
அவளாகிய புறநானூற்று மங்கை
இன்று புலியாகிப் போரிடுகிறாள்
என் தமிழீழத் தங்கை!

14 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

நான் தான் ஃபர்ஸ்ட்...:-) கவிதையை அப்புறமா வந்து படிக்கிறேன் :-))

Maddy சொன்னது…

புயலாகி போன அந்த பெண் சீக்கிரம் தென்றலாக தவழ வேண்டும் என்பதே எல்லோரின் எண்ணம், ஒரு விடியலை எதிர் நோக்குவோம் விரைவில்

து. பவனேஸ்வரி சொன்னது…

வணக்கம்,

இனியவள் புனிதா, முதலாவதாக வந்த உங்களை வரவேற்கிறேன்.

'மேடி' அவர்களின் கருத்துக்கு நன்றி. விடியல் நிச்சயம் வரும்.
நம்பிக்கையுடன் எதிர்ப்பார்ப்போம்.

பெயரில்லா சொன்னது…

கவிதை அருமை...அதிலும் தங்களின் பாடுபொருள் மெய் சிலிர்க்க வைக்கிறது...

சீக்கிரமே விடியல் காணவேண்டுமாய் உள்ளம் துடிக்கிறது :-(

ஆயில்யன் சொன்னது…

//அன்று புலியிடம் போரிட்டாள்
அவளாகிய புறநானூற்று மங்கை
இன்று புலியாகிப் போரிடுகிறாள்
என் தமிழீழத் தங்கை!///


அருமை!

வெல்லும் போராட்டம் சொல்லும் பெண் புலிகளின் பெருமைகளை...!

பெயரில்லா சொன்னது…

//ஆயில்யன் said...
//அன்று புலியிடம் போரிட்டாள்
அவளாகிய புறநானூற்று மங்கை
இன்று புலியாகிப் போரிடுகிறாள்
என் தமிழீழத் தங்கை!///


அருமை!

வெல்லும் போராட்டம் சொல்லும் பெண் புலிகளின் பெருமைகளை...!//

நிச்சயமாக அண்ணா ..அதிலேதும் சந்தேகமில்லை...:-)

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

சிறப்பாக இருக்கிறது... வாழ்த்துக்கள்...

புதியவன் சொன்னது…

//அன்று புலியிடம் போரிட்டாள்
அவளாகிய புறநானூற்று மங்கை
இன்று புலியாகிப் போரிடுகிறாள்
என் தமிழீழத் தங்கை!//

அருமையான வார்த்தை பிரயோகம்.வாழ்த்துக்கள்

நான் சொன்னது…

அருமையான எழுத்துக்கள்

இவர்களின் நிலையை அருமையாக பதிவு செய்திருக்கிறார் ஒருவர்
http://aalamaram.blogspot.com/

நன்றி

து. பவனேஸ்வரி சொன்னது…

வணக்கம்,

இனியவள் புனிதா, துடிக்கும் உங்கள் உள்ளத்திற்கு மருந்தாக விரைவில் விடியல் வரும். ஆவலோடு எதிர்ப்பார்ப்போம்.

ஆயில்யன் அவர்களின் கருத்துக்கு நன்றி. போராட்டம் நிச்சயம் வெல்லும்!

விக்னேஸ்வனின் கருத்துக்கு நன்றி.

புதியவனின் வருகையை வரவேற்கிறேன்.

நான் அவர்களின் கருத்துக்கு நன்றி. நீங்கள் அனுப்பிய வலைப்பதிவை நிச்சயம் காண்கின்றேன்.

நன்றி.

RAJMAGAN சொன்னது…

vaartaigal illai vaalta,
veru vaartaigal payanpaduti
vaaltai veenadika virumbavillai,
Innoru Puranaanuru Manggai Ival..
Miga Nanru Selvi Bavaness..

RAJMAGAN சொன்னது…

vaartaigal illai vaalta,
Veru vaartayai payanpaduti
Vaaltai veenadikka virumbavillai,
En Kannere vaalthugalai
ummidam samarpikkiren..
Kavithai Nanru,
karuthum Nanru,..

து. பவனேஸ்வரி சொன்னது…

வணக்கம்,

ராஜ்மகனின் கண்ணீருக்கும் கருத்துக்கும் நன்றி...

Muniappan Pakkangal சொன்னது…

Hats off for tamil eezha thangaigal.