செவ்வாய், 24 மே, 2011

நான் செல்கிறேன்...







பிடிக்கவில்லை என்றாய்

வெறுத்துவிட்டது என்றாய்

பாசம் குறைந்தது என்றாய்

அனைத்தும் பொறுத்தேன்!



என்னைவிட இன்னொருத்தியை

ஆயிரம் மடங்கு பிடிக்கும் என்றாய்

உறவினை யாருக்கும் சொல்லாமல்

இரகசியம் காக்க வேண்டும் என்றாய்

உள்ளுக்குள் புழுங்கினேன்!



கதைக்கும் நேரம் சுருங்கியது

உறவின் நெருக்கம் குறைந்தது

நெஞ்சில் சோகம் குவிந்தது

வேதனை தினமும் மிகுந்தது!



எப்படி புரிய வைப்பேன்?

என் நிலையை எப்படி விளக்கிச் சொல்வேன்

“இன்னொருவன் காதல் என்றான்

‘ஓம்’ என்று சொல்லட்டா?”

உன்னிடமே நான் கேட்டேன்



எதற்காக கேட்டேனென்று

துளிகூட நினைக்காமல்

வாய்க்கு வந்தபடி வைய்துவிட்டு

விலகி நீ சென்றுவிட்டாய்!



அவனையே கட்டிக்கொள்

மகிழ்ச்சியாய் வாழ்ந்துவிடு

ஏமாற்றத்திற்கு நன்றி என்றாய்!



புரியாமல் கதைக்காதீர்

வெறுப்பேற்றவே சொன்னேன் நான்

தவறாக நினைக்க வேண்டாம்

நீயின்றி நானில்லை

எம்மை நீ வெறுக்க வேண்டாம்!



கையளவு இதயத்தில்

உம்மை அன்றி யாருமில்லை

உன் நினைவின்றி தூக்கமில்லை

உன் அன்பின்றி வாழ்க்கை இல்லை

அது ஏன் உனக்குப் புரியவில்லை?



மண்டியிட்டேன்

மன்றாடினேன்

மன்னிப்புக் கேட்டேன்…

தொந்தரவு செய்யாதே

நம்பிக்கை இழந்துவிட்டேன்

நீ எனக்கு வேண்டாம் என்றாய்!



தலை சுழன்றது

இரத்தமும் சதையும் கொண்ட இதயம்

துடியாய் துடித்து வலியால் மடிந்தது

நான் சொன்ன ஒரு வார்த்தை

என்னையே கொல்லும் ஆயுதமானது!



கதறியழுதேன் ஊமையாக

அழுது புரண்டேன் பைத்தியமாக

என் கதறல் உன் காதுகளுக்கு கேட்கவில்லை

என் கண்ணீர் உன் மனதினை கரைக்கவில்லை

உன்னைத் தொந்தரவு செய்ய நான் விரும்பவில்லை!



உறவென்று சொல்லவும்

உரிமையுடன் வாழவும்

உகந்த துணைவன்

நீயென்று எண்ணினேன்!



என் எண்ணங்கள் சிதைந்தன

கனவுகள் கலைந்தன

எதிர்காலம் கேள்விக்குறியானது

என் மணவாழ்க்கை மண்ணில் புதைந்தது!



மறக்க நினைத்து மரத்துப் போகிறேன்

உன்னை நினைக்க மறந்தால்

மரித்துப் போகிறேன்…



வாழ்க்கைத் துணையாய்

நீ வந்து சேர்ந்தாய்-இனி

என் தனிமையின் துணையாய்

யார் வந்துப் போவார்?



என் கவிதையைப் புலம்பல் என்பாய்

புலம்பித்தான் தீர்க்கின்றேன்

கேட்பதற்கு நீ இருந்தால்

நான் எதற்கு எழுதுகின்றேன்?



வேண்டாம் என்று சொன்ன உன்னை

தொந்தரவு செய்ய மாட்டேன்

என் உயிர் இருக்கும் காலம் மட்டும்

உன்னை நான் வெறுக்க மாட்டேன்!



நானாகச் செல்லவில்லை

உனக்காகச் செல்கிறேன்

நீ வெறுத்ததினால் செல்கிறேன்

நீ விரட்டியதால் செல்கிறேன்

உயிரற்ற என் இதயத்தை

உன்னிடம் விட்டுச் செல்கிறேன்!



சென்று கொண்டே இருக்கிறேன்

வெகு தூரம் செல்கிறேன்

தனியாகச் செல்கிறேன்

நடைப்பிணமாய் செல்கிறேன்

நான் செல்கிறேன் –உன்னை

விட்டுச் செல்கிறேன்…





7 கருத்துகள்:

gani சொன்னது…

அருமை
வாழ்த்துக்கள்

து. பவனேஸ்வரி சொன்னது…

நன்றி நண்பரே...

Tamilvanan சொன்னது…

ok .. Bye .. Take care

chandrasekaran சொன்னது…

நெருக்கம் குறைவதை
நெஞ்சம் விரும்பாமல்
வாதாட, வந்தபிரிவை
வரைந்தது அருமை

து. பவனேஸ்வரி சொன்னது…

நன்றி :)

பிரபாஷ்கரன் சொன்னது…

இது கவிதயா அல்லது கதையா அருமைதான் வாழ்த்துக்கள்

gayathri சொன்னது…

un kadhal puriyatha avar manathil nee iurpathai vida vilakuvathey mel thozi