செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

உன்னை அல்ல!


நேசிக்கிறேன்
மிகவும் நேசிக்கிறேன்
உன்னை அல்ல!
நீ பேசும் தமிழை
உனது திறமையை
கவர்ந்திழுக்கும் திறனை
அளவான அபிநயத்தை
அழுத்தமான சொற்களை
தெளிவான சிந்தனைகளை!

விரும்புகிறேன்
நட்பை விரும்புகிறேன்
உன்னோடு அல்ல!
அருமை தமிழ்மகனோடு
தெளிந்த சிந்தனைவாதியோடு
சிறந்த பேச்சாளனோடு
திறமையான தமிழனோடு
கவிதை நெஞ்சத்தோடு
தமிழ்ப் பற்றாளனோடு!

மின்னஞ்சல் காத்திருக்கும்
உனக்காக பார்த்திருக்கும்
கவிநெஞ்சம் துடிதுடிக்கும்
ஆவலோடு எதிர்பார்க்கும்!

வாழ்க்கை

எண்ணங்கள்
நிலையில் இல்லை
எதுவுமே புரியவில்லை
குழப்பங்கள் அடங்கவில்லை
சந்தேகம் தீரவில்லை
வாழ்க்கை பாராமாகிவிட்டது
இடைவிடாது சுமந்து
உயிரும் நொந்துவிட்டது

உயிரே!

தூக்கம் இல்லையென்றால்
கனவுகள் வாராது- ஒருவரை
ஒருவர் விரும்பவில்லை என்றால்
இதயங்கள் சேராது- நீ
எனக்கில்லை என்றால்
என்னுயிர் வாழாது!

காதல்

மனம் என்பது
வாடகை வீடல்ல
வந்தோர் போவோர்
அனைவரும் தங்குவதற்கு!

துன்பம்

ரோஜாக்கள்
கூட்டம் கூட்டமாக
இருந்தாலும்,
எனக்கு மட்டும்
அனுதினமும்
முள்ளின் தரிசனமே!

வியாழன், 12 ஆகஸ்ட், 2010

மன்னிக்க மாட்டாயோ?


அன்பிற்கு உரியவனே
அடைக்கலம் தருவாயோ?
அழுகின்ற கண்களைத்
துடைத்திட வருவாயோ?

ஏனடா தண்டிக்கின்றாய்
பழையதை மறவாயோ?
உன்னின் பாதியானேன்
அதை நீ மறுப்பாயோ?

உன்னையே நினைத்திருக்கும்
என்னை நீ அறிவாயோ?
தவறேதும் செய்திருந்தால்
மன்னிக்க மாட்டாயோ?