செவ்வாய், 19 மே, 2009

யாரடா இறந்தது?


சிங்கம் மடிந்துவிட்டதாம்
ஓநாய்கள் ஊலையிட்டு அறிவிக்கின்றன!
சிங்கத்தை நெருங்கமுடியாமல்-அதன்
பாதுகாப்பில் இருக்கும் உயிரினங்களை
அடித்துத் தின்ற ஓநாய்கள்;
பிணம் தின்னும் வெறிநாய்கள்;
மலம் தின்னும் பன்றிகள்;
தமிழனை ஏய்க்கப் பார்க்கின்றன!

யாரடா மடிந்தது?
தன்னுயிரை துச்சமெனக் கருதி
தமிழ் மானத்தைக் காக்க வந்தனா?
தமிழர்களுக்கு பாதுகாப்பு அளித்தவனா?
திமிழீழம் கேட்டு போராடுபவனா?
எதிரிக்கும் இரங்குபவனா?
யாரடா இறந்தது?

இராவணன் பிறந்த மண்ணில்
தாய்மொழி பேசக்கூடாதா?
தனிநாடு கேட்கக்கூடாதா?

சுட்டுவிட்டாயா?
என் அண்ணனை,
தமிழ் மன்னனை சுட்டுவிட்டாயா?
வதந்தியைப் பரப்பும் வெட்கம்கெட்டவர்களே,
நிஜம் வெகும் தூரம் இல்லை
உந்தன் பின்னங்கால்கள் முதுகில் மோத
தலைதெறிக்க ஓடப்போகிறீர்கள்!

எனது தமிழ் சகோதரிகளின் கால்களில்
உயிர்பிச்சைக் கேட்டு கதறப்போகின்றீர்
எமது இன இளைஞர்களைக் கண்டு
அலறியடித்து பறக்கப்போகின்றீர்
உலகெல்லாம் தமிழ்மொழி ஒலிக்கக் கேட்டு
மண்டை வெடித்துச் சாகப்போகின்றீர்!

வதந்தியா பரப்புகின்றாய்?
கோழை இராணுவமே கேள்!
உன் ஆணவம் விரைவில் அடங்கும்
எமது தலைவன் இறந்தாலும்
அவன் வளர்த்துவிட்ட இளம் தலைவர்கள்
எமது தமிழினத்தில் அதிகமடா!
பொறுமைக்கும் எல்லை உண்டு
உன் வெறியாட்டத்திற்கு முடிவுண்டு!

வதந்தியை வாந்தியெடுக்கும் ஓநாய்கள்!இனவெறி பிடித்த சிங்கள இராணுவ ஓநாய்கள் தலைவர் இறந்துவிட்டார் என்று வதந்திகளைப் பரப்பிவருகின்றனர். எமது தலைவன் துணிவைக் கண்டு வாந்திபேதியில் நடுங்கியவர்கள் வேறு வழியின்றி வதந்தியைப் பரப்ப முனைந்துவிட்டனர்! தமிழ் மக்களே, வெறிநாய்கள் பரப்பும் வதந்திகளை நம்பாதீர்.

பல்லாயிர மக்களின் கண்ணீரைத் துடைக்க வந்த நம் தலைவன், கேவலம் நீரை நாக்கால் நக்கிக் குடிக்கும் நாய்களால் இறக்க மாட்டான். பொய்யான தகவலை வெளியிட்டு கோடான கோடி தமிழ் மக்களை சோகத்தில் திளைக்க வைத்துவிட்டது இலங்கை இராணுவம். இதனுடன் சேர்ந்து வெட்கம்கெட்ட கூலிப்படைகளும் மாரடிக்கின்றன.

எம்மின பெண்கள் கதறக்கதற கற்பழிக்கப்பட்டார்கள்; எம்மின ஆண்கள் ஓரின உறவுக்கு வற்புறுத்தப்பட்டார்கள்; சிறுநீரும் மலமும் உணவாகக் கொடுக்கப்பட்டன; உடல் அங்கங்கள் அறுக்கப்பட்டன; சிறுகுழந்தையும் குண்டு வீச்சுக்குப் பழியானது; இறந்த பெண் புலிகளின் உடலையும் விட்டு வைக்காமல் நிர்வாணப்படுத்தி புணர்ந்தன இலங்கை இராணுவ வெறிநாய்கள்! இத்தனையும் தாங்கிக்கொண்டு போராடிக்கொண்டிருக்கிறார்கள் எனதருமை தமிழ் விடுதலைப் புலிகள்!

வதந்தி மேல் வதந்தி பரப்பி எமது தமிழ் மக்களை இன்னும் கோபத்திற்கு உள்ளாக்குகின்றன ஓநாய்கள். புலிகள் நியாயம், போர் தர்மம், மனிதாபிமானத்தோடு போராடிக்கொண்டிருக்கின்றனர். அப்பாடி மக்கள் பலியாவதை புலிகள் விரும்பவில்லை. அதனாலேயே முடிந்த வரையில் அப்பாவி மக்களை பலியாக்குவதைத் தவிர்த்து இராணுவத்தோடு மட்டும் மோதி வருகின்றனர். எச்சில் எலிகளைப் போல் அப்பாவி மக்களைக் கொன்று குவித்து ‘வெற்றி’ என்று மார்தட்டிக் கொள்ளவில்லை!

புலிகள் நினைத்தால், இலங்கை பூமியை நொடிக்குள் மயான பூமியாக மாற்ற முடியும். அது அவர்களுடைய நோக்கம் அன்று! ‘தமிழ் ஈழம் உருவாக வேண்டும்! தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டும்!’ அதுவே புலிகளின் எண்ணம்! கொலைவெறியும் இனவெறியும் பிடித்தவ சிங்கள இராணுவம் எதற்கு வெறியாட்டம் ஆடிக்கொண்டிருக்கின்றது என்றுதான் விளங்கவில்லை!

தமிழ் சகோதரர்களே, உறுதியை இழக்காதீர். நம்பிக்கையைக் குறைக்காதீர்! தலைவன் இன்னும் சாகவில்லை. அவன் இறந்தாலும் போராட்டம் முடியப் போவதில்லை. தமிழ் ஈழம் உருவாகும் வரை போராட்டம் தொடரும்! தமிழ் ஈழம் விரைவில் உருவாகும்!

தமிழோடு உயர்வோம்!

புதன், 13 மே, 2009

எங்கே செல்லும்…? (21)


கையோடு கவிதாவைக் கூட்டிக்கொண்டு தன் வீடு நோக்கி நடந்தாள் கமலம். கவிதா அமைதியாகவே இருந்தாள். தேவியும் என்ன பேசுவதென்று தெரியாமல் அமைதியாக இருந்தாள். கமலம் மட்டும் கவிதாவிற்கு ஆறுதல் வார்த்தைகள் கூறிக்கொண்டே உணவு பரிமாறினாள்.

கவிதாவால் சாப்பிடக் கூட முடியவில்லை. துக்கம் தொண்டையை அடைத்தது. இரண்டு வாய் எடுத்து வைத்துவிட்டு சாப்பிட முடியவில்லை என்று எழுந்துவிட்டாள். சிறிது நேரம் தேவியின் வீட்டிலேயே அமைதியாக அமர்ந்திருந்தாள். பின்னர் அவர்கள் இருவரிடமும் விடைப்பெற்றுக் கொண்டு பாட்டி வீடு நோக்கி நடந்தாள்.

நீண்ட நேரம் தனது அறையில் அமைதியாக யோசித்தாள். அவளது கண்களிலிருந்து மட்டும் நீர் வற்றாமல் ஊற்றிக் கொண்டிருந்தது. எதை எதையோ யோசித்தாள். அவளது எதிர்க்காலத்தை நினைக்கவே அவளுக்குப் பயமாக இருந்தது.

ஒரு முடிவுக்கு வந்தவள் போல் எழுந்து முகம் கழுவி உடை மாற்றினாள். வரவேற்பறையில் அமர்ந்திருந்த பாட்டியிடம் சென்று “நான் வெளியே போயிட்டு வர்றேன்,” என்றுக் கூறி வெளியே சென்றாள். பாட்டி எதுவும் கூறவில்லை.

நீண்ட நேரம் கால் போன போக்கிலே நடந்தாள். நடந்து நடந்து பூங்காவிற்கு வந்துச் சேர்ந்தாள். அவள் இதயம் கனத்தது. தனிமையான இடத்தில் அமர்ந்து தான் கடந்து வந்த பாதையினை அசைப்போட்டாள். பிறந்தது, வளர்ந்தது, அனுபவித்தது, ஏங்கியது, அவமானப்பட்டது, துன்பப்பட்டது என அனைத்தையும் திரும்பத் திரும்ப நினைத்துப் பார்த்தாள்.

எழுந்துக் கடைத்தெருவுக்குச் சென்றாள். அவள் கண்களிலிருந்து நீர் மட்டும் நிற்காமல் வழிந்துக்கொண்டிருந்தது. மிகவும் சிரமம்பட்டு அதனைக் கட்டுப்படுத்தினாள். ஒரு கடைக்குள் நுழைந்துக் குளிர்பாணம் வாங்கினாள். மற்றொரு கடைக்குள் நுழைந்து வேறு எதையோ வாங்கினாள். பின்னர் மீண்டும் ஆழ்ந்த யோசனையுடன் வீடு நொக்கி நடந்தாள்.

நடைப்பிணம் என்று சொல்வார்கள் அல்லவா? அது போலத்தான் நடந்துச் சென்றாள் கவிதா. நேரே அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்திக்கொண்டாள். அழுது அழுது அவளது கண்கள் வீங்கிவிட்டன. அப்பொழுது கூட கண்ணீர் நிற்காமல் வழிந்துக் கொண்டிருந்தது.

மாலை கடந்து இரவானது. பாட்டி கதவைத் தட்டினார்; திறந்தாள். சாப்பிடச் சொன்னார்; வேண்டாம் என்றுக் கூறி குப்புறப் படுத்தாள். “எல்லாரும் சேர்ந்து என் உயிர எடுங்க!” என்று கடுப்போடு முனகிவிட்டு பாட்டியும் சென்றுவிட்டார்.
மறுநாள் காலைப் பொழுது பறந்துச் சென்றது. மதியமும் ஆகிவிட்டது. கவிதா அறையைவிட்டு வெளியே வரவில்லை. மங்களம் வீட்டிற்கு வந்தாள். பாட்டி கவிதாவைப் பற்றிக் கூறி முனகினாள்.

“நேத்துலேர்ந்து ஒழுங்கா சாப்பிடவே இல்லை. இங்கேயிருந்து போய் கமலம் வீட்ல சாப்பிட்டு வருது. மத்தவங்கப் பார்த்தா என்ன நினைப்பாங்க? எனக்கும் என்ன சொல்றதுன்னே தெரியல,” என்று குறைப்பட்டுக் கொண்டார் பாட்டி.

“உங்களுக்கு நல்லா வேணும். தெருவுல போற ஓணான வேட்டிக்குள்ள விட்டுட்டு குத்துதே குடையுதேன்னு சொன்னா நாங்க என்ன பண்றது? சின்னதுலேயே எங்கேயாவது போய் விட்டிருக்கணும். மகன் பிள்ளை’னு உயிரை விட்டீங்க தானே, அதான் இப்ப அனுபவிக்கிறீங்க,” என்று எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றினாள் மங்களம்.

பாட்டி மணியைப் பார்த்தார். இரண்டாகிவிட்டது. பொறுமையிழந்தார்.
“ஏய் கவிதா! கவி்தா…!! கதவைத் திற!” என்று கத்தினார். கதவுத் திறந்தப்பாடில்லை. இதுதான் சாக்கென்று மங்களம் வாய்க்கு வந்தபடி கவிதாவைத் திட்ட ஆரம்பித்தாள்.

“எங்கம்மா இந்தக் கத்துக் கத்துறாங்க, செவிட்டுக் கழுதை மாதிரி படுத்துக்கிடக்கா. ஏய், கதவைத் திறடி!” என்று கதவைப் படபடவென்று தட்டினாள் மங்களம். அப்பொழுதும் கதவுத் திறந்தபாடில்லை. “இது சரிப்பட்டு வராது. அம்மா, இன்னொரு சாவி எங்க? போய் எடுத்துட்டு வாங்க. இத இப்படியே விட்டா சரியா வராது. இன்னைக்கு ஒரு முடிவுக் கட்டுறேன்!” என்று கொந்தளித்தாள் மங்களம்.

பாட்டி சாவியை எடுத்து வந்தார். கதவைத் திறந்தார்கள். மங்களம் பாய்ந்துச் சென்று குப்புறப் படுத்திருந்த கவிதாவின் பின் பக்கத்தில் ஓங்கி ஒரு உதைவிட்டாள். கவிதா அமைதியாகவே படுத்திருந்தாள். மங்களத்தின் வவய் கவிதாவை அர்ச்சித்துக்கொண்டிருந்தது. மீண்டும் ஓர் உதைவிட்டாள். கவிதா அப்பொழுதும் அசையவில்லை.

“மங்களம், இரு!” என்றுக்கூறி பாட்டி கவிதாவின் அருகில் வந்து அவளைத் தொட்டார். அவள் உடல் சில்லென்றிருந்தது. திருப்பிப் போட்டார். வாயில் நுரையுடன் பிணமாகிக் கிடந்தாள் கவிதா! அவள் மூச்சு நின்றுப் போய் பல மணி நேரமாகிவிட்டது.

“பாவி மக இப்படிப் பண்ணிட்டியே!” என்று பாட்டி போட்ட கூச்சல் கமலத்தின் வீடு வரையில் கேட்டது….

*** முற்றும் ***

வெள்ளி, 8 மே, 2009

இதுதான் வாழ்க்கையா?


பெண்ணே…
பள்ளிச் சென்று பயின்றாய்
பின்பு பல்கலைக்கழகம் சென்றாய்
படிப்பு முடிந்து வேலை செய்தாய்!

காதல் கொண்டாய்
கல்யாணம் செய்தாய்
கரண்டி பிடித்தாய் கையில்!

குழந்தை பிறந்தது
கடமை நிறைந்தது
ஓடுகிறாய் ஓடுகிறாய்
வீட்டிலிருந்து வேலைக்கும்
வேலையிலிருந்து வீட்டிற்கும்!

இதுதான் உனது வாழ்க்கையா?
என்னக் கண்டாய் இதில் நீ?
பிறப்பிற்கும் இறப்பிற்கும் நடுவில்
நீ சாதித்ததெல்லாம் இதுதானா?

மீண்டும் தொடர்கிறது...

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் உங்களையெல்லாம் சந்திப்பதில் மகிழ்ச்சி. சூழ்நிலை காரணமாக கடந்த ஒரு மாதகாலமாக வலைப்பதிவில் எந்தவொரு பதிவையும் வெளியிட இயலவில்லை. அதற்காக வருந்துகின்றேன். வாசகர்கள் எம்மை மன்னிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன். நாளை முதல் 'எங்கே செல்லும்...' தொடர்கதை தொடரும். வலைப்பதிவு வழக்கம் போல பொழிவு பெறும் என்பதனை இவ்விடம் தெரிவித்துக்கொள்கின்றேன்.
தமிழோடு உயர்வோம்!