புதன், 21 ஜனவரி, 2009

இயந்திர மனிதன்!


எலும்பும் சதையும் கொண்ட மனிதன்
பாறையும் இரும்பும் போல
உணர்ச்சியற்றுக் கிடக்கிறான்…

இதயத்தில் ஈரம் இல்லை
மனிதாபிமானம் இல்லை
அன்பிற்கு நேரம் இல்லை
இவன் வசம் எதுவும் இல்லை!

இவன்
இயந்திர மனிதன்
எதையோ தேடுகிறான்
படிப்பு என்கிறான், வேலை என்கிறான்
பணம் என்கிறான், பதவி என்கிறான்
தெரியாத பதிலை தெளிவாகச் சொல்கிறான்!

வேண்டியது என்னவென்று
இவனுக்கே தெரியவில்லை
வாழ்க்கையின் தத்துவத்தைப்
புரிந்துக்கொள்ள முடியவில்லை!

பல நேரம் சிரிக்கின்றான்
திடீரென்று அழுகின்றான்
ஆரவாரம் அடங்கியப் பின்
தனிமையை நாடுகின்றான்!

அன்பிற்கு விலை கேட்கிறான்
ஆசைகளை அடகு வைக்கிறான்
இதுதான் வேண்டுமென்று
கிடைத்ததெல்லாம் தொலைக்கிறான்!

இவனது எதிர்ப்பார்ப்புக்கு அளவே இல்லை
பிறரைப் புரிந்துக்கொள்ள முயலுவதில்லை
மற்றவர் நலனில் அக்கறை இல்லை
காதல் செத்தால் கவலை இல்லை!

இவன்,
இயந்திர மனிதன்
இதயத்தை இரும்பாக்கியவன்
இறைவனை நம்பாதவன்
இயற்கையை இரசிக்காதவன்!

பணமும் மதுபாணமும்
இவனுக்கு பழரசங்கள்
பருப்புச்சாம்பாரும் இரசமும்
பஞ்சப் பறையனின் உணவு!

இவனுக்குத் தெரிந்ததெல்லாம்
பாக்கெட்டில் விற்கின்ற கோழியும்
பாதி வெந்த மீனும்தான்!

உடலை மறைத்த உடை
பட்டிக்காடு என்பான்
மார்பகங்கள் பாதி தெரிய
இடுப்புச் சிலுவார் அவிழ்ந்துவிழ
அங்கங்கே ஒட்டுப்போட்ட ஆடை
இவனுக்கு நாகரிகம்!

அன்பிற்கு விளக்கம் கேட்கிறான்
தாய்க்கு கூலி கொடுக்கிறான்
காதலியைக் கலட்டி விடுகிறான்
காரணம் கூற மறுக்கிறான்!

இவன்,
இயந்திர மனிதன்
இரத்தத்தை இரசாயனமாக்கியவன்
இரக்கத்தைக் கொன்றவன்
இல்லறத்தை உடைத்தவன்!

இவனுக்கு நன்றியில்லை
வாழ்க்கை நெறி ஒன்னுமில்லை
காதல் என்பது அவசியமில்லை
காசு பணமின்றி வாழ்க்கையில்லை!

இவன்,
இயந்திர மனிதன்
பம்பரமாய் சுழல்பவன்
சுழட்டிய கயிரை மறந்தவன்
ஒற்றைக் காலில் நின்றே
வாழ்க்கையை ஓட்டியவன்
ஆட்டம் அடங்கப்போவதை
அறியாதவன்!

இவனுக்கு வேண்டியது
பெட்டி நிறைய பணமும்
இடுப்பைச் சுற்றிப் பெண்களும்
எங்கும் நிறைந்த ஆடம்பரமும்
இறுதியில் ஆறடி மண்ணும்!

13 கருத்துகள்:

புதியவன் சொன்னது…

இயந்திர மயமான உலகில் மனிதனும்
இயந்திரமாகிக் கொண்டு வருகிறான்
என்பதை அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்...

கவிதை நல்லா இருக்கு...

A N A N T H E N சொன்னது…

ஓஹோ... ரஜினியோட இயந்திரா படத்துக்கான விமர்சனமா? முழுசா படிச்சிட்டு அப்புறமா காமெண்ட்ஸ் தரேன்

து. பவனேஸ்வரி சொன்னது…

வணக்கம்,

புதியவன் கூறியது...
//இயந்திர மயமான உலகில் மனிதனும்
இயந்திரமாகிக் கொண்டு வருகிறான்
என்பதை அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்...

கவிதை நல்லா இருக்கு...//

கருத்துக்கு நன்றிங்க.


A N A N T H E N கூறியது...
//ஓஹோ... ரஜினியோட இயந்திரா படத்துக்கான விமர்சனமா? முழுசா படிச்சிட்டு அப்புறமா காமெண்ட்ஸ் தரேன்//

என்னங்க அனந்தன், படிக்காமலே திரை விமர்சனம்'னு முடிவுப் பண்ணிட்டீங்களா? என்ன கொடுமை சார் இது?

அப்துல்மாலிக் சொன்னது…

இயந்திரதனமான வாழ்க்கையில் மனிதனின் வாழ்வு பற்றி அழகாக சொல்லிருக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள்

அப்துல்மாலிக் சொன்னது…

//இவனுக்கு நன்றியில்லை
வாழ்க்கை நெறி ஒன்னுமில்லை
காதல் என்பது அவசியமில்லை
காசு பணமின்றி வாழ்க்கையில்லை!//

உண்மையை நல்லாவே சொன்னீங்க

து. பவனேஸ்வரி சொன்னது…

அபுஅஃப்ஸர் கூறியது...
//இவனுக்கு நன்றியில்லை
வாழ்க்கை நெறி ஒன்னுமில்லை
காதல் என்பது அவசியமில்லை
காசு பணமின்றி வாழ்க்கையில்லை!//

உண்மையை நல்லாவே சொன்னீங்க//

உங்கள் வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே.

logu.. சொன்னது…

\\இவன்,
இயந்திர மனிதன்
இதயத்தை இரும்பாக்கியவன்
இறைவனை நம்பாதவன்
இயற்கையை இரசிக்காதவன்!\\

Unmaithanga...

but ean ivlo kobam..?
etharkkaga?

ungal varthaigal anaithume migavum
kobamagave irukkinrana.. why?

நான் சொன்னது…

மனித வாழ்க்கையின் இன்றைய நிலையை அழகாக படம்பிடித்து காட்டியள்ளீர்கள் நன்றி

Sathis Kumar சொன்னது…

கவிதை மிக அருமை.. ஆழமான கருத்துகள்..

RAJMAGAN சொன்னது…

ovuru kavithayum,kathayum naal oru vannam merugeri varugirathu..
vaalthugal..

து. பவனேஸ்வரி சொன்னது…

வணக்கம்,

logu..
//Unmaithanga...

but ean ivlo kobam..?
etharkkaga?

ungal varthaigal anaithume migavum
kobamagave irukkinrana.. why?//

கோபமெல்லாம் ஒன்னுமில்லைங்க. மனதில் தோன்றுவதை எழுதுகின்றேன். அவ்வளவுதான். தங்கள் கருத்துக்கு நன்றி.

நான் கூறியது...
//மனித வாழ்க்கையின் இன்றைய நிலையை அழகாக படம்பிடித்து காட்டியள்ளீர்கள் நன்றி//

கருத்துக்கு நன்றி... :)

சதீசு குமார் கூறியது...
//கவிதை மிக அருமை.. ஆழமான கருத்துகள்..//

கருத்துக்கு நன்றி நண்பரே.

RAJMAGAN கூறியது...
//ovuru kavithayum,kathayum naal oru vannam merugeri varugirathu..
vaalthugal..//

உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே.

U.P.Tharsan சொன்னது…

//இவனுக்குத் தெரிந்ததெல்லாம்
பாக்கெட்டில் விற்கின்ற கோழியும்
பாதி வெந்த மீனும்தான்!//

எப்போதும் ஒரு படைப்பு அதை வாசிக்கும் ரசிகனது வாழ்கை முறையோடு ஒட்டிப்போகும் போதுதான். அது அவனை கவரும். அதன் அடிப்படையில் இந்த வரிகள் என்னை கவர்கின்றன.... :-))

//காதலியைக் கலட்டி விடுகிறான்
காரணம் கூற மறுக்கிறான்//

யாருக்கோ நேரடி தாக்குதல் நடந்திருக்கிறது போல.... :-))

து. பவனேஸ்வரி சொன்னது…

வணக்கம் U.P.Tharsan ,
வாருங்கள். உங்கள் கருத்துக்கு நன்றி. ஆதரவைத் தொடருங்கள்.