வியாழன், 23 ஆகஸ்ட், 2012

நானும் ரோபோ!எம் உணர்ச்சிகள் சாகடிக்கப்படுகின்றன
எனது நம்பிக்கைகள் நொறுக்கப்படுகின்றன
நம்பி நம்பி ஏமாந்து போவது வாடிக்கை
இனி என் வாழ்க்கை அனைவர்க்கும் வேடிக்கை!

இரவிருந்தால் பகல் வருமாம்
வெயில் சென்று மழை வருமாம்
இங்கு இரவும் இல்லை பகலும் இல்லை
வெயிலும் இல்லை மழையும் இல்லை…

மனிதனாக வாழ முயல்கிறேன்
இயந்திரமாய் இயங்க வைக்கிறது சூழல்
இனி ஆசை இல்லை உணர்ச்சி இல்லை
நானும் ஆகிறேன் ‘ரோபோ’…
கனவே நீ போ போ!