வார்த்தைகளால்
அணுஅணுவாய் கொல்வதை விட
ஒரேயடியாகக் கொன்றிருக்கலாம்
வலிகளாவது குறைந்திருக்கும்!
காதலிக்கிறேன் என்று கூறி
நீ என்னை வெறுத்துக்கொண்டிருக்கிறாய்
பாசமாய் இருப்பதாய் நினைத்து
நெருப்பைக் கொட்டிக்கொண்டிருக்கிறாய்!
அறிந்துதான் செய்கிறாயா
அல்ல அறியாமல் செய்கிறாயா?
ஒன்றும் விளங்கவில்லை
மன வலிகள் குறையவில்லை!
காதல் என்பது தவறா
பாசம் வைத்தது பிழையா
உரிமைக் கொண்டது குற்றமா
பூமியில் பிறந்ததே பாவமா?
கண்ணீரைக் கொட்டித்தான்
காதலை வளர்க்க வேண்டுமா?
வலிகளைத் தாங்கித்தான்
ஒன்று சேர வேண்டுமா?
ஒவ்வொரு வார்த்தையும்
ஒரு துளி விஷம்
கொஞ்சம் கொஞ்சமாய்
உயிரைக் குடிக்கிறது!
நொந்துப் போன இதயத்தை
மேலும் மேலும் வதைக்காதே
உடைந்துப் போன மனதை
துகள்களாக்காதே!
அறியாமல் செய்த பிழைக்கு
ஆயிரம் தண்டனையா?
தெரியாமல் செய்த தவற்றுக்கு
தூக்குத் தண்டனையா?
நினைக்காத நாளில்லை
எண்ணாத பொழுதில்லை
நன்றாக ‘நடிக்கிறேன்’ என்று
சுலபமாய் கூறிவிட்டாய்!
கண்ட கனவுகள்
கலைந்து விட்டதா?
எல்லையில்லா கற்பனைகள்
மடிந்து விட்டதா?
உறுதியான காதலென்றேன்
உடைந்து விட்டதா?
அழிவில்லாத காதலென்றேன்
இறந்து விட்டதா?
கவிதையாகப் பேசினோமே
கசந்து விட்டதா?
சக்கரையாய் இனித்த காதல்
சலித்து விட்டதா?
ஏன் சொன்னாய் உயிரே
என்னை நம்பவில்லையா?
நான் உன்னை விரும்புவது
உண்மையில்லையா?
2 கருத்துகள்:
//கவிதையாகப் பேசினோமே
கசந்து விட்டதா?
சக்கரையாய் இனித்த காதல்
சலித்து விட்டதா?//
கவிதை நன்றாக உள்ளது... முகப்புத்தகத்திலும் பகிர்ந்து கொள்ளுங்கள்
முகப்புத்தகத்தில் இக்கவிதை இருக்கிறது...எமது ‘நோட்ஸ்’-லில் பார்க்கவும். நன்றி நண்பரே.
கருத்துரையிடுக