திங்கள், 30 மே, 2011

ஏனடா…???சொல்லிய ஒவ்வொரு சொல்லும்

ஈட்டி முனைகளாக மாறி

இதயத்தைக் குத்திக் கிழித்து

இரணமாக்கிப் போனதே!என்னடா தவறு செய்தேன்

எப்போது துரோகம் செய்தேன்

உண்மையாய் இருக்கும் போதே

சந்தேகம் கொள்கின்றாயே?உன்னுடன் வாழவும் முடியாமல்

விட்டு விலகவும் முடியாமல்

இருதலைக்கொள்ளி எறும்பாய்

மதில் மேல் பூனையாய்

அலைபாயும் மனது!தினம் தினம் சாகின்றேன்

உன் வார்த்தை அம்புகள்

என் உயிரின் ஒவ்வொரு அணுவையும்

வலிக்கொள்ளச் செய்யும்

இவ்வேதனையை எப்போது அறிவாய்?நிம்மதியை இழந்துவிட்டேன்

பைத்தியம்தான் பிடிக்கவில்லை

எப்பொழுதோ இறந்துவிட்டேன்

உயிர் மட்டும் பிரியவில்லை!

3 கருத்துகள்:

முரளிநாராயணன் சொன்னது…

கவிதை நன்றாக இருக்கிறது

chandrasekaran சொன்னது…

காதலால் பிதற்றலாம்
கனவுகள் காயங்கள்
கண்டபடி நேரலாம்
காதலில் அதுசுகமே.

து. பவனேஸ்வரி சொன்னது…

முரளி நாராயண்: நன்றி நண்பரே..

சந்திரசேகரன்: சுகமே சுமையானால்??