வெள்ளி, 22 ஏப்ரல், 2011

எமது தாகம்!


எமது தாகம்


தமிழீழத் தாயகம் என்றேன்

நன்றாய் பேசுகிறாய் என்றார்கள்

புலிச்சின்னத்தை முதுகில் ஏந்தினேன்

நன்றாய் நடிக்கிறாய் என்றார்கள்!ஈழமக்கள் நிலைக் கருதி

கண்ணீர் விட்டுக் கதறிழுதேன்

ஆஹா, முதலைக் கண்ணீர்

உனக்கும் வருகிறதே என்றார்கள்!உதவாக்கரைத் தலைவர்களை

ஏசிப் பேசினேன்…

சாணக்கிய அரசியல்

உனக்கென்ன தெரியும் என்றார்கள்!தமிழர்களே ஒன்றுப்படுங்கள்

தாயகத்தை மீட்டெடுப்போம் என்றேன்

நான் மலேசிய இந்தியன் என்றான்

தமிழ்ப் பேசும் சகோதரன்!

ஏன் தேவையில்லாமல் பிரச்சனை?

சமரசம் பேசவேண்டியது தானே என்றான்

சரித்திரம் தெரியாத இளைஞன்!இதற்குள் நான் வரவில்லை

ஒதுங்கிப் போனான் அரசியல்வாதி

பாவம் இலங்கையர் என்று பரிதாபித்தான்

பாரம்பரியம் தெரியாத ஒருவன்!தமிழர்கள் இனவெறியாளர்கள் என்றான்

இலங்கை வாழ் முஸ்லிம் தமிழன்

நீயும் தமிழன் தானே என்றேன்

இல்லை, நான் முஸ்லிம் என்றான்

தன் நிலைமை அறியாதவன்!உனக்கேன் இவ்வளவு மொழி வெறி

கேட்டான் இன்னொரு தமிழன்

ஏன் இனவெறிப் பிடித்து அலைகிறாய்?

எம்மினத்தில் பிறந்தவன் சலிப்போடு கேட்டான்!நீ இலங்கை அரசின் கைக்கூலி

தமிழர்களைக் குழப்புகிறாய் என்றான்

தமிழன் என்று அடையாளம் காட்டியவன்!

உனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை

ஒதுங்கி நின்று வேலையைப் பார்

மிரட்டினான் அடையாளம் தெரியாதவன்!தமிழன் ஓர் இனம் தானே

இத்தனைப் பிரிவினை அதற்குள் ஏன்?

எத்தனை மனிதரடா- அவர்

எத்தனை விதங்களடா?

புரியாமல் தளர்ச்சியுற்றேன்!கவலைக் கொண்டு கரைய வேண்டாம்

கண்ணீர் விட்டு அழுக வேண்டாம்

உணர்ச்சியுள்ள தமிழர் நாம்

ஒன்றுப்பட்டு போராடுவோம் என்றான்

இன மொழி உணர்வுள்ள தமிழன்!போற்றுவார் போற்றட்டும்

தூற்றுவார் தூற்றட்டும்

அதை எண்ணி வருந்த வேண்டாம்

நான் உண்டு உன்னோடு என்றான்

உறுதியுடையத் தமிழன்!வாழ்வது ஒருமுறை வாழ்த்தட்டும் தலைமுறை

வருந்தாதே தோழி, சரித்திரம் படைப்போம்

தரணியில் செழிப்போம் என்றான்

தன்மானத் தமிழன்!எட்டப்பன் குவிந்துவிட்டான்-அவனை

எட்டி உதைத்துவிடு

தமிழன் என்று சொல்லி நம்

ஒற்றுமைக் கலைக்க வந்த-அவன்

குரவளை நெறித்துவிடு என்றான்

வீரத்தமிழன்!நெகிழ்ந்தேன், மகிழ்ந்தேன்

எம்மினத்தின் விடியலை உம்மில் கண்டேன்

தன்மானப் புலிகள் பதுங்கி இருப்பது

பயத்தால் அல்ல பாய்வதற்கென்று

விரைவில் புரிய வைப்போம்-நம்

நாட்டை மீட்டெடுப்போம்!தமிழன் என்ற குடையின்கீழ்

அனைவரும் ஒன்றிணைவோம்

விடியும் வரை போராடுவோம்!

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

தரணிக்கு உணர்த்திடுவோம்

தமிழர் உரிமைக் காத்திடுவோம்!

5 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

very inspiring...

து. பவனேஸ்வரி சொன்னது…

நன்றி நண்பரே...

இரா. சிவா சொன்னது…

//தமிழன் என்ற குடையின்கீழ்
அனைவரும் ஒன்றிணைவோம்
விடியும் வரை போராடுவோம்!//

அனைத்துத் தமிழரையும் ஒன்றிணைக்க முடியுமா?!

து. பவனேஸ்வரி சொன்னது…

இயன்றவரை முயன்றுப் பார்ப்போம் நண்பரே...

GanI சொன்னது…

நிச்சயம் நமக்கான விடியல் வரும், வெல்வது உறுதி