புதன், 17 மார்ச், 2010

சோகம்!


இரவு வேளையிலே
வானத்தை நோக்கினேன்
ஒரே இருள் சூழ்ந்த கருமை!
வானத்தில் மட்டுமல்ல
என் மனதிலும் தான்!

அங்கொன்றும் இங்கொன்றுமாக
சிதறிக் கிடக்கும் நட்சத்திரங்கள்
அதைவிட பன்மடங்கு சோகங்கள்
என் நெஞ்சினிலே!

பொழுது புலர்ந்தால்
விடியல் வந்துவிடும்
வானத்தில் மட்டும்தான்
என் மனதில் இல்லை!

மனித வாழ்க்கையில்
துன்பங்கள் இயற்கை
சோதனைகள் சகஜம்
அதுவே வாழ்க்கையானால்?

3 கருத்துகள்:

சங்கே முழங்கு சொன்னது…

வாழவேண்டியதுதான்...

Romeoboy சொன்னது…

அதை வீழ்த்த என்ன வழி என்று யோசிக்கவேண்டும் !!!

து. பவனேஸ்வரி சொன்னது…

சங்கே முழங்கு: பிறந்துவிட்டோம், வாழ்ந்துதானே ஆக வேண்டும்...

ரோமியோ: யோசிப்போம்...இறக்கும் வரை யோசிப்போம்...