திங்கள், 28 டிசம்பர், 2009

துணை


காந்தி போல் அகிம்சாவாதி வேண்டாம்
கர்ணன் போல் கொடைவள்ளல் வேண்டாம்
கம்பர் போல் கவிச்சக்ரவர்த்தி வேண்டாம்
இராமன் போல் உத்தமச்சீலன் வேண்டாம்!

வைரமுத்து போல் கவிஞன் வேண்டாம்
தேவா போல் இசைமன்னன் வேண்டாம்
பிரபுதேவா போல் ஆட்டக்காரன் வேண்டாம்
பிரசாந்த் போல் காதல் மன்னன் வேண்டாம்!

சேது போல் பைத்தியம் வேண்டாம்
ஜெமினி போல் ரவுடி வேண்டாம்
நந்தா போல் தாய்ப்பாசம் வேண்டாம்
நன்றாக நடிக்கவும் வேண்டாம்!

குடிப்பழக்கம் தினமும் வேண்டாம்
புகைப்பழக்கம் என்றும் வேண்டாம்
பெண் பழக்கம் அறவே வேண்டாம்
கொச்சை வார்த்தைப் பேச வேண்டாம்!

பொய்கள் பல சொல்ல வேண்டாம்
எதையும் என்னிடம் மறைக்க வேண்டாம்
ஆணவத்துடன் நடக்க வேண்டாம்
திமிர் பிடித்துத் திரிய வேண்டாம்!

ஊர் பேச்சைக் கேட்க வேண்டாம்
அதிகாரம் செய்ய வேண்டாம்
காதல் என்றும் மாற வேண்டாம்
என்னை விட்டுப் பிரிய வேண்டாம்!

கொஞ்சி கொஞ்சிப் பேச வேண்டும்
சண்டையிட்டால் கெஞ்ச வேண்டும்
தினமும் என்னை நினைக்க வேண்டும்
அன்பாலே கொல்ல வேண்டும்!

சொல்வதெல்லாம் கேட்க வேண்டும்
ஊரைச் சுற்றிக் காட்ட வேண்டும்
சமையல் கொஞ்சம் தெரிய வேண்டும்
வீட்டு வேலை செய்ய வேண்டும்!

காதல் மழை பொழிய வேண்டும்
புரிந்துக் கொண்டு நடக்க வேண்டும்
பொய்க்க்கோபம் கொள்ள வேண்டும்
உண்மையாக இருக்க வேண்டும்!

கேட்டதெல்லாம் செய்ய வேண்டும்
என்னுடனே இருக்க வேண்டும்
சீண்டி என்னைப் பார்க்க வேண்டும்
எனக்காக வாழ வேண்டும்!

அன்பு வேண்டும் பண்பு வேண்டும்
அறம் வேண்டும் கஞ்சம் வேண்டும்
ஆசை வேண்டும் துறவு வேண்டும்
அறிவு வேண்டும் ஆன்மீகம் வேண்டும்!

அருமை வேண்டும் பெருமை வேண்டும்
அழகு வேண்டும் அடக்கம் வேண்டும்
அகிம்சை வேண்டும் ஆரவாரம் வேண்டும்
அனைத்தும் கலந்த ஆண்துணை வேண்டும்!

4 கருத்துகள்:

தேவன் மாயம் சொன்னது…

அருமை வேண்டும் பெருமை வேண்டும்
அழகு வேண்டும் அடக்கம் வேண்டும்
அகிம்சை வேண்டும் ஆரவாரம் வேண்டும்
அனைத்தும் கலந்த ஆண்துணை வேண்டும்!///

அப்பிடிப் போடு அருவாளை!!பின்னீட்டீங்க!

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

கொஞ்ச நாள்ல படிச்சதுல்ல இது கொஞ்சம் நல்ல வித்யாசமான கவிதை...!

Tamilvanan சொன்னது…

//அனைத்தும் கலந்த ஆண்துணை வேண்டும்!//

ஒரே வ‌ரியில் "அடிமை வேண்டும்" என‌ கேட்டிருக்க‌லாம்.

து. பவனேஸ்வரி சொன்னது…

தேவன் மாயம்: நான் ஆயுதம் ஏந்துவதில்லை நண்பரே :)

வசந்த்: :)

தமிழ்வாணன்: அடிமை அல்ல நண்பரே, துணை வேண்டும்...