செவ்வாய், 29 டிசம்பர், 2009

இனியவனே!


கனவுக்குள் வந்தவனே
கண்ணிமைக்குள் புகுந்தவனே
கண்ணுக்குள் இருப்பவனே
காலமெல்லாம் நேசிப்பவனே!

காற்றாக வந்தவனே
இதயத்தில் நுழைந்தவனே
மனதுக்கு இனியவனே
என் உயிருக்கு உரியவனே!

தொலைப்பேசி அழைப்பிதனே
சிந்தனையில் துளிர்பவனே
என்னை ஆள்பவனே
நான் காணத் துடிப்பவனே!

நினைவுகளில் கலந்தவனே
நிம்மதியைக் கெடுத்தவனே
நெஞ்சினிலே வாழ்பவனே
நான் தேடும் நல்லவனே!

2 கருத்துகள்:

நசரேயன் சொன்னது…

//நெஞ்சினிலே வாழ்பவனே
நான் தேடும் நல்லவனே!//

எதாவது கடையிலே விசாரிச்சி பாருங்க

து. பவனேஸ்வரி சொன்னது…

நசரேயன்: விசாரித்துக் கொண்டிருக்கிறேன்... நீங்கள் சந்தித்தால் நான் காத்திருப்பதாகச் சொல்லுங்கள்...