செவ்வாய், 29 டிசம்பர், 2009

தாமதிக்காதே!


ஏன் மறைக்கின்றாய்
என் மீது உனக்குக் காதல்
என்பதை ஏன் மறைக்கிறாய்?
பயமா அல்லது வெட்கமா?
ஏன் இன்னும் என்னைக்
காக்க வைக்கின்றாய்?

தினம் தினம் தவிக்கின்றேன்
அனலில் புழுவாய் துடிக்கின்றேன்
நீயும் என்னைப் போலென்று
எனக்குத் தெரியாதா?
ஏன் தயங்குகின்றாய்?

நீ தாமதிக்கும்ஒவ்வொரு வினாடியும்
நான் என் நம்பிக்கையை
இழந்துக் கொண்டிருக்கின்றேன்
நான் என் நம்பிக்கையை
இழக்கும் ஒவ்வொரு நொடியும்
நீ என்னை இழக்கின்றாய்!

அன்று, இன்று, நாளை



அன்று
அமைதியாகச் சென்றுக்கொண்டிருந்த
இன்பமான எனது வாழ்வில்
புயலாக வீசினாய்!

இன்று,
புயலாக வீச வேண்டாம்
சாதாரண காற்றாகக்கூட
வீச மறுக்கின்றாயே!

நாளை,
கண்டிப்பாக ஒருநாள்
தென்றலாக நீ மாறி
என்னை நாடி வருவாய்!

இனியவனே!


கனவுக்குள் வந்தவனே
கண்ணிமைக்குள் புகுந்தவனே
கண்ணுக்குள் இருப்பவனே
காலமெல்லாம் நேசிப்பவனே!

காற்றாக வந்தவனே
இதயத்தில் நுழைந்தவனே
மனதுக்கு இனியவனே
என் உயிருக்கு உரியவனே!

தொலைப்பேசி அழைப்பிதனே
சிந்தனையில் துளிர்பவனே
என்னை ஆள்பவனே
நான் காணத் துடிப்பவனே!

நினைவுகளில் கலந்தவனே
நிம்மதியைக் கெடுத்தவனே
நெஞ்சினிலே வாழ்பவனே
நான் தேடும் நல்லவனே!

திங்கள், 28 டிசம்பர், 2009

துணை


காந்தி போல் அகிம்சாவாதி வேண்டாம்
கர்ணன் போல் கொடைவள்ளல் வேண்டாம்
கம்பர் போல் கவிச்சக்ரவர்த்தி வேண்டாம்
இராமன் போல் உத்தமச்சீலன் வேண்டாம்!

வைரமுத்து போல் கவிஞன் வேண்டாம்
தேவா போல் இசைமன்னன் வேண்டாம்
பிரபுதேவா போல் ஆட்டக்காரன் வேண்டாம்
பிரசாந்த் போல் காதல் மன்னன் வேண்டாம்!

சேது போல் பைத்தியம் வேண்டாம்
ஜெமினி போல் ரவுடி வேண்டாம்
நந்தா போல் தாய்ப்பாசம் வேண்டாம்
நன்றாக நடிக்கவும் வேண்டாம்!

குடிப்பழக்கம் தினமும் வேண்டாம்
புகைப்பழக்கம் என்றும் வேண்டாம்
பெண் பழக்கம் அறவே வேண்டாம்
கொச்சை வார்த்தைப் பேச வேண்டாம்!

பொய்கள் பல சொல்ல வேண்டாம்
எதையும் என்னிடம் மறைக்க வேண்டாம்
ஆணவத்துடன் நடக்க வேண்டாம்
திமிர் பிடித்துத் திரிய வேண்டாம்!

ஊர் பேச்சைக் கேட்க வேண்டாம்
அதிகாரம் செய்ய வேண்டாம்
காதல் என்றும் மாற வேண்டாம்
என்னை விட்டுப் பிரிய வேண்டாம்!

கொஞ்சி கொஞ்சிப் பேச வேண்டும்
சண்டையிட்டால் கெஞ்ச வேண்டும்
தினமும் என்னை நினைக்க வேண்டும்
அன்பாலே கொல்ல வேண்டும்!

சொல்வதெல்லாம் கேட்க வேண்டும்
ஊரைச் சுற்றிக் காட்ட வேண்டும்
சமையல் கொஞ்சம் தெரிய வேண்டும்
வீட்டு வேலை செய்ய வேண்டும்!

காதல் மழை பொழிய வேண்டும்
புரிந்துக் கொண்டு நடக்க வேண்டும்
பொய்க்க்கோபம் கொள்ள வேண்டும்
உண்மையாக இருக்க வேண்டும்!

கேட்டதெல்லாம் செய்ய வேண்டும்
என்னுடனே இருக்க வேண்டும்
சீண்டி என்னைப் பார்க்க வேண்டும்
எனக்காக வாழ வேண்டும்!

அன்பு வேண்டும் பண்பு வேண்டும்
அறம் வேண்டும் கஞ்சம் வேண்டும்
ஆசை வேண்டும் துறவு வேண்டும்
அறிவு வேண்டும் ஆன்மீகம் வேண்டும்!

அருமை வேண்டும் பெருமை வேண்டும்
அழகு வேண்டும் அடக்கம் வேண்டும்
அகிம்சை வேண்டும் ஆரவாரம் வேண்டும்
அனைத்தும் கலந்த ஆண்துணை வேண்டும்!

உனக்கே உனக்காக!


எந்தன் நெஞ்சினிலே ஏக்கம்
உன் நினைவுகளின் தாக்கம்
காணாத ஏக்கங்கள்
கட்டெறும்பாய் கடிக்கின்றன!

ஏங்கி ஏங்கி
இருதயம் நொந்துவிட்டது
உன்னை எதிர்ப்பார்த்து பார்த்து
பார்வை மங்கிவிட்டது!

உன்னை நினைத்து நினைத்து
உள்ளம் மெலிந்துவிட்டது
உன் நினைவுகளைச் சுமந்து சுமந்து
உடல் இளைத்துவிட்டது!

கலங்காமல் காத்திருக்கிறேன்
சலிக்காமல் பார்த்திருக்கிறேன்
இன்னமும் உயிர் வாழ்கிறேன்
உனக்கே உனக்காக!

வியாழன், 24 டிசம்பர், 2009

மறக்க முடியவில்லை


சந்தித்த போதெல்லாம்
சிந்திக்கவே இல்லை
சிந்திக்கும் வேளையிலோ
சந்திக்க வாய்ப்பில்லை!

ஓரக்கண்ணால் பார்த்திருந்து
அமைதியாக புன்னகைத்து
கண்ணாலே பேசினேனே
அது உனக்குப் புரியவில்லை?

பொய் வேசம் வெளியிலே
மெய்க் காதல் மனதிலே
உன் மீது ஆசையென்று
இறுதிவரை சொல்லவில்லை!

எத்தனையோ ஆசைகள்
அத்தனையும் கவிதைகள்
சொல்ல நினைக்கையிலே
என் வசம் நீ இல்லை!

உன்னைக் காணாமல்
இதயத்தில் தவிப்பு
கண்களிலே ஏக்கம்
அதை நீ அறியவில்லை!

என் மீது விருப்பமில்லை
அது எனக்குத் தெரியவில்லை
முதல் காதல் நெஞ்சினிலே
மறக்கவே முடியவில்லை!

ஞாயிறு, 13 டிசம்பர், 2009

வாழ்க்கையே சாபமா?


தனிமை
ஒன்றுமே இல்லாதது போல்
இதயத்தில் வெறுமை!
வாழ்க்கையே சாபமா
நான் பூமிக்குப் பாரமா?

சோகம்
ஒவ்வொரு விடியலும் சோகம்
தூங்காத கண்களும் நோகும்!
நான் வாழத்தான் வேண்டுமா
வாழ்க்கைதான் இனிக்குமா?

ஏக்கம்
என் இரவுக்கு
இல்லையே தூக்கம்!
எனக்குள்ளே ஏன் இந்த தாக்கம்
என் துன்பத்தை எதுதான் தீர்க்கும்?

வெறுமை
பார்க்கும் இடமெல்லாம் கருமை
வாழ்வில் இல்லையே இனிமை!
என் வாழ்க்கையே வேதனை
ஏன் இந்தச் சோதனை?