காதலில் தோன்றி
சாதலில் முடியும் வாழ்க்கை
நடுவே எத்தனை ஆர்ப்பாட்டம்?
ஆசை, இன்பம், துன்பம், போராட்டம்
அனைத்திலும் திருப்தியின்மை
வாழ்க்கையின் நோக்கம்தான் என்ன?
வாழ்க்கை என்பதன் பொருள்தான் என்ன?
அகராதியிலாவது விடை கிடைக்குமா?
ஏன் பிறந்தோம்
எதற்காக வாழ்கிறோம்
எதற்காக இறக்க வேண்டும்?
நமது பிறப்பின் நோக்கம்தான் என்ன?
சொந்தங்கள் என்பவை யாவை?
எத்தனை கேள்விகள் பிறந்தாலும்
‘தெரியாது’ என்ற பதிலே கிடைக்கிறது
ஏனோ இப்படி?
குழந்தையாய் பிறந்து
குமரியாய் குதூகலமாய் வளர்ந்து
பெண்ணாய் பூப்பெய்து மலர் சூடி
திருமணம் செய்து குழந்தைப் பெற்று
முதுமைத் தட்டி கூன் விழுந்து
நோயில் வாடி கல்லறைச் செல்லும்
வாழ்க்கையில் எதற்கு ஆர்ப்பாட்டம்?
சாதலில் முடியும் வாழ்க்கை
நடுவே எத்தனை ஆர்ப்பாட்டம்?
ஆசை, இன்பம், துன்பம், போராட்டம்
அனைத்திலும் திருப்தியின்மை
வாழ்க்கையின் நோக்கம்தான் என்ன?
வாழ்க்கை என்பதன் பொருள்தான் என்ன?
அகராதியிலாவது விடை கிடைக்குமா?
ஏன் பிறந்தோம்
எதற்காக வாழ்கிறோம்
எதற்காக இறக்க வேண்டும்?
நமது பிறப்பின் நோக்கம்தான் என்ன?
சொந்தங்கள் என்பவை யாவை?
எத்தனை கேள்விகள் பிறந்தாலும்
‘தெரியாது’ என்ற பதிலே கிடைக்கிறது
ஏனோ இப்படி?
குழந்தையாய் பிறந்து
குமரியாய் குதூகலமாய் வளர்ந்து
பெண்ணாய் பூப்பெய்து மலர் சூடி
திருமணம் செய்து குழந்தைப் பெற்று
முதுமைத் தட்டி கூன் விழுந்து
நோயில் வாடி கல்லறைச் செல்லும்
வாழ்க்கையில் எதற்கு ஆர்ப்பாட்டம்?
15 கருத்துகள்:
\\குழந்தையாய் பிறந்து
குமரியாய் குதூகலமாய் வளர்ந்து
பெண்ணாய் பூப்பெய்து மலர் சூடி
திருமணம் செய்து குழந்தைப் பெற்று
முதுமைத் தட்டி கூன் விழுந்து
நோயில் வாடி கல்லறைச் செல்லும்
வாழ்க்கையில் எதற்கு ஆர்ப்பாட்டம்?\\
மிக அழகு.
நட்புடன் ஜமால் கூறியது...
//மிக அழகு.//
கருத்துக்கு நன்றி நண்பரே.
ஏன் ஆர்ப்பாட்டம்? இதை ஆர்ப்பாட்டம் இல்லாமல் சொல்லிருக்கிறீர்கள்
வாழ்த்துக்கள்
//வாழ்க்கையின் நோக்கம்தான் என்ன?
வாழ்க்கை என்பதன் பொருள்தான் என்ன?
அகராதியிலாவது விடை கிடைக்குமா?//
என்ன கவிதை முழுதும் ஒரே கேள்வியா இருக்கே...ஆனாலும் அதற்கு பதில் உங்கள் கவிதையிலேயே இருக்கு நீங்களே கண்டு பிடித்துக் கொள்ளுங்கள்...
வினாவினால் பல
வினாக்களுக்கு
விடை சொல்ல
விழைக்கிறது தங்களின் பதிவு
வாழ்த்துகள்
ஒரே அவதாரம் எடுத்து வீழ்பவர்கள் செய்யும் ஆர்பாட்டம் இருக்கும் போது பெண்ணாய் பிறந்து ஆர்பாட்டம் செய்வது தவறில்லைதானே
குழந்தையாய் பிறந்து
குமரியாய் குதூகலமாய் வளர்ந்து
பெண்ணாய் பூப்பெய்து மலர் சூடி
திருமணம் செய்து குழந்தைப் பெற்று
முதுமைத் தட்டி கூன் விழுந்து
நோயில் வாடி கல்லறைச் செல்லும்
வாழ்க்கையில் எதற்கு ஆர்ப்பாட்டம்?
நல்ல இருக்கு இந்த வரிகள்
Everyday happiness is the sunshine of the day....enjoy the life through 6 senses...this is a playground...play with disciplin!!!
அபுஅஃப்ஸர் கூறியது...
//ஏன் ஆர்ப்பாட்டம்? இதை ஆர்ப்பாட்டம் இல்லாமல் சொல்லிருக்கிறீர்கள்
வாழ்த்துக்கள்//
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.
புதியவன் கூறியது...
//என்ன கவிதை முழுதும் ஒரே கேள்வியா இருக்கே...ஆனாலும் அதற்கு பதில் உங்கள் கவிதையிலேயே இருக்கு நீங்களே கண்டு பிடித்துக் கொள்ளுங்கள்...//
வாழ்க்கையே கேள்விக்குறி தானே நண்பரே? எனது கவிதையிலேயே விடை இருக்கிறதா? :) தெரிந்தால் சொல்லவும்...
திகழ்மிளிர் கூறியது...
//வினாவினால் பல
வினாக்களுக்கு
விடை சொல்ல
விழைக்கிறது தங்களின் பதிவு
வாழ்த்துகள்//
கருத்துக்கு நன்றி நண்பரே.
நான் கூறியது...
//ஒரே அவதாரம் எடுத்து வீழ்பவர்கள் செய்யும் ஆர்பாட்டம் இருக்கும் போது பெண்ணாய் பிறந்து ஆர்பாட்டம் செய்வது தவறில்லைதானே//
ஒரே அவதாரம் எடுத்து ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் என்று யாரைக் குறிப்பிடுகின்றீர் ஐயா?
கவின் கூறியது...
//குழந்தையாய் பிறந்து
குமரியாய் குதூகலமாய் வளர்ந்து
பெண்ணாய் பூப்பெய்து மலர் சூடி
திருமணம் செய்து குழந்தைப் பெற்று
முதுமைத் தட்டி கூன் விழுந்து
நோயில் வாடி கல்லறைச் செல்லும்
வாழ்க்கையில் எதற்கு ஆர்ப்பாட்டம்?
நல்ல இருக்கு இந்த வரிகள்//
நீங்கள் கூறினால் நன்றாகத்தான் இருக்கும் :) நன்றி நண்பரே.
Shan Nalliah / GANDHIYIST கூறியது...
//Everyday happiness is the sunshine of the day....enjoy the life through 6 senses...this is a playground...play with disciplin!!!//
வாழ்க்கை என்பது விளையாட்டுத்திடல். அதில் நெறியோடு விளையாட வேண்டும் என்று அழகாகக் கூறியுள்ளீர். தங்கள் கருத்துகளுக்கு நன்றி ஐயா.
ஆண்பிறப்பை தான் ஒரேஅவதாரம் என்று குறிப்பிட்டேன்
கருத்துரையிடுக