திங்கள், 23 பிப்ரவரி, 2009

முடிந்தால் முடியும்!


மன்ணை எண்ண முடிந்தால்
அதனையும் உண்ண முடிந்தால்
நிலவைத் தொட முடிந்தால்
அதனை பூமிக்குள் நுழைக்க முடிந்தால்
சூரியனை நெருங்க முடிந்தால்
அதனை குளிர்ச்சியாக்க முடிந்தால்
நட்சத்திரத்தை பறிக்க முடிந்தால்
அதனை கூந்தலில் சூட முடிந்தால்
நிச்சயமாக (?) என்னாலும் – உன்னை
மறக்க முடியும்!

8 கருத்துகள்:

புதியவன் சொன்னது…

//நிச்சயமாக (?) என்னாலும் – உன்னை
மறக்க முடியும்!//

மிக அருமை...மறக்க முடியாது என்பதை எவ்வளவு அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்...

து. பவனேஸ்வரி சொன்னது…

புதியவன் கூறியது...
//நிச்சயமாக (?) என்னாலும் – உன்னை
மறக்க முடியும்!//

//மிக அருமை...மறக்க முடியாது என்பதை எவ்வளவு அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்...//

தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே.

அப்துல்மாலிக் சொன்னது…

நல்ல வர்ணனை
வரிகள் அழகு
வாழ்த்துக்கள்

து. பவனேஸ்வரி சொன்னது…

அபுஅஃப்ஸர் கூறியது...
//நல்ல வர்ணனை
வரிகள் அழகு
வாழ்த்துக்கள்//

கருத்துக்கு நன்றி நண்பரே.

நட்புடன் ஜமால் சொன்னது…

ஆஹா!

முடியாது என்னும் -ve விடயத்தை முடிந்தால் என்று சொல்லி உள்ளீர்கள்

இரசித்தோம்.

நான் சொன்னது…

அத்தனையும் அழகாக சொல்லிவிட்டு இறுதியில் மறக்கமுடியாது என்று தெளிவாக்கிவிட்டீர்கள்
வாழ்த்துகள்

து. பவனேஸ்வரி சொன்னது…

நட்புடன் ஜமால் கூறியது...
//ஆஹா!

முடியாது என்னும் -ve விடயத்தை முடிந்தால் என்று சொல்லி உள்ளீர்கள்

இரசித்தோம்.//

தங்கள் ரசனைக்கு நன்றி நண்பரே.

து. பவனேஸ்வரி சொன்னது…

நான் கூறியது...
//அத்தனையும் அழகாக சொல்லிவிட்டு இறுதியில் மறக்கமுடியாது என்று தெளிவாக்கிவிட்டீர்கள்
வாழ்த்துகள்//

:) கருத்துக்கு நன்றி ஐயா.